(Reading time: 13 - 25 minutes)
சிறுகதை - என் உயிரே! - பிந்து வினோத்
சிறுகதை - என் உயிரே! - பிந்து வினோத்

   

அது ஒரு செய்தி அலைவரிசை... பெரிய எழுத்துக்களில் அந்த செய்தி மின்னிக் கொண்டிருந்தது...

   

Indian army Major killed in Kashmir!

   

Major Dushyanth was killed and three others were injured in a gun battle between army and terrorists…

   

(இந்திய ராணுவ மேஜர் காஷ்மீரில் கொல்லப்பட்டார்!

   

தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மேஜர் துஷ்யந்த் கொல்லபட்டார். மேலும் மூவர் காயம் அடைந்தனர்.)

   

செய்தியை வாசித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் அருகே துஷ்யந்தின் பழைய புகைப்படம் ஒன்றும் இருந்தது...

   

நம்ப முடியாமல் பார்த்தவள், அப்படியே மயங்கி சோபாவில் சரிந்தாள்.

   

இரண்டு வாரங்களாக அதே அறையில் முடங்கி கிடக்கிறாள் மித்ரா... கண்களில் கண்ணீர் தீர்ந்து போனதாலோ என்னவோ கண்கள் வறண்டு போய் இருந்தது... அவளை அந்த அறையில் இருந்து வெளியே அழைத்து வர அவளின் அம்மா கண்மணியும், கணவனின் அம்மா கிரிஜாவும் எத்தனையோ முயன்று தோற்று போய் இருந்தார்கள்...

   

கணவன்... கணவனின் நினைவில் மீண்டும் வறண்டு போய் இருந்த கண்களில் ஈரம் தோன்றியது... அவளுடைய கணவன் மேஜர் துஷ்யந்த் இறந்து இரண்டு வாரங்களாகி விட்டது. திவீரவாதிகள் கடத்தி வைத்திருந்த குழந்தைகளை காக்கும் போது நடந்த துப்பாக்கி சண்டையில் அவளின் கணவன் குழந்தைகளை காப்பாற்றி தன் உயிரை பலி கொடுத்திருந்தான்.

   

அவளால் இன்னமும் அந்த செய்தியை நம்ப தான் முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.