(Reading time: 26 - 52 minutes)

 

" வா சொல்லுறேன் "

மேலே அழைத்து சென்றவள், அவன் நினைவாக அஞ்சனா சேர்த்து வைத்திருந்த பொருட்கள், அவனுக்காக எழுதிய டைரி , அவனுடன் எடுத்துக் கொண்ட போட்டோ அனைத்தையும் காட்டினாள் .. ஒரு புருவ முடிச்சுடன் அதை பார்த்தவன் அவளின் டைரி படிக்க படிக்க அதிர்ச்சி அடைந்தான் .. " என்னை இவ்வளவு காதலித்தாளா இவள் ?? ஏன் என்னிடம் சொல்லவில்லை ?? "  அதற்கும் பதில் எழுதி இருந்தாள் ஒரு டைரியில் ..

" அஜய் .. எனக்கு உன்னை எவ்வளோ பிடிக்கும் தெரியுமா ? ஆனா நான் என் காதலை சொன்னா நீ எப்படி எடுத்துப்ப தெரியல ?? நான் மட்டும் இல்ல நீ எந்த பெண்ணோடும் அவ்ளோ க்ளோஸ் ஆ பேசினது இல்ல .. நான் என் காதலை சொன்னா நீ எப்படி எடுத்துப்ப ?? அது ஏன் அஜய் நம்ம சமுதாயத்துல மட்டும் பொண்ணு தன் காதலை வெளிப்படுத்த இத்தனை தடைகள் ? படத்துல கூட பாரேன் ஹீரோ தான் காதலை சொல்லனுமாம் .. அதுவே பொண்ணு சொன்னா. ஒன்னு அவ பொய் சொல்றான்னு சொல்றாங்க  இல்லன்னா ஏதோ ப்ளான் போடுறான்னு சொல்றாங்க .. பொண்ணுக்கு முதலில் காதல் வர கூடாதா ??? வந்தாலும் அதை சொல்ல கூடாதா ?? நீயும் அப்படிதான் என்னை நினைப்பியா ? ஒரு வேலை நீ என்னை வெறுத்துட்டா ? என்னால அதை தாங்கிக்க முடியாது .. இப்போ நான் என்ன பண்ணுறது  அஜய் ??? "

கண் கலங்கிவிட்டான் அஜய் ..காதலிக்க படுறது இனிமையான உணர்வு .. ஆனா அது இவ்வளவு நாட்கள் கடந்து தெரிய வருதே.. " ஏன் அஞ்சனா ??? "

" அஜய் .. "

" ம்ம்ம்ம்ம் ??"

" ஒன்னு கேட்கவா ??? "

" சொல்லுங்க "

" நீங்க இன்னொரு கல்யாணத்துக்கு ரெடி ஆகாமல் இருக்கலாம் .. உங்களுக்கு என் தங்கச்சி மேல காதல் இல்லாமல் கூட இருக்கலாம் .. பட் நீங்க பாப்பாவோடு எங்க கூடயே தங்கிக்கலாமே .. எதோ வீடு வாடகைக்கு தந்ததா நினைச்சிக்கோங்க .. பாப்பாவுக்கும் ஒரு பெண்ணோட பாசம் கிடைக்கும் .. அஞ்சாவும் மாறுவா .. "

" நான் யோசிக்கணும் சாதனா .. என் லைப் தான் முடிஞ்சிருச்சு .. அஞ்சனா கண்முன்னாடி நின்னா அவ அவள் லைப் பத்தி எப்படி முடிவெடுப்பா ?? "

" ப்ளீஸ் அஜய் " என்று அவள் பேசும்போதே அங்கு வந்து நின்றாள்  அஞ்சனா ..

" ஹே அஜய் ... பாப்பா அழகா இருக்கா பார்த்தியா ? " என்றபடி கையில் குழந்தையுடன் வந்தாள் .. பேபி பிங்க் நிறத்தில் குழந்தைக்கு டிரஸ் போட்டுவிட்டு அதே நிறத்தில் தானும் புடவை அணிந்திருந்தாள்..

" ஹே இந்த டிரஸ் எப்படி கிடைச்சது ? "

" உன் பேக்ல இருந்துதான் எடுத்தேன் "

" ஒரு வார்த்தை சொல்லலியே அஞ்சனா "

" நீ கேட்கலியே அஜய் " என்று சிரித்தவள் கொஞ்சம் கொஞ்சமாய்  இயல்புக்கு திரும்பி இருந்தாள் ..

"  அஜய் நான் ஒன்னு சொல்லவா ?? "

" சொல்லு அஞ்சனா "

" பாப்பா என்னோடு இருக்கட்டும் அஜய் .. உனக்கு வேலை  இருந்தா நீ போய்ட்டு வா ..எப்படியும் குழந்தையை பார்த்துக்க ஆள் வேணும் தானே .. அது ஏன் நானாய் இருக்க கூடாது ?? ப்ளீஸ் ? " விழிகளை சுருக்கி பாவமாய் கேட்டாள்  அஞ்சனா .. குழந்தையும் அவளுடன்  நன்றாக ஒட்டிக் கொண்டதை கவனித்தான் .. சற்று முன்பு யோசித்தவன் இப்போது அஞ்சனாவிடம்

" ஆனா ஒரே ஒரு ரிக்வஸ்ட் " என்றான் "

" என்ன ?"

" நானும் உங்களோடு இருக்கலாமா ? " என்றான் பணிவாய் .... முதலில் புரியாமல் பார்த்த இருவரும் அவனின் சம்மதத்தை உணர்ந்ததும் மாகிழ்சியின் உச்சிக்கே சென்றனர் ... பாப்பாவை வாரி அணைத்து  கொண்டாள்  அஞ்சனா .. அஜயை  நன்றியுடன் பார்த்தாள்  சாதனா ..

நாட்கள் உருண்டோடியது ... சரியாய் ஒரு வருடம் ஆனது .. இந்த ஒரு வருடத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள் ?? ஆனால் அத்தனையும் மகிழ்ச்சி தரும் தருணங்கள் தான் .. முதல் மகிழ்ச்சி நம்ம அஜயின்  பாப்பாவுக்கு " கிருஷ்ணா " என்று பெயர் சூட்டியதுதான் .. சாதனா " கிருஷ்ணா " பையன் பேரு என்று மறுத்தும் அஞ்சனா விடவே இல்லை ..அஜயும்  அஞ்சனாவின் ஆசைக்கு தடை சொல்லவில்லை .. இரண்டாவது மிஸ் சாதனா, மிசஸ் சாதனா ஷண்முகன்  ஆனது.. அஜய்யின்  நெருங்கிய தோழன் ஷண்முகன்..( வாவ் உங்களுக்கு புடிச்ச முருகர் பேருலேயே மாப்பிள்ளை அமைஞ்சிட்டார்  சாதனா )

மூன்றாவது நல்ல விஷயம் அஜயின்  மனமாற்றம் ..

முதலில் அஞ்சனாவின் தாய்மை மீது மதிப்பு கொண்டான்.. சில நாட்களில் அவளது அன்பில் தடுமாற்றம் கொண்டான் .. தடுமாற்றம் மனதில் சலனத்தை உருவாக்கியது .. சலனம் அவனுக்கு காதலின்  அர்த்தத்தை சொல்லி தந்தது .. ஆனால் அஞ்சனாவும் இப்போது முற்றிலுமாய் மாறி இருந்தாள் .. அவள் கண்களில் அவன் காதலை பார்ப்பதே இல்லை .. சிநேகமாய் பேசுகிறாள்தான் .. ஆனால் அதைவிட அவளின் தாய்மையே மேலோங்கி நின்றது .. கிருஷ்ணாவே அவளின் உலகமாகி போனாள் .. காதல் அவனுக்கு பொறாமையை கூட கற்று தந்தது.. இந்த கண்ணாமூச்சிக்கு முற்றுபுள்ளி வைக்கும் நாளாய் வந்தது, கிருஷ்ணாவின் பிறந்தநாள் ...

" அஜய் .... "

" சொல்லு மா "

" நாளைக்கு கோவில் போகணும் .. மறந்துடாதிங்க ..கிருஷ்ணாவுக்கு பிறந்தநாள் "

" இதோட 14 வது தடவை சொல்லிட்ட நீ "

" ஆயிரம் தடவை சொன்னாலும் கடைசி நிமிஷத்துல நோ சொல்லுற பிசினஸ் மேன்  ஆச்சே நீங்க "

" ஷபா ...நீ வாயடிக்கிறதை  கூட தாங்கிடலாம் .. ஆனா இப்படி மரியாதை கொடுக்குறியே அதான் என்னாலே தாங்கிக்கவே முடில .. "

" ஹா ஹா ஹா கிருஷ்ணா வளருறாலே .. நாம எப்படி பேசுறோமோ  அதைதான் அவளும் கத்துப்பா.. அதான் "

" ஹெலோ மேடம்.. கிருஷ்ணாவுக்கு இப்போதான் 1 வயசு .. அவ என்ன இதை எல்லாம் கத்துகிட்டு மாநாடுலயா பேச போறா "

" உங்ககிட்ட சொன்னேன் பாருங்க " என்று அளுத்துகொண்டவள்  மேலே மாடிக்கு சென்றாள் ..

" என்ன வாதம் இப்போ அஞ்சனா ? "

" வேறென்ன மாமா .. எல்லாம் உங்க பிரண்ட் பண்ற வேலை தான் "

" ரெண்டு பெரும் சரியான டாம் அண்ட் ஜெரி " என்றபடி கணவனின் தோளில்  சாய்ந்து நின்றாள்  சாதனா ..

" பின்ன எல்லாரும் மாமாவை மாதிரி அப்பாவியா இருப்பாங்களா ?" என்றாள் ..

இப்படியே கிண்டலும் கேலியுமாய் அந்த நாள் கழிந்தது ..

மறுநாள் அனைவருக்கும் மிக அழகாய்  விடிந்தது ..

கோவிலில்,

" என்ன அஜய் இப்படி பார்க்குறிங்க?"

" அதென்ன  அஞ்சனா நீயும் கிருஷ்ணாவும் மட்டும் எப்பவும் ஒரே கலர் டிரஸ் போட்டு சீன்  காட்டுறிங்க ? இதெல்லாம் அநியாயம் .. "

" ஹா ஹா .. இது சந்தன கலர் .. இதே கலர்ல நீங்க டிரஸ் போட்டா எப்படி இருக்கும் தெரியுமா ?"

" எப்படி இருக்கும் ? "

" ராமராஜன் ரிடர்ன்ஸ் மாதிரி இருக்கும் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.