(Reading time: 10 - 20 minutes)

 

ஞ்சலைக்கு மனசே சரியாக இல்லை..பொண்ணுங்க என்னய பாத்தாலே உள்ளாற ஓடிடுறாங்க என்று வருத்தத்தோடு பிள்ளை சொல்லி விட்டுப் போனது மனசை வேதனை படுத்தியது.

கோவிலுக்குப் போய் துர்க்கைக்கு விளக்கு போட்டு விட்டு வரலாமா என்று தோன்றவே சட்டென

கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பி விட்டாள் அஞ்சலை.

மேலத்தெரு வழியாகச் சென்றால் கோயிலுக்குச் சென்று விடலாம்.தெருவுக்குள் நுழைந்த அஞ்சலை யாரோ தன்னைக் கூப்பிடவே திரும்பிப் பார்த்தாள்.அன்னம்மா கிழவி.....

என்ன ஆத்தா....

ரொம்ப அவசரமா போறியா...

சும்மா கோவிலுக்குதான்...கொஞ்சம் மனசு சரியில்ல..அதான்..

ஒங்கிட்ட கொஞ்சம் பேசனும்...ஒரு அஞ்சி நிமிசம் குந்தேன்.....

சரி...சொல்லு..ஆத்தா...அன்னம்மாவின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தாள் அஞ்சலை.

அன்னம்மா..தன் வீட்டுத் திண்ணையிலேயே இடியாப்பமும்,இட்டிலியும் செய்து விற்பவள்..

அன்னம்மா கிழவிக்கு மகள் வயிற்றுப் பேத்தி மட்டும் தான் உறவென்று சொல்லிக்கொள்ள்..

கிழவியே பேச்சை ஆரம்பித்தாள்....

அஞ்சல..ஒம்புள்ளைக்கு கல்யாணத்துக்குப் பாத்துக்கிட்டு இருந்தயே பொண்ணு ஏதும் அமஞ்சுதா...

இல்ல ஆத்தா...அதான் ரொம்ப கவலயா இருக்கு....எங்கதான் பொறந்திருக்காளோ...

ஒண்ணும் கவல படாதே அஞ்சல....எல்லாம் ....நல்லபடியா நடக்கும்....

ம்..எங்க ஆத்தா....நடக்குது..

அஞ்சல எனக்கும் வயசாயிடுச்சி...ஒடம்புல தெம்புமில்ல..எம் பேத்திய ஒத்தங் கையில புடிச்சிக் குடுத்திட்டேன்னா..நிம்மதியா கண்ண மூடிடுவேன்...ரொம்ப கவலயாயிருக்கு...

ஒம் பேத்திக்கு என்னெ ஆத்தா கொறச்செலு..கிளியாட்டம் இருக்கா...அவள கட்டிக்க நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு வரமாட்டானுங்களா....என்றாள் அஞ்சலை..

அது சரி..அஞ்சல வரவன் நல்லவனா இருக்கணுமில்ல...

ஆமா..ஆத்தா.....நீ.. சொல்றதும் சரிதான்...

ஏன் அஞ்சல..ஒம் புள்ளைக்கே எம் பேத்திய கட்டிக்கியேன்.....

தூக்கிவாரிப்போட்டது அஞ்சலைக்கு....

எ..எ..என்ன சொல்ற ஆத்தா....எம்புள்ள எங்க..ஒம் பேத்தி எங்க..வெளயாடுறியா...

நெசமாத்தான் சொல்லுரேன் அஞ்சல...மெய்யாலுந்தான்....

சந்தோஷம் பொங்கி நெஞ்சை அடைத்தாலும்..ஏதோ கெழவி சொல்லுது..இதும் பேத்தி பவானி ஒத்துக்குமா என்ன...அது எம்மாம் அழகு...எம் புள்ளய கட்டிக்க சம்மதிக்குமா என்ன...

சந்தேகத்தோடும் நப்பாசையோடும் கிழவியைப் பார்த்தாள் அஞ்சலை..

இன்னா அஞ்சல...எம் பேத்தி பவானி ஒத்துக்குமான்னு..பாக்கிறியா..அதுண்ட ஏக்கனவே கேட்டுட்டேன்..அதுக்கும் சம்மதந்தான்..நீன்னா ஒரு தடவ கேக்குறியா...

திக்கென்றது அஞ்சலைக்கு...

Related Read: என்னுயிர் உன்னோடுதான்... - தங்கமணி சுவாமினாதன்

ஏ...பவானி...குரல் கொடுத்தாள் அன்னம்மா..

பாட்டி..கூப்டியா என்று கேட்டுக்கொண்டே.உள்ளேயிருந்து வந்த பவானி..அஞ்சலையைப் பார்த்ததும்..கொஞ்சம் சினேகத்தோடும்,.வெட்கத்தோடும்.அஞ்சலியப் பார்த்து சிரித்தாள்.

என்ன பவானி..பாட்டி என்னவோ சொல்லுது...எம் புள்ளய கட்டிக்க ஒனக்கு சம்மதமா என்ன..எம் புள்ள கொஞ்சம் சுமாராதானே இருப்பான்.. ஆனா...நீ..

அத்த..என்ன கட்டிக்கிறவன் அழகான  ஆம்பளயா  இருக்க வேண்டாம்...அன்பான ஆம்பளயா இருந்தா போதும் அத்த..

மிகத் தெளிவாக சொன்ன பவானியைப் பிரமிப்போடு பார்த்தாள் அஞ்சலை.

டுத்த பத்தாவது நாள் ராஜு பவானியின் கழுத்தில் தாலி கட்டினான்.ஆனாலும் அவன் இன்னும் இது நிஜமா?பொய்யா?என்று பிரமிப்பிலிருந்து மீளாமலேயே இருந்தான்.

தவிர்க்க முடியாத வேலையொன்றின் காரணமாக திருமணத்தில் கலந்து கொள்ளமுடியாததால் அன்று ராஜுவின் வீட்டுக்கு கல்யாணம் விசாரிக்க வந்திருந்தார் சாமிக்கண்ணு.

ராஜுவையும் பவானியையும் வாழ்த்திய சாமிக்கண்ணு..

ராசூ..ஒனக்கு ஒரு சேதி தெரியுமா.. பாண்டி இருக்கான்ல பாண்டி அவன் ஒரு பொண்ணுகிட்ட வரம்பு மீறி பழகி அது எக்குதப்பாகி பஞ்சாயத்து நடந்து அந்த பொண்ணுக்கு அவ தாலி கட்ராப்புலஆயிடுச்சி.......நீ அந்த பொண்ண பாக்கணுமே...பாப்ப..பாக்காமியா போவ...சொல்லிவிட்டு விடை பெற்றுப் போய்விட்டார் சாமிக்கண்ணு...

னசு முழுக்க சந்தோஷத்தோடு புதுப் பெண்டாட்டியோடு கோவிலுக்குக் கிளம்பினான் ராஜு. பிராகாரத்தைச் சுற்றிவரும்போது..எதிரே வருவது யாரது பாண்டி மாரில்ல இருக்கு..மொகத்துல சிரிப்பயோ செண்டிப்பயோ காணும்...கூட வருவது யாரு..ஒட்டி ஒரசி வர்ரா..பொண்டாட்டிதானே அப்பிடி வருவா..அப்பிடின்னா..வர்ரது பாண்டியோட பொஞ்சாதியா...ஐயையோ..இதென்ன.. கொள்ளிக்கட்ட கருப்பா..நாலு பல்ல நீடிக்கிட்டு..தொன்ன காதோட..கிள்ளி எடுக்க சதயில்லாம மூக்கருகே..எலந்தபழ சைசுல ஒரு மரு வேற..அந்தப் பெண் மீது வைத்த பார்வையை விலக்கிச் சட்டென்று பாண்டியைப் பார்த்தான் ராஜு...

ராஜுவின் பார்வையைத் தாங்கும் சக்தியற்று தலையை சட்டென்று வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் பாண்டி.ராஜுவின் எந்தக் குறைபாடுகளைச் சொல்லிச் சொல்லி கிண்டலடிப்பானோ அந்த அத்தனை குறைபாடுகளோடும் தனக்கு மனைவி வாய்த்திருப்பது பாண்டிக்கு புரியாமலா இருக்கும்...

 ன்னார்க்கு இன்னாரென்று இறைவன் ஏற்கனவே தீர்மானித்திருப்பான்தானே...

அதுமட்டுமல்ல..இப்போதெல்லாம் இறைவன் ஒருவர் செய்யும் தவற்றுக்கு தவறு செய்தவன்

அடுத்த பிறவி எடுத்து வரும் வரை தண்டனை கொடுக்கக் காத்திருப்பதில்லை...உடனடியாகவே கொடுத்துவிடுகிறார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.