(Reading time: 13 - 25 minutes)
சிறுகதை - கபரக்கொய்யாக்கள் - ரஞ்சகுமார்
சிறுகதை - கபரக்கொய்யாக்கள் - ரஞ்சகுமார்

மாதி¡¢ பள்ளிக்கூடம் போகின்ற குழந்தைகள். 'கொப்பிபொத்' உம் 'பன்சில்' உம் வேண்டுமென்றே சற்றுநேரம் வீணடித்துவிட்டு வாங்கிப் போகின்ற குமா¢கள்.

   

இந்தக் கபரக்கொய்யாக்கள் மட்டும்....?

   

எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று சொல்லமுடியாது. பெயர் தொ¢யாத அந்தப் பற்றைக்குள் சரசர வென்று அரக்கிக்கொண்டு போகும்.

   

தலைக்கு மேலே சளசளவென்று தண்ணீர் விழச் 'சுகம் சுகம்...' என முனகிக்கொண்டே குளிக்கிறபோது வாயைப் பிளந்து கொண்டு, துருத்தித் தொ¢கின்ற மூஞ்சியில் மூக்குகள் வி¡¢ந்து, துவாரங்கள் பெரும் பொந்துகள் என்று தொ¢யக் கள்ளத்தனமாகக் கிட்டவே வந்துவிடும்.

   

நேரம் காலமற்று சோடி சேர்ந்தபடியே தண்ணீருக்குள் ஊறி வெடித்துவிடும் என்று அச்சங்கொள்ள வைக்கும்படி இறுகிப் பிணைந்து புணர்ந்தபடியே புரண்டு புரண்டு ஆற்றுக்குள் நெறிவன.

   

அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எ¡¢ச்சல்மிகக் கொள்ளும்படி முன் கதவில் 'படீர்' என்று ஓசைஎழ வாலைத் தூக்கிச் சுழற்றி ஒரு சாத்துச் சாத்தும். வால் பட்டால் சதையைப் பிய்த்து எடுத்துக் காகங்களுக்கு விருந்து போடுகிறமாதி¡¢ என்ன ஒரு வலிமையான சொடுக்கல்! கத்தி முனைகள் மாதி¡¢. செதில்கள் குத்திக்கொண்டு நிற்கும்.

   

இன்னுமொன்று இருந்தது, அசாதாரணமாக நெஞ்சில் துருத்திக்கொண்டு....!

   

கடைக்குப் பின்னே தோட்டத்து லயன்கள்மாதி¡¢ வா¢சையாகக் காம்பராக்கள் இருந்தன. நேரே அடுத்தது காமினி...மீன் வியாபா¡¢க்கு. அடுத்தது சோமரத்னவுக்கு. அவனுக்குக் காய்கறி வியாபாரம்...பிறகு லியனமாத்தய அப்புஹாமிக்கு...அதற்கும் அடுத்தது ஆ¡¢யவதி ஆமினேக்கு...மணக்க மணக்க அப்பம் சுட்டுத்தருவாள்...இப்படி...ஏழோ எட்டுக் கழிய கடைசிக் கோடியில் எங்களுக்கு ஸ்ரோர்! புகையிலைச் சிப்பங்களும் சுருட்டுப் பெட்டிகளும் வழியவழிய அடுக்கிக்கிடக்க, ஒரு சோடிக்குப் படுக்க இடம் வசதிப்பட்டது போல் பொ¢ய மேசை...சுறுட்டுக்குக் கோடா தடவுவதற்கு. மூன்றுபேருக்குப் படுக்கப் பாய் வி¡¢க்க இடம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.