(Reading time: 26 - 52 minutes)

எனக்காக பிறந்தாயே எனதழகி – புவனேஸ்வரி கலைசெல்வி

This is entry #06 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

கையில்  அவனின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே இதழில் புன்னகையை தவழ விட்டு அந்த ஏர்போட்டில் அமர்ந்திருந்தாள்  அஞ்சனா . அவளின் காதல் நினைவுகள் கண்முன் விரியும் முன்னே அழகாய் சிணுங்கியது அவளின் கைப்பேசி .

" மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ ? " என்று அவன் குரலில் இசைத்து அழைத்தது அவளின் கைப்பேசி . அவனா ? இந்த பாடலை பாடிய பாடகர் மரியாதைக்குறியவர்  அல்லவா ? ஆமாங்க, ஆனால் இது அவளின் மனம் கவர்ந்தவன் ஒரு நாள் காலேஜில் பாடியபோது அவனுக்கு தெரியாமல் அவள் ரெகார்ட் செய்து வைத்திருந்தது .... போனின் திரையில் " அக்கா " என்று தெரிந்ததும் உற்சாகமாய் போனை எடுத்தாள்  அஞ்சனா ...

" அக்கா "

enakkaga piranthaye enathazhagi

" அஞ்சு .. கெளம்பிட்டியா ? எதுவும் சாப்பிட்டியா இல்லையா ? டிக்கெட், பாஸ்போர்ட் எல்லாம் சரியா இருக்கா ? நான் சென்னை ஏர்போட்ல உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன் டா.. பத்திரமா தானே இருக்க நீ ? "

" ஹெலோ ஹெலோ அக்கா செல்லம் , கொஞ்சம்மூச்சு விட்டுகொங்க .. யம்மாடியோவ் ... டாக்டர்னா பொறுமை அவசியம்னு சொல்வாங்க .. நீ பொறுமைன்னா  கிலோ என்ன விலைன்னு கேட்ப போல ...."

"போடி வாயாடி .. கேட்ட இத்தனை கேள்வியில் ஒண்ணுக்காவது பதில் சொன்னியா நீ ? நீயெல்லாம் எப்படித்தான் டீச்சருக்கு  படிச்சியோ "

" சரி சரி அவமானப் படுத்தாதே சாதனா.. நான் ரெடி ஆகிட்டேன் .. சாப்பிட்டாச்சு .. பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் பத்திரமா இருக்கு .. ரெண்டு வருஷம் கழிச்சு என் செல்ல அக்காவை பார்க்கப் போறேன் ..இதுல போயி சொதப்புவேனா ? "

" ஓகே டா... பத்திரமா வா .. நான் கோவில் போயிட்டு அப்படியே ஏர்போர்ட் வந்திடுறேன் .. "

" அப்படியே என் அக்காவுக்கு நல்ல மாப்பிளை கிடைக்கனும்னு வேண்டிக்க"

" அடி போடி .. உனக்கொரு லைப் அமைச்சிட்டுதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் "

" இது பாருக்கா, உன் முருகர் கிட்ட நீ என் லைப் காக வேண்டிக்கோ .. என் விநாயகர் கிட்ட நான் சொன்னேன்னு என் வேண்டுதலை சொல்லிடு .. அண்ணன் தம்பி ரெண்டு பெரும் பேசி முடிவுக்கு வரட்டும் "

" அடிப்பாவி அவங்க மாம்பழத்துகே சண்டை போட்டவங்க ... என் முருகர் அப்பறம் கோச்சுகிட்டு மலைமேல ஏறிட போறாரு "

" ஹா ஹா .. அதுதான் என்னுடைய ப்ளேன் ... எவ்வளவு நாளுதான் அவர் ஆறு மலையில் குடியிருப்பார் ? ஏழாவதா இன்னொரு மலையை தேடி புடிக்க சொல்லு ... "

" போடி வாயாடி .. எங்கயாச்சும் வாய் அடங்குதா பாரேன் .. சரி சீக்கிரம் வா "

" ஆமா ஆமா நான்தானே பிளேனை ஓட்டுறேன் .."

" தப்புதான் தாயே ...தப்புதான் .. எனக்கு இங்க டைம் ஆகுது .. அப்பறம் பேசுறேன் சரியா ? "

" சரி சரி பாய் " என்று சிரித்தபடி போனை வைத்தாள்  அஞ்சனா .. அஞ்சனா சாதனாவின் தங்கை .. சாதனாவை விட 5 வயது இளையவள் .. இயற்கை அழகு, தெளிவான பகுத்தறிவு, வற்றாத கல்வி அறிவு, இதை அனைத்தையும் மீறி என்றும் மாறாத குழந்தைத்தனம் இவை அனைத்தையும் வரமாக பெற்ற 23 வயது யுவதி அவள் .. பதின்ம வயதில் ஒரு விபத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்து நின்றனர் இருவரும் .. வயதில் மூத்தவளான சாதனா, அஞ்சனாவிற்கு இன்னொரு தாயாய்  மாறி போனாள் . அஞ்சனா, சாதனாவிடம் எதையும் மறைத்ததில்லை.. இதோ , கையில் இருக்கும் இவனை பற்றிக் கூட மறைத்ததில்லை .. மீண்டும் அவனின் புகைப்படத்தை எடுத்து என்னமோ அவனே நேரில் நிற்பதாய் பாவித்து பேசினாள்  அவள் ...

" அஜய் .. அஜய் ...  எப்படி டா இருக்க ? இந்த ரெண்டு வருஷம் எனக்கு நானே வெச்ச பரிட்ச்சையில் ஜெயிச்சுட்டேன் அஜய் .. காலேஜ் லைப் ல வந்த காதல் .. அது வெறும் இனகவர்ச்சியா கூட இருக்கலாம்னு அக்கா சொன்னா.. அவ பேச்சுக்கு மதிப்பு கொடுத்து இந்த ரெண்டு வருஷம் எனக்கு நானே பரிட்சை வெச்சுகிட்டேன் ... உன்கிட்ட பேசல .. உன்னை பத்தி பேசல .. சொல்ல போனா நம்ம பிரண்ட்ஸ் யாரோடும் நான் டச் ல இல்ல .. என் மனசை நான் புரிஞ்சுகிட்டேன் அஜய் .. ஐ லவ் யு அஜய் .. அப்பவும், இப்பவும், எப்பவும்..! என் அம்மா என் அப்பாவை எப்படி லவ் பண்ணாங்களோ அந்த மாதிரி நானும் உன்னை லவ் பண்ணுவேன் .. இந்த உலகத்துல இருக்குற அத்தனை சந்தோஷத்தையும் உன் காலடியில் வைப்பேன் அஜய் .. நீ என்ன பண்ணிட்டு இருப்ப இப்போ ? உங்க அப்பா பிசினஸை எடுத்து நடத்துறியா ? இல்ல உனக்கு புடிச்ச சிங்கிங் ல முன்னேறி கையில கிட்டாரோடு நடந்துகிட்டு  இருக்கியா ?? காட் .. ஐ மிஸ் யு டா அஜய் " 

அவளின் அஜய் அவள் சொன்ன மாதிரி நடந்துகிட்டுதான் இருந்தான் .. ஆனால் உல்லாசமாய் இல்லை .. எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டு .. ! அதுக்கு முன்னாடி அஜய் யாருன்னு சொல்லுறேன் ..

அஜய், அஞ்சனாவின் கல்லூரி நண்பன் .. நான் நண்பன்னு சொன்னேன்னு அஞ்சனாகிட்ட சொல்லிடாதிங்க ... ஏன்னா, அவன் அவளுக்கு அறிமுகம் ஆன தினத்திலிருந்து இன்று வரை அவளால் அவனை வெறும் நண்பனாக நினைக்க முடியவில்லை ... ஏதோ ஒன்று அவளை மீண்டும் மீண்டும் அவன்பால் ஈர்த்தது .. ஏதோ ஜென்ம ஜென்மமாய் பழகிய உறவு .. முதலில் அதை தன் அக்காவிடம்தான் சொன்னாள்  அஞ்சனா .. ஒரு பொறுப்புள்ள அக்காவாக சாதனா, அவளின் காதலுக்கு உடனே பச்சை கொடி  காட்டவில்லை .. பொறுமையாய் இருந்து முதலில் படிப்பில் கவனம் செலுத்த சொன்னாள் .. அஜயும்  அஞ்சனாவுடன் நல்ல நட்புறவோடு பழகி வந்ததால், அக்கா சொன்னது போல பொறுமையாய் காதலை சொல்லலாமே என்று இருந்துவிட்டாள்  இளையவள் .. தன் மனதை தெளிவு படுத்திக் கொள்ளவும் மேற்கொண்டு படிக்கவும் சிங்கப்பூருக்கு வந்தாள் .. இரண்டு வருட படிப்பும் முடிய, இதோ வரப்போகிறாள் தன்னவனை தேடி ... ஆனால் .... அஜயை  பார்ப்போம் வாங்க ..

கர்ஜிக்கும் சிங்கம் போல ரௌத்ரத்துடன் தனதறையில் நடந்து கொண்டு இருந்தான் அஜய்.. கண்கள் மட்டும் அவ்வபோது அங்கு மாட்டபட்டிருந்த அவன் தாயின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டு இருந்தது .. கோபத்தை கூட வெளிபடுத்த முடியவில்லையே என்று ஆயாசமாய் உணரந்தவன் இருந்த ஷக்தி அனைத்தும் வடிந்து போனது போல உணர்ந்து தன் தாய் படம் மாட்டபட்டிருந்த இடத்தில்  மண்டியிட்டு அமர்ந்தான் .. அந்த கோபத்திலும் அவனால் அழாமல் இருக்க முடியவில்லை ..

" அம்மா .. ஏன்மா என்னை விட்டுட்டு போன நீ ?? அப்பாவுக்கு என் நிலைமை புரியலம்மா .. என்னை சுத்தி நடந்த நாடகமே இப்போதான் எனக்கு தெரியுது .. சுமதியும் அவ அம்மாவும் உன்னை நல்லா ஏமாத்திட்டாங்க மா .. எதுக்கு என்னை சுமதியை  கல்யாணம் பண்ணிக்க சொன்ன அம்மா ?? உன் கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்க நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் .. எனக்கு உன்கிட்ட முடியாதுன்னு சொல்ல காரணம் இல்லம்மா .. அப்பவும்  சரி இப்பவும் சரி நான் யாரையுமே காதலிக்கல .. சரி நீயாச்சும் நிம்மதியா இருக்கனும்னுதான் , உன் மரண படுக்கையில் அவளுக்கு நான் தாலி கட்டினேன் .. நானும் மனுஷன் தானே .. என்னை நம்பி அவ வந்துட்டான்னு  நான் அவளை எவ்ளோ நல்லா பார்த்துகிட்டேன் .. காதல் இல்லனாலும் ஒரு கணவனா அவமேல பிரியமா தானே இருந்தேன் ?? என் குழந்தையை  அவ சுமக்கிறான்னு  தெரிஞ்சதும் எவ்ளோ சந்தோஷப்பட்டேன் .. ஆனா .. ஆனா . அவ என் மேல ப்ரியம் வைக்கலம்மா .. நம்ம பணத்து மேலதான் அவளுக்கு பிரியமாம் .. நீ அப்பாவி உன்னை ஏமாத்திட்டாங்க அம்மா  ..உன் பேச்சுக்காக அவளை கல்யாணம் பண்ணி நானும் ஏமாந்துட்டேன் .. ஆனா நான் விட மாட்டேன் மா .. நிறைமாத கர்பிணியா இருக்கா .. இல்லன்னா நடக்குறதே வேற .. நீ பாரு , குழந்தை பிறந்ததும் அவளை நம்ம வீட்டுலையே இருக்க விட மாட்டேன் .. நீ பாரும்மா .. " என்று சூளுரைத்தான் அஜய் .. அப்படி என்னதான் நடந்தது .. ? சற்று நேரத்திற்கு முன்பு,

" ஏண்டி சுமதி உன் புருஷன் எங்கடீ ? "

" கீழே எனக்காக ஜூஸ் போட்டுட்டு  இருக்காரு மா"

" போடி கூறு கெட்டவளே .. அவனை கட்டிகிட்டு ஜூஸும்  பழமும் வாங்கி தின்னத்தான் நான் அவன் அம்மாகிட்ட பேசி உங்க கல்யாணத்தை நடத்தி வச்சேனா ??  நகையும் பணமும் கறக்கணும் டீ " என்றார் அந்த பெரிய மனுஷி பங்கஜம் பேராசையுடன் .. அவரின் பேச்சை கேட்டு அறை  வாயிலேயே நின்றான் அஜய் .. அவன் மனைவி என்னதான் சொல்கிறாள் என்று பார்த்திருந்தான்.. அவளோ,

" அம்மா ..அது எனக்கு தெரியாதா ?? இந்த ப்ரெக்னன்சியை  சக்கா வெச்சே, எவ்ளோ நகையும் பணமும் வாங்கி இருக்கேன்னு என் அலமாரியை திறந்து பாரு .. நான் உன் பொண்ணுமா ... இதோ இப்போ வயித்துல வளர்றது கூட  பொண்ணா  பொறக்கனும்னு ஏன்  வேண்டிக்கிறேன் தெரியுமா ? அப்போதான் பொண்ணுக்கு நகை சேர்க்கணும்னு இன்னும் அவன்கிட்ட பணம் கறக்க  முடியும் .. நான் இதுல கில்லாடி .. இதுக்காகவே பத்து பொண்ணு கூட பெத்துப்பேன் " என்று சொல்லி பெரிதாய் சிரித்தாள் .. அவளின் பேச்சை  கேட்ட அவனுக்கே அருவெருப்பாய் இருந்தது .. ஓசை வராமல் தனதறைக்கு  திரும்பி நடந்தான் அஜய் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.