மீந்திருந்தது தரையில். பின்னால் ஒரு சாய்ப்பு இறக்கி காட்டுக் கம்புகளாலும் பச்சை மண்ணாலும் 'அறுக்கை' பண்ணித் தந்திருந்தார்கள். ஏறக்குறைய இதேமாதி¡¢ பக்கத்து அறைக்குப் பின்னாலும் ஒரு சாய்ப்பு இறங்கியிருந்தது. தூய்மையான ஆற்றுமணல் சொரசொரவென்று பரப்பியிருந்தது. அதில் கோலமிழைத்தது போல ஒரு அழகிய பாதங்கள் நெடுகிலும் படர்ந்து இருந்தன. தொட்டுக் கண்களில் ஒற்றி ஒருகணம் மூடி அனுபவிக்கச் சொல்லும்படியாக.
சுற்றிலும் அரைவட்டமாக புல்லுச் செதுக்கியிருந்தது. தென்னைக்கும் சாய்ப்பு உச்சிக்குமாக ஒரு 'வயர்' ஓடியது, இளைய பெண்ணொருத்தியின் ஆடைகள் பெரும்பாலும் அதில் வெயில் குளித்தன.
இரவுகள் முற்றத் தொடங்கும்போது சுருட்டுக்கு கோடாதடவ வேண்டும். "முணுக் முணுக்..." என்று மண்ணெண்ணெய்ப் புகையினைக் கக்கிக்கொண்டு விளக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அருள் சுருட்டுப் புகையுடன் சேர்த்து பொய்புழுகுகளையும் அநாயாசமாக ஊதித் தள்ளிக்கொண்டிருக்க...கைகள் பரபரவென்று சுருட்டுக் கட்டுகளைப் பி¡¢த்துப் பி¡¢த்து-...கோடாச் சட்டிக்குள் தோய்த்துத்...தோய்த்து....
இருந்தாற் போல இரவின் நிசப்தத்தைத் தொலைத்து விட்டு ஒரு பாடல் வரும். "ஹ¤ம்" என்று கூடவே சுருதி சேர்க்கிற ஆர்மோனியம் இழையும். மண்ணெண்ய்ப்புகை மயங்கி மயங்கிச் சுழலும், சுவர்களும் செவிகளுக்குப் பின்னே கைகளைக் குவிப்பதெனத் தோன்றும் புகையிலைச் சிப்பங்களும் சுருட்டுப் பெட்டிகளும் மரத்துப்போய் பெரும் கரு நிழல்களைச் சுவா¢லே படியவிடும்.
நெலா கண்ன பா(?)
மகே அத்த திகெ நா(?)
அனே !ஐ தவ மல் பிப்பிங்!
சீறும் நாகப் படத்தின் கவர்ச்சியென ஒரு குரல் அழகாகக் கொலைசெய்யும். 'சொள சொள' எனத் தலையை முத்தமிட்டுக் கழிந்து போகும் நீரென சுவர்களைத் தழுவி