(Reading time: 13 - 25 minutes)
சிறுகதை - என் உயிரே! - பிந்து வினோத்
சிறுகதை - என் உயிரே! - பிந்து வினோத்

இரவில் வானில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன... இறந்தவர்கள் வானில் நட்சத்திரமாக நம்மை பார்ப்பார்களாமே! துஷ்யந்த் நீயும் இந்த கூட்டத்தில் இருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாயா?

   

நீ எப்போதும் என் மனதில் வாழ்கிறாய் என் உயிரே...

   

உன் நினைவுகளை மனதில் சுமந்து உன் குழந்தையை பெற்று உனக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் வளர்ப்பேன் என் காதல் கணவனே....

   

மாலையில் சாகரும், கங்காவும் சொன்னது மனதில் ஓடியது... துஷ்யந்தை நினைத்து பெருமையாக இருந்தது...

   

நாட்டையே நாசமாக்கும் நச்சு காடுகளை அழிக்கும் போது

   

பறவை கூடுகளும் சேர்ந்து அழிவது தவிர்க்க இயலாத தர்மம்

   

தயங்கி நிற்பதே அதர்மம்

   

எப்போதோ கேட்ட கவிதை மனதில் ஓடியது...

   

எத்தனை வேறுபாடுகள் தோன்றினாலும், மனித நேயமும், நாட்டு பற்றும் நம்மை விட்டு போக தான் இல்லை... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய வடிவில் அதை உணர்ந்துக் கொண்டே தான் இருக்கிறாள் அவள்...

   

துஷ்யந்த் போன்ற எத்தனையோ பேரின் தியாகம் தான் நாம் சுதந்திரமாக நடமாட காரணமாக இருக்கிறது...

   

மெதுவாக நடந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள், வயிற்றில் உணர்ந்த சிறு அசைவில் நிமிர்ந்து அமர்ந்தாள்... ஒரு சில நிமிடங்கள் காத்திருந்தவள் எந்த அசைவும் தோன்றாததால், மெல்ல,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.