(Reading time: 13 - 26 minutes)

ய்... இப்ப எழுந்திருக்கப்போறியா இல்லியா? மூணு கழுத வயசாகப் போவுது..தானா எழுந்திருக்கிற வயசாச்சு..வந்தேன்னா பக்கெட் தண்ணிய தலைல ஊத்துவேன்..மரியாதையா எந்திரிச்சிடு...நாலு நாளா படிச்சு படிச்சு சொல்லிருக்கேன்..தலையத் தலைய ஆட்டிட்டு..கால்மாடு தலமாடு தெரியாத என்ன தூக்கம்..?மணி ஆறாவுது...

இடுப்புவரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டுச் சட்டென படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டாள் அமுதினி.

அம்மா.. எழுந்துட்டேன்..சுப்ரபாதத்தை ஸ்டாப் பண்ணு.அம்மா சிரிக்கும் சப்தம் கிச்சனிலிருந்து கேட்டது.

பல் துலக்கிவிட்டு ப்ரஷ்ஷை ஸ்டேண்டில் வைத்தவள் காபி குடிக்கலாமா அல்லது குளித்துவிட்டு வரலாமா என கொஞ்சம் யோசித்தவள் குளித்துவிட்டு ஃப்ரஷ்ஷாய் அம்மாவின் முன் போய் நிற்கலாம் என்று முடிவு செய்து பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

"ஹாய்மா"..என்று அழைத்தபடியே கிச்ச்னுக்குள் நுழைந்த தன் மகளை அதிசயமாய்ப் பார்த்தா(ள்)ர் மீனாட்சி.என்னடி தலைக்கு ஊத்தி குளிச்சிட்டியா...பத்து தடவ சொன்னாத்தான் குளிப்ப இன்னிக்கு என்ன அதிசயம்?தலையில் டவலை சுற்றியபடி சிக்கென்று புடவையும் அதற்கேற்ற ஜாக்கெட்டுமாய் அழகுப்பதுமையாய் வந்து நின்றவளை வைத்த கண்வாங்காமல் பார்த்தார் மீனாட்சி.எம்பொண்ணு தான் எத்தன அழகு...இப்பதான் பூத்த  ரோஜாமாதிரி...பெயருக்கு ஏத்தபடி குணமும் அமுதம்தான்..

என்னடி மீனாட்சி..?உம் மனசுக்கு என்னாச்சு?அம்மாவை கிண்டலடித்தபடியே கிச்சன் மேடையைப் பார்த்தாள் அமுதினி எனும் அமுதா..

அங்கு பூ,வாழைப்பழம்,வெற்றிலை பாக்கு,மஞ்சள்,குங்குமம், சந்தனம்,ஊதுபத்தி.கம்ப்யூட்டர்வத்தி, எலுமிச்சம் பழம்,கற்பூரம்,ஒரு பாட்டிலில் பால்,கோல மாவு,மணி, சின்ன தாம்பாளம்,ந.எண்ணை, திரினூல்,தீப்பெட்டி,தேங்காய் கூடவே ஒரு சின்ன பேப்பரில் ஒரு முட்டையும் சுற்றிவைக்கப் பட்டிருந்தது.

நுரை தளும்பும் காபியை அமுதாவிடம் நீட்டிக்கொண்டே..ஏம்ப்பா... எல்லாத்தையும் மறக்காம எடுத்துவெச்சிருக்கேனான்னு நீயும் ஒரு தடவ பாரேன் என்றாள் மீனாட்சி.

"எல்லாம் நீ வெச்சா சரியாத்தாம்மா இருக்கும்"..சொல்லிக்கொண்டே ஹாலுக்கு நடந்தாள் அமுதா.

ஹாய்ப்பா குட்மார்னிங்...

பேப்பரில் லயித்திருந்த சிதம்பரம் வெரி குட்மார்னிங்..குட்மார்னிங்..சொல்லியபடியே நிமிர்ந்து மகளைப் பார்த்தார்.அட..காலைலியே குளிச்சு ஃப்ரெஷ்ஷாயிட்டியா..குட்..குட்..மகளைப் பார்க்க பெருமையாய் இருந்தது சிதம்பரத்துக்கு.சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ் பேராசிரியர்.

தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவர்.தன்மகளும் தன்னைப் போலவே ஒரு தமிழ் ஆசிரியராக  வரவேண்டும் என ஆசைப் பட்டவர்.அமுதாவுக்கும் அதுபோல் ஆசை இருந்ததால் +2 வுக்குப் பிறகு B.A தமிழ் முடித்து M.A தமிழ் பின்னர் M.Phil., என்று படிப்பைத் தொடர்பவள்.பெண்பிள்ளை என்றாலும் நிறைய படிக்கவேண்டும் என்று மீனாட்சியும் நினைத்ததால் அமுதாவின் படிப்புக்கு எவ்விதத் தடையும் இல்லை.ஆனாலும் அமுதா அவர்களுக்கு ஒரே பெண் என்பதால் காலத்தோடே அவளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விடவேண்டும் என்ற ஆசையும் சிதம்பரத்துக்கும்,மீனாட்சிக்கும் இருந்தது.இருவருமே கொஞ்சம் ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.எனவே அமுதாவுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று ஜாதகம் பார்த்துத் தெரிந்து கொள்ள விரும்பி அமுதாவின் ஜாதகத்தை தெரிந்த ஜோதிடர் ஒருவரிடம் காட்ட அவரும் அமுதாவின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்த்தார்.அப்படிப் பார்க்கும்போது அவரின் முகத்தில் மாறிமாறி ஏற்பட்ட மாறுதல்களைக் கண்ட சிதம்பரம்,மீனாட்சிக்கு ஒன்றும் புரியவில்லை.மீனாட்சி ஜோசியரை வாய்விட்டே கேட்டுவிட்டார்.என்னாச்சு ஜோசியரே ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கிறதா?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஜாதகம் மிக நன்றாகவே உள்ளது.கவலைப் பட வேண்டாம்.

சின்ன பரிகாரம் செய்தால் போதும்.சீக்கிரம் நல்ல இடமாக அமையும்.

"சொல்லுங்க ஜோசியரே..என்ன செய்யணும்"?

"ஆடி பொறக்க இன்னும் நாலு நாள்தானே இருக்கு..அதுவும் இந்த வருஷம் ஆடி மாசம் வெள்ளிக்கிழமையில பொறக்குது.ஆடிமாச ஐந்து வெள்ளிக்கிழமையும் உங்க பொண்ண பாம்பு புத்துக்குப் பால் தெளிக்கச்சொல்லுங்க..அதோட முறையெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்"

"வேற பெரிசா பயப்படரமாதிரி ஒண்ணும் இல்லியே ஜோசியரே"?

அப்பிடில்லாம் ஒண்ணும் இல்ல..ஒங்க பொண்ணு நல்லா இருக்கும்..கவலையே படாதீங்க போய்ட்டு வாங்க.ஜோசியர் கைகளைக் கூப்ப வீட்டுக்குத் திரும்பினர் சிதம்பரமும், மீனாட்சியும்.

ஜோசியர் சொன்னதை அமுதாவிடம் சொன்னபோது அதற்கென்னம்மா செஞ்சா போச்சு ஏதாவது காரணமில்லாமலா ஜோசியர் சொல்லப் போறாரு?வீணா எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காதே என்று பளிச்சென்று சொல்லிவிட்டாள் அமுதா.

இன்று முதலாம் ஆடி வெள்ளியென்பதால் அருகில் இருக்கும் முத்து மாரியம்மன் கோவிலின் பின்புரம் இருக்கும் பாம்புப் புற்றில் பால் தெளிக்க அமுதாவை அழைத்துச் செல்வதற்காக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் மீனாட்சி.

அமுதா... மசமசன்னு ஒக்காந்திருக்காதே..நாழியாவுது சீக்கிரம் கிளம்பு..அப்பரம் கூட்டம் ரொம்ப வந்திடும்.

தோ..வந்திட்டேம்மா..அஞ்சே நிமிஷம்..

ஏங்க..இபவே மணி ஏழர ஆயிடுத்து..எப்பிடியும் நாங்க வர ஒம்பது மணி ஆயிடும்..பாத்துக்கங்க..

சொல்லிவிட்டு மகளோடு கிளம்பினார் மீனாட்சி.

புற்றுக்குப் பால் தெளிக்கும் வழி முறைகளை சொல்லச் சொல்ல பக்தியோடு அவற்றைச் செய்யும் தன் மகளைப் பார்க்க பெருமையாய் இருந்தது மீனாட்சிக்கு.எதெற்கம்மா இதெல்லாம் செய்ய வேண்டும்.. என்ன மடத்தனம் இது...என்ன மூடப் பழக்கம் இது என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் பெற்றவர்களிடம் நம்பிக்கை வைத்து அவர்கள் காட்டும் வழியில் நடக்கும் தன் மகளை பெருமையாய்ப் பார்த்தார் மீனாட்சி.நாகராஜா,நாகம்மா என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுங்க என மனமுருக வேண்டிக்கொண்டது அந்தத் தாயுள்ளம்.

ஐந்து வாரங்கள் முழுமையாய் எவ்வித தடங்கலும் இல்லாமல் பாம்புப் புற்றுக்கு பால் தெளிக்கும் வெண்டுதல் நிறைவேறிற்று.

பக்தியோடும் நம்பிக்கையோடும் இறைவனை வேண்டினால் நியாயமான வேண்டுதல் என்றால் நிச்சயம் நடக்கும் என்பது போல எதிர் பாராத அதிஷ்ட்டம் வீட்டுக் கதவைத் தட்டியது.மூன்றே மாதங்களில் மிகப் பெரிய தொழிலதிபரும் ரியல் எஸ்டேட் அதிபருமான சிவப்ப்ரசாத்தின் மகன் ப்ரகாஷோடு இனிதே திருமணம் நடந்தது அமுதாவுக்கு. பத்தே மாதங்களில் ஆண் குழந்தையும் பிறக்க மகிழ்ந்து போனார்கள் சிதம்பரமும்,மீனாட்சியும்.

பேரன் சாய்ராமைப் பார்த்துபார்த்து பூரித்துதான் போனார்கள்.யாரின் கண் பட்டதோ?அப்பா ப்ரகாஷோடு டூவீலரில் போனபோது சாய்ராமை விபத்து உயிரைக் குடித்தபோது இருவருமே நடை பிணமானார்கள் என்பது உண்மை.தொழில் போட்டி காரணமாய் நடத்தப்பட்ட சதி அது. .தற்செயலாய் நடந்த விபத்தில்லை என்பது பாவம் யாருக்கும் தெரியவில்லை.அமுதா பிள்ளையை இழந்து தவித்த தவிப்பை அவர்களால் சகிக்கவே முடியவில்லை.ஐந்து வருடம் கழித்து மீண்டும் அமுதாவுக்கு குழந்தை பிறந்ததும்தான் வீடே மறுபடியும் இயல்புக்கு வந்தது.

ட்டென விழிப்பு வந்தது அமுதாவுக்கு.பாத்ரூம் சென்று வரலாமென்று சென்றவளுக்கு மார்பு கசகசவென்று இருப்பது போல் தோன்றவே என்ன தோன்றியதோ அனிச்செய்ச் செயலாக சட்டென்று வாளி தண்ணீரை அப்படியே மேலே ஊற்றிக்கொண்டாள்.வேறு நைட்டியை அணிந்து கொள்வதற்கும் பசியால் குழந்தை அழுவதற்கும் சரியாய் இருந்தது.நல்ல வேளை பாம்பு வாய்வைத்த மார்பில் குழந்தை வாய் வைக்கவில்லை.எல்லாம் இறைவன் செயலோ?அல்லது பாம்பின் அருளோ?

பாம்பாவது  பால் குடிப்பதாவது என இக்கதையைப் படிப்பவர்கள் நினைப்பது புரிகிறது.நினைப்பது நியாயமே.பல வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தித் தாளில் வீட்டின் திண்ணையில் குழந்தைக்குப்

பால் கொடுத்தபடியே தூங்கிவிட்ட ஒரு பெண்ணின் திறந்திருந்த மார்பில் பால் வாசனையால் கவரப்பட்ட பாம்பு ஒன்று அப்பெண்னின் மார்பில் வாய்வைத்துப் பால் குடிக்க பாம்பின் விஷப்பல் பட்டு அப்பெண் இறந்து விட்டதாக வெளியான செய்தியைப் படித்தது நினைவுவர  இக் கதையை

எழுதினேன்.அச் செய்தி எவ்வளவு தூரம் உண்மை என்பது எனக்குத் தெரியாது.என்னைப் போல் யாராவது  அச் செய்தியைப் படித்தவர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.