தேவர்கள் கனிகொண்டு துள்ளினர். விழிகளில் விஷக்கிறக்கம்.
ரதிதேவி ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள். தன் நாதன் தோள்களில் சாய்ந்தாள்.
கீழே பூமியில்; மேனகை முனிவனை விழுங்கிக் கொண்டிருந்தாள்.
முனிவனது விரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. ஈவிரக்கமற்ற அவனது உண்மைதேடல் தளர்த்தப்பட்டது. ஒரேவிதமான சலிப்பூட்டும் தடத்திலே அவனது வாழ்க்கை செல்லலாயிற்று. திகட்டும் வரை மேனகையை அவன் தழுவிக் கிடந்தான்.
ஞானத்தை எய்துவதற்கு பதில், குழந்தையை ஏந்த வேண்டிய வனானான் முனிவன்!
முனிவனின் காய்த்துப் போன கரங்களில் குழந்தை வீரிட்டழுதது. விதி சிரித்தது. கானகம் மானிட வாழ்வின் விசித்திரங்களை தா¢சித்ததில், பெருமூச்செறிந்து ஓய்ந்தது.
மேனகைக்கு முனிவனிடம் சலிப்புத் தட்டிற்று. முனிவனது தழுவல்களில் முன்புபோல மூழ்கடிக்கும் ஆவேசம் இருக்கவில்லை. தவிர, தேவலோகத்தின் செளகர்ய வாழ்வு எங்கே, கிழங்கையும், கனியையும் புசித்து தர்ப்பையின் மீது உறங்கும் இந்த மானிடன் எங்கே?
போகப்போக முனிவனின் உடலில் இன்ப வேட்கை குன்றிற்று. ஆண்டாண்டு காலமாக அடக்கிவைத்திருந்த இந்திரியங்கள் பீரிட்டுப் பாய்ந்து சென்றதும், முனிவனுக்கு பெண்ணைக் கூடுவதில் ஒருவிதமான யந்தி¡£கப் பாங்கு மேலோங்கிற்று. மேனகையின் மேனியில் புதுமை எதுவுமில்லாமல் போவதாகத் தொ¢ந்தது. அவள் ஒர சாதாரண பெண்ணே போன்று தோன்றினாள். அவளைக் காண்பதில் சலிப்பும், வெறுப்பும் தோன்றியது.
முனிவன் 'திருதிரு' வென விழித்தான்.
வீணை ஒலி தூரே கேட்டது. நாதனின் மிதியடிகளின் ஓசையும் கலந்து வந்தது.
கிண்டலுக்கும், கலகத்துக்கும் பெயர் பெற்ற நாரதன்...