(Reading time: 8 - 16 minutes)

ட்டமளிப்பு விழா..!

மாணவர்களும் ஆசிரியர்களும் திரண்டிருந்த   அந்த பிரம்மாண்டமான  அரங்கத்தில் மனம் திறந்து பேசினாள்   தாரா..தான் கடந்து வந்த பாதைகள் , வலிகள் , ஏமாற்றங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டாள் .. தன் தாயையும் ஆதியையும் மேடையில் அழைத்து கண்ணீருடன் தன் நன்றியை தெரிவித்தாள் .. அவளை பெற்றதிற்காக  பெருமை பட்டார் கலைமதி. ஆதிக்கு தனது நன்றியை கண்களாலேயே தெரிவித்தார். தாய் மகள் இருவரும் கொஞ்சி கொள்வதை நிம்மதியாய் பார்த்தான் ஆதி.. முடிந்து போன சோகங்களை  திருப்பி மாற்ற முடியாது தான். எனினும் இனிய நினைவுகளை ஏற்படுத்தி அதை மறக்க வைக்க முடியும் என்பதை உணர்ந்தவன், அதை அவளுக்கும் உணர்த்தினான்...அவளை மீண்டு  வர வைத்தான்.. ஓய்வு நேரங்களில் பொழுது போக்கிற்காக பாரதியார் கவிதைகளுக்கு இசை அமைத்து பாடி பார்ப்பாள் தாரா .. அதில் ஒரு பாடலை அன்று மேடையில் பாடினாள் .. தன் தாயார் மனதில் நிறுத்தி முன்னேறிய அதே பாரதியார் கவிதை !

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா

சில நாட்களுக்கு பிறகு,

" டண்டனக்கா டண்டனக்கா " என்று பாட்டு பாடி கொண்டே ஆடி  கொண்டு இருந்தான் ஆதி ..

" ஹா ஹா ஹா என்ன ஆதி இது ? திடீர்னு டி.ஆர் சார் மாதிரி டான்ஸ் எல்லாம் ஆடி அசத்துற "

" ஹா ஹா ... நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் தாரா " என்றான் அவன் அசால்ட்டாய்.. அவள் மனது அவளுக்கே புரியவில்லை. இவ்வளவு நாள் தன்னுடனே இருந்தவன் மீது தனக்குள் நேசம் ஏற்பட்டு உள்ளதா ? அல்லது திருமணம் ஆகிவிட்டால் இவனது நட்பை இழந்து விடுவோம் என்ற பயமா ? ஏதோ ஒன்று அவளை முகம் வாடசெய்தது ...அதை ஆதியும் கண்டுகொண்டான்..

" தாரா இங்க வாயேன் "

"ஏன் "

" வா சொல்றேன் "

" என்ன சொல்லு ஆதி "

" கை கொடு "

" எதுக்கு "

" ப்ச்ச்ச் கொடு ..பொதுவா இமோஷனல் ஆன  சீன்ல இப்படித்தான் கைய புடிச்சுப்பாங்க " என்றவன் அவளது வலது  கரத்தை பிடித்து தன் இதயம் அருகில் வைத்து பேசினான் ..

" தாரா ,

நீ அழகா இல்ல,

எனக்கு உன்னை பிடிக்கல,

நான் உன்னை லவ் பண்ணனும்னு நினைக்கல,

வேலண்டைன்ஸ் அன்னைக்கு உனக்கு ரோஸ் வாங்கி கொடுக்கணும்னு தோணல,

உன் பெர்த்டே  அன்னைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு ப்ளான்  போடல,

என் லைப் உன்னோடு ஷேர்  பண்ணிக்கனும்னு நினைக்கல

ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு  பயம்மா இருக்கு ..

என்னை காதலிக்கலன்னா  பரவாயில்லை.. பட் கை விட்டுடாதே ... என்னை கல்யாணம் பண்ணிப்பியா ?"

என்றான் ஆதி... அவன் சொன்ன விதத்தில் மலர்ந்து சிரித்தாள் தாரா ..

நண்பர்கள், காதலர்கலாக மாறலாம் என்று நினைப்பவர்கள் தாராவின் புன்னகையை சம்மதமென எடுத்து கொள்ளுங்கள்... நண்பர்கள் எப்போதும் நண்பர்கள் மட்டும்தான் என்று எண்ணுபவர்கள் தாராவின் புன்னகையை  கேலியான புன்னகையாக எடுத்து கொள்ளவும் ..ஹா ஹா ….

வானில் தோன்றி வானில் மறையும் நிலவின் பிம்பம், பொய்கையில் விழுந்தால் அதை வீழ்ச்சி என்று ஒதுக்குவதில்லை மனிதனின் மனம். அதையும் ஒரு அழகென ரசிப்பவனே மனிதன்..!அதே போல தான், வாழ்வில் நம்மை தடுமாறி விழ வைக்கும் தோல்விகளும் நிரந்தரமில்லையே ?

பாரதியார் கவிதைகள் மீது ஈர்ப்பு எனக்கு அதிகம். அவர் கவிதையை பயன்படுத்தி கதைகள் எழுதனும்னு ரொம்ப நாளாக நினைத்து கொண்டே இருந்தேன் ... அதன்படி, இதோ என்னுடைய முதல் கதை பாரதியாரின் கவிதையோடு ! படித்துவிட்டு கருத்தளியுங்கள் ! ஆர்வமுடன் காத்திருக்கிறேன்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.