(Reading time: 13 - 25 minutes)
சிறுகதை - கபரக்கொய்யாக்கள் - ரஞ்சகுமார்
சிறுகதை - கபரக்கொய்யாக்கள் - ரஞ்சகுமார்

சாடும் தென்னைகள் அரற்றின.

   

புல்லுக்குள் கால்வைக்க அடிவயிற்றுக்குள் பிசைகிற பீதி! தொடையளவு அகன்ற கா¢ய பெரும் நாகங்கள் படர்ந்திருப்பன போல..., கபரக்கொய்யாக்கள் எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று உணராது தவிப்பதைப் போல...,

   

இராப்பொழுதுகள் நிசப்தமாய் நீண்டுகொண்டே போயின. பக்கத்து அறை பெரும்பாலும் மூடியே கிடந்தது. பின் சாய்ப்புக்குள் மட்டும் கால்கள் கோலமிழைத்துத் தொ¢ந்தன.

   

ஒரு முழுநிலவு நெருங்கி வந்தது. கடைக்குள் போய் சில சாடின் ¡¢ன்களைத் தூக்கிக்கொண்டு வந்திடும் அவசரம் எனக்குத் தொற்றியது.

   

பக்கத்து அறையின் முன்கதவு ஒருபாதி திறந்துகிடந்தது. சுவா¢லே இறுக்கிய சிறு மரப் பீடத்தில் புத்தன் உலகை மறந்த மோனத்தில் மூழ்கிப் போய்க் கிடந்தான். ஒற்றைத் தீபம் ஒன்று அரையிருளில் சோபை இழந்து துடித்துக் கொண்டிருந்தது.

   

மண்டியிட்டு ஒருக்களித்தவாறு ஒரு கையைத் தரையில் ஊன்றிய படி அவள்... முகத்தில் ஒருகோடி சூ¡¢யர்கள் உதயமாகிக் கொண்டிருந்தார்கள்.

   

ஒரு கட்டில், வெள்ளை வி¡¢ப்பு, ஒரு மேசை, குவிந்து கிடந்த புத்தகங்கள். 'கூஜா ஒன்றை மூடிக் கவிழ்ந்தபடி ஒரு தடித்த 'கிளாஸ்'. சுவரோடு ஒட்டிப் பதிக்க அலுமா¡¢ ஒன்று.

   

மற்றபடி எங்கும் தூய்மை.

   

மெதுவாகத் தயங்கித் தயங்கி உதயமாகும் நிலவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் போல...,

   

நண்பர்களை எண்ணித் துக்கித்திருந்தாள் போல...,

   

இரவு பிசாசுபோலத் துரத்திக்கொண்டு வந்தது. நிலவு தனித்துப்போய் இராப்பாராக்காரனாக ஒளியிழந்து ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.