(Reading time: 26 - 52 minutes)

 

" நீங்க பேசாதிங்க .,. என் பிள்ளையை யாருகிட்ட தரணும்னு எனக்கு தெரியும் " என்றவன் அஞ்சனாவை பார்த்தான் ..

" பாப்பா இனி என் பொறுப்பு அஜய் " என்றாள்  ஆத்மார்த்தமாய் .. "தேங்க்ஸ் " என்றவன் அங்கிருந்து சென்றான் ... அதற்காகவே காத்திருந்த பங்கஜம்

" என்னடி பொண்டாட்டி செத்ததும் அவனை புது மாப்பிளை ஆக்கி இந்த சொத்தை எல்லாம் ஆழலாம்னு நினைக்கிறியா ?" என்று வார்த்தையை துப்பினார் ..

" ச்ச என்ன பேச்சு பேசுறிங்க ? அவரு உங்க மாப்பிளை . நீங்களே அவரை தப்பா பேசுறிங்க ? "

" மாப்பிளையா இருந்தாலும் ஆண்பிள்ளை தானே ?? இது பாரு .. இந்த ஜோடி சேருற எண்ணம் இருந்த ஓடிரு .. இதோ சின்னவளை  தான் அவனுக்கு கட்டி வைப்போம் .. ஒழுங்கா மூணு நாள்ல ஓடிரு " தன்று விட்டு சென்றார் .. அவர் வார்த்தையின் வீரியம் அவள் மனதை கூருப்போட்டாலும், "பாப்பாவுக்காக " என்று சொல்லி அமைதி அடைந்தாள் ..

மூன்று நாட்கள் கடந்தது .. சாதனாவும் அங்கு வந்துவிட்டாள் ..

" அக்கா "

" அஞ்சு கெளம்பு "

" எங்க ???"

" நாம்ம  வீட்டுக்குத்தான் "

" அக்கா பாப்பா"

" அதை அஜய் பார்த்துபார் "

" உனக்கென்ன ஆச்சு .. ஏன் இப்படி பேசுற அக்கா ? இந்த பச்சை குழந்தை முகத்தை பார்த்தியா ? "

" உனக்கு அவன் குழந்தை முக்கியம்னா எனக்கு நீ முக்கியம் அஞ்சு .. உனக்கும் அஜய் குழந்தைக்கும் என்ன சம்மதம் ? வெளிய அந்த லேடி உன் மானத்தை வாங்கிகிட்டு இருக்காங்க .. நீ கெளம்பு "

" இரு அக்கா .. அஜய் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வரேன் .. "

" சீக்கிரம் "

 அப்போதுதான் அஜயும்  அங்கு வந்தான்

" அஜய் "

" கெளம்பிட்டியா அஞ்சனா ? "

" ம்ம்ம்ம் "

" சரி ... ரொம்ப தேங்க்ஸ் அஞ்சனா .. உன் உதவியை மறக்க மாட்டேன் "

" அப்போ என்னை  போ ன்னு சொல்றியா அஜய் ? " என்று மனதிற்குள் வினவினாள் ..

" அஜய் பாப்பா....."

" அம்முவை நான் பார்த்துக்குறேன் .. நீ எங்களை நெனச்சு கவலை படதே .. சாரி உன்கிட்ட சரியா பேச முடில .. இங்க இருக்குற குப்பையை கிளீன் பண்ணிட்டு அபப்ரம் பேசறேன் " என்றான் ..

" அஜய் .. ஒன்னே ஒன்னு சொல்லணும் "

" என்ன ? "

" குழந்தையை அவங்க பாட்டிகிட்ட விட்டுடாதே  ..ப்ளீஸ் அஜய் .. நீ இந்த குழந்தைக்கு அப்பா .. நாங்க அப்பா அம்மா இல்லாமல் வளர்ந்த நிலை இந்த குழந்தைக்கு வேணாம் .. ஒரு அப்பாவாக நீ இந்த குழந்தை கூடவே இருக்கணும் .. "

" ஹே ,....இதை நீ சொல்லனுமா ? கவலை படதே " என்று புன்னகைத்தான் அஜய் ..

கண்களில் ஜீவனைதேக்கி " என்னை போகவிடாதே அஜய் "என்று மன்றாடினாள் மனதிற்குள் .. அதற்குள் சாதன அவள் கைப் பிடித்து இழுத்துக் சென்றாள்  ..

ஒரு மாதம் கடந்திருந்தது ... அஞ்சனாவின் வீடே சூன்யமாய் இருந்தது .. இதற்கு மேல் பொறுத்திருக்க முடியாமல் அஜயை  போனில் அழைத்தாள்  சாதனா  ..

" ஹெலோ "

" அஜய் ??"

" எஸ் .. "

" நான் சாதனா .. அஞ்சனாவின் அக்கா "

" ஓ  யா யா எப்படி இருக்கீங்க "

" ம்ம் இருக்கோம் .. நீங்க ??"

" நான் மும்பைக்கு கிளம்பிட்டு இருக்கேன் "

" மும்பையா ??"

" ஆமா .... அங்கேயே  என் பெண்ணோடு செட்டல் ஆகலாம்னு இருக்கேன் "

" அஜய் .. "

" சொல்லுங்க"

" என்னைக்கு போறீங்க ?"

" இன்னைக்குதான் "

" அதுக்கு முன்னாடி நீங்க சென்னைக்கு எங்க வீடுக்கு வர முடியுமா ? "

" ஏன் என்னாச்சு ???"

" ப்ளீஸ் வாங்கா அஜய் " ... சாதனாவிடம் பேசிவிட்டு தன் குழந்தையுடன் சென்னைக்கு புறப்பட்டான் அஜய் .. அவனிடம் பேசிவிட்டு தங்கையின் அறையை எட்டி பார்த்தாள்  சாதனா .. கலைந்த கூந்தல், இலக்கில்ல விழி என கலை இழந்து  படுத்திருந்தாள்  அஞ்சானா .. அவளை அழைத்து வந்த பிறகு ஒரு வார்த்தை பேச வில்லை .. அப்படியே எப்போதாவது பேசினாலும் " பாப்பா .. பாப்பா.. பாப்பா " தான் .. ஒரு நாளைக்கு ஒரு வேளை  அவளை சாப்பிட வைப்பதே பெரும் பாடானது .. வெளி உலகையே மறந்து பித்து பிடித்தவள் போல் ஆனாள் ...

அன்று அங்கிருந்து வந்த நாளன்று அவள்  கதறியது ஞாபகம் வந்தது ...

" அக்கா .. என்னை விடு அக்கா .. . பாப்பா ..அது என் குழந்தை .. நான்தான் அதுக்கு தாய்பால் கொடுத்தேன் .. அவ என் பொண்ணு அக்கா .. நான் அஜய் வீட்டுல ஒரு வேலைக்காரியா  இருந்துட்டு போறேன் .. விடு அக்கா " என்று கெஞ்சினாள்  அன்று .. 

இன்று,

" வாங்க அஜய் .. வாங்க "

" அஜய் " என்ற வார்த்தை கேட்டதுமே கட்டிலில் இருந்து எழுந்தாள்  அஞ்சனா ..எனினும் தன்னை இயல்பாக்கத்தான் தன் அக்கா அப்படி சொல்கிறாளோ என்று சந்தேகப்பட்டவள் அங்கேயே இருந்தாள்.. ஆனால் அவளின் குழந்தையோ அவளை தன் அழுகையாய் அழைத்தது ..

"ங்கா ....ஙா "

" பாப்பா " என்று அடுத்த நொடி ஓடிவந்தவளை  பார்த்து ஸ்தம்பித்து போனான் அஜய் ..அஞ்சனாவா இது ?? அழகிய தோற்றம் போய் , கண்களில் ஜீவன் இல்லாமல் வந்தவள் அவனையும் கண்டுக்கொள்ளாமல் குழந்தையை அவன் கையிலிருந்து வாங்கினாள் ...வாங்கிய வேகத்தில் தனதறைக்குள்  சென்றாள் ...

" இங்க என்ன நடக்குது சாதனா ? "

" சொல்லுறேன் அஜய் மேல வா "

" ஏன் ??"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.