(Reading time: 13 - 25 minutes)
சிறுகதை - என் உயிரே! - பிந்து வினோத்
சிறுகதை - என் உயிரே! - பிந்து வினோத்

   

ஆனால் இப்போது உயிரும் இல்லாமல், சுவாசமும் இல்லாமல், வெறும் நினைவினால் வாழ்கிறாளே...

   

மனதில் பொங்கிய வருத்தங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடமாட தொடங்கினாள் அவள்...

   

அன்று வேலையில் இருந்து திரும்பியவள், ஹாலில் அமர்ந்திருந்த புதியவர்களை கேள்வியுடன் பார்த்தபடி உள்ளே வந்தாள். அங்கே துஷ்யந்துடன் அதே ரேஜிமேன்ட்டில் இருந்த பார்த்திபனும் இருந்தான்.

   

“எப்படி இருக்கீங்க சிஸ்டர்?”

   

“ம்ம்ம்... இருக்கேன்...”

   

“இவர் சாகர், இது கங்கா! இது இவங்க குழந்தை ரியா! அன்னைக்கு இந்த குழந்தையை காப்பாத்தும் போது தான்...”

   

மித்ராவின் மனதில் கத்தியால் கீறியது போல் வலித்தது...

   

நான்கு வயதான அந்த குழந்தை அவளை பார்த்து சிரித்தது...

   

கங்கா மித்ராவின் கைகளை பிடித்துக் கொண்டு பேசினாள்...

   

“Your husband saved more than 50 kids that day. He is a true warrior. Thank you very much sister!”

   

“ம்ம்ம்...”

   

மேலே எதுவும் சொல்ல அவளால் முடியவில்லை... தொண்டை அடைத்துக் கொண்டது!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.