(Reading time: 13 - 25 minutes)
சிறுகதை - என் உயிரே! - பிந்து வினோத்
சிறுகதை - என் உயிரே! - பிந்து வினோத்

   

“எந்த ஹெல்ப் வேணும்னாலும் கூப்பிடுங்க.”

   

“ம்ம்ம்...”

   

மதிய உணவை உண்ண ஆரம்பித்த வேளையில் அழைப்பு மணி ஒலித்தது... கதவை திறந்த கிரிஜா வெளியே நின்ற மஞ்சுவை கேள்வியாக பார்த்தாள்.

   

“நான் அடுத்த பிளாட்...”

   

“ஓ, வாங்க உள்ளே வாங்க...”

   

பிகு செய்யாமல் உள்ளே வந்தவள்,

   

“சாப்பிட ஆரம்பிச்சாச்சா? உங்களுக்காக தான் எடுத்துட்டு வந்தேன்...” என்றபடி மித்ராவின் அருகில் அந்த பெரிய கிண்ணத்தை வைத்தாள்.

   

“இது எங்க ஊர் சமையல்... ஈரல் மசாலா... வயித்தில குழந்தை இருக்கும் போது ரொம்ப நல்லதுன்னு சொல்வாங்க... காலையிலே உங்களை பார்த்தேனா அது தான் ஞாபகம் வந்துது எடுத்துட்டு வந்தேன்... எடுத்து சாப்பிடுமா, ரொம்ப நல்லது...”

   

“இல்லை... பரவாயில்லை...”

   

“டோன்ட் வரி! நான் எப்போதும் ரொம்ப ஹைஜினிக் பார்ப்பவள்... பார்த்து பார்த்து சுத்தமா தான் சமைப்பேன்... அதுவும் இன்னைக்கு ரொம்ப கேர்புலா சமைச்சேன்...”

   

“தேங்க்ஸ்...”

   

மேலும் ஒன்றிரண்டு நாட்கள் சென்றன... மித்ரா இன்னமும் முழுவதுமாக மனம் தேறவில்லை! ஆனால் குழந்தையை மனதில் கொண்டு எழுந்து நடமாட தொடங்கி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.