முனிவன் தனது பயணத்தை மீண்டும் மிக நிதானத்துடன் ஆரம்பித்தான். மிகவடர்ந்த கானகங்களையும் பனிபடர்ந்த மலைகளையும் நோக்கி அவன் சென்றான்.
மேனகை அவன் சென்ற திக்கை நோக்கி சிரம் தாழ்த்தி ஒரு முறை தொழுதாள். அவனது பாததூளியை எடுத்து சிரசில் தா¢த்துக் கொண்டு, பிரகாசமான ஒரு மின்னலுடன் மறைந்தாள்.
நிராதரவாக விடப்பட்ட குழந்தை அழுதது. வாழ்க்கை எதிரே நின்று அதைப் பயமுறுத்தியது. அழட்டும்! பூமியில் பிறந்தவர்கள் அழாமல் இருத்தல் கூடுமா?
விசுவாமித்திரனின் உறுதி மிக்க பயணத்தைக் கண்டு தேவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். ரிஷிகள் இடிந்தனர்.
"ஹே!...முனிசிரேஷ்ட, உனது இஷ்டசித்தியை நீ அடைவாய்" என ஒரு அசரீரி முழங்கிற்று.
தேவலோகம்.
இறைவன் முகத்தில் சதா குமிண்சிரிப்பு. கண்களில் விஷக்கிறக்கம்.
இறைவிக்கு ஒரே வியப்பு. கூடவே சந்தேகம்.
"நாதா, தாங்கள் முனிவனுக்கு உதவி செய்தீர்களா, அல்ல தேவர்களுக்கா?"
"யாருக்கும் எனது உதவி தேவையில்லை, உபத்திரவமும் தேவையில்லை. அவரவர் அவரவருக்குரிய பாதையில் செல்லட்டும். இடையிடையே நான் கொஞ்சம் விளையாடுவேன். அதிலொரு இன்பம்! பொழுது போகாதே!!" என அலுத்துக்கொண்டான் இறைவன்.
நிசப்தம்.
-----------------------------
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.