(Reading time: 10 - 20 minutes)

னிகாவிற்க்கு வெளியே செல்லும் போது மற்ற குழந்தைகளை பார்க்கும் போதும், தாய்மை அழகுடன் நடந்து செல்லும் பெண்களை பார்க்கும் போதும் உள்ளுக்குளே உடைந்து போக ஆரம்பித்தாள்.நமக்கு எப்பொழுது இந்த பாக்கியம் கிட்டும் என ஏங்கி தவித்தாள்.

6 மாதங்களாகியும் குழந்தை இல்லாததால் மீண்டும் மருத்துவரை சந்தித்தனர்.

அப்பொழுது மருத்துவர் வேறு ஒருவருக்கு செயற்கை முறையில் கருவூட்டல்(IVF - In Vitro Fertilization) பற்றி சொல்லிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.

கனிகாவிற்க்கு உள்ளுக்குள் இருந்த குழந்தை மோகம் 23 வயதிலேயே IVF முறைக்கு செல்ல தூண்டியது.

கனிகா அவள் ஆசையை மருத்துவரிடம் தெரிவிக்க மருத்துவரோ திட்ட வட்டமாக மறுத்தார்.

"கனிகா இங்க பாரும்மா.உனக்கு இப்போ தான் வயசு 23.உனக்கு உடம்புலயும் எந்த பிரச்சனையும் இல்லை.நான் அவங்களுக்கு அந்த ட்ரீட்மென்ட் சொன்னதுக்கு காரணம் அவங்களுக்கு உடம்புல சில பிரச்சனை இருக்கு.அவங்களால இயற்கையா குழந்தை பெத்துக்க முடியாது.ஆனால் உனக்கு என்ன?இன்னும் வயசு இருக்கு புரிஞ்சுக்கம்மா" என அவளை தேற்றி வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்.

அவள் சிறிது சமாதானம் அடைந்திருந்த நேரம் அவள் தோழி தொலை பேசியில் அவள் கருவுற்றிருக்கும் செய்தியை தெரிவிக்க, அவளுக்குள் அடங்கி இருந்த குழந்தை ஆசை மீண்டும் வளர்ந்து விருட்சமானது.

அன்று இரவே கணவனை கொஞ்சி கெஞ்சி IVF முறையில் குழந்தை பெற்று கொள்ள சம்மதம் வாங்குவாள். எப்பொழுதுமே அவளை எதற்காகவும் ஏங்க விடக் கூடாது என நினைக்கும் அவள் கணவனா அவளின் ஆசைக்கு குறுக்கே நிற்ப்பான்.அவன் சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் நீண்ட நாளுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினாள்.

அடுத்த நாளே இருவரும் மருத்துவரை சந்தித்தனர். பேசி பேசியே மருத்துவரின் மனதை கரைத்து செயற்கை முறையில் குழந்தை உருவாக்க சம்மதம் வாங்கினர்.அதன் பிறகு வேலைகள் மள மளவென நடந்தேறியது.

இருவருக்குமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நாள் குறிக்கப்பட்டது குழந்தையை உருவாக்கும் நாளுக்காக.

இதை அவர்கள் இருவருமே அவரவர் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.எப்படியோ நம்மில் இருந்து உருவாகும் குழந்தை தானே இது என விட்டு விட்டனர்.எங்கே தெரிந்தால் அவர்கள் வருத்தபடுவர்களோ என்பதும் ஒரு காரணம்.

அந்த நாளும் விடிந்தது. சரியாக அன்று ரிதுலுக்கு அவன் அலுவலகத்தில் ஒரு அவசரமான அழைப்பு வந்தது. கனிகாவும் "நீங்க போயிடு வாங்க.இங்க ஹாஸ்பிடல்ல தானே.எல்லாமே அவங்க பாத்துக்குவாங்க" என கூறி அனுப்பி வைத்தாள் .இருந்தும் அவன் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.

அன்று காலையில் சீக்கிரமே சென்று அவனுடைய விந்தணுவை மருத்துவமனையில் கொடுத்து விட்டு,கனிகாவையும் மருத்துவமனையிலேயே பத்திரமாக இருக்கும்படி கூறி விட்டு அலுவலகம் சென்று விட்டான்.

செவிலியர் "கனிகா உங்களை மேடம் இந்த ரூம்ல படுத்திருக்க சொன்னங்க"

"ஓகே சிஸ்டர்" எனக் கூறி கனிகாவும் உள்ளே சென்று படுத்து கொண்டாள்.

மருத்துவர் 4 மணி நேரம் கழித்து அந்த அறைக்குள் நுழைந்தார்.

மருத்துவர் "சாரி கனிகா.10 மணிக்கே நான் வந்திருக்கணும்.அதுக்குள்ள ஒரு ஆக்சிடெண்ட் கேஸ்.அதான் லேட்"

கனிகா "ஓகே டாக்டர்.டாக்டர்னாலே இப்படி தானே ஏதாவது அவசர கேஸ் வந்துகிட்டே இருக்கும்.டைம் பார்த்து வேலை செய்ய முடியுமா?எனக்கு புரியுது."

"இப்போ மணி 1.மார்னிங்ல இருந்து வெறும் வயித்துல தானே இருக்க.ஏதும் சாப்பிடலையா?"

"இல்லை டாக்டர்.நீங்க சொன்ன மாறி வெறும் வயித்துல தான் இருக்கேன்".

என் குழந்தைக்காக நேத்து நைட்ல இருந்தே வெறும் வயித்துல தான் இருக்கேன் என்பதை மனதுக்குள் கூறி கொண்டாள். அதை அவள் வாய் விட்டு கூறி இருந்திருந்தால்........

"குட்மா.இப்போ உனக்கு மயக்க ஊசி போடப் போறேன்.இது தான் உனக்கான பர்ஸ்ட் அட்டெம்ப்ட்.இதுலயே சக்சஸ் ஆகணும்னு வேண்டிக்கோ"

“நிச்சயமாக டாக்டர்”

மருத்துவர் புன்னகையுடனே அவளின் உடலில் மயக்க மருந்தை செலுத்தினார்.

கனிகா உட்கொண்ட மருந்துகளின் விளைவால் அவளின் ஹார்மோன்களில் ஏற்பட்ட மாற்றமா?அல்லது ரொம்ப நேரம் கழித்து உட்செலுத்திய மருந்தின் விளைவா?இல்லை தவறான அளவு மருந்து அவளுக்குள் ஏற்றப்பட்டதோ  அவளின் உயிர் உடல் கூட்டை விட்டு பிரிந்து சென்றது.

மருத்துவர்களுக்கே ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.எதனால் இப்படி நடந்ததென்று.ஆனால் இதற்கு முன்பே சில முறை இப்படி நடந்திருந்ததால் அவர்களால் மிக எளிதாக இந்த சூழ்நிலையை கையாள முடிந்தது.

ரிதுல் அலுவலகம் முடிந்து கனிகாவை வீட்டுக்கு கூட்டி செல்ல வந்தான்.அங்கே அவன் கண்டது உயிரற்ற அவனுடைய உயிரை தான்.கத்தினான்.கதறினான்.என்ன செய்து என்ன மாண்டவர் திரும்பி வர போவதில்லையே.

மருத்துவர்களிடம் சண்டையிட்டான்.ஆனால் அவன் முதலிலேயே போட்டிருந்த கையெழுத்து அவனை ஏதும் செய்ய விடாமல் செய்து விட்டது.

கடைசியில் அவளின் உடலைப் பெற்று கொண்டு வீடு நோக்கி சென்றான்.

எதற்காகவும் அவளை ஏங்க விடக் கூடாது என நினைத்த அவனையே,அவளுக்காக ஏங்க வைத்து விட்டு அவள் பறந்து சென்று விட்டாள் 23 வயதிலேயே. அவனின் மனமோ என் உயிரே உனக்கு என் உயிர் உருகும் சத்தம் கேட்கவில்லையா என அவளின் ஆன்மாவிடம் கேட்டு கொண்டிருந்தது.

பின்குறிப்பு:கடைசியில் நான் கூறி இருக்கும் விஷயம் சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். 8 மாதங்களாக எனக்குள் ஓடி கொண்டிருந்த விஷயம் இது. அதை மையப்படுத்தியே இக்கதையை எழுதினேன்.குழந்தையின்மை பிரச்சனை இப்பொழுது பரவலாக காணப்பட்டலும்,நம்மை சுற்றி இருப்பவர்களின் கேள்வி கணைகள் தான் நம்மை குழந்தைக்காக ஏங்க வைக்கிறது.யாரையும் இதுபோல் கேள்வி கேட்டு துன்புறுத்தாதீர்கள். அதேபோல எந்த ஒரு சிகிச்சையாக இருந்தாலும் நல்ல மருத்துமனையை தேர்ந்தெடுங்கள். நோயாளிகளை அஜாக்கிரதையாக கையால்பவரை தேர்ந்தெடுக்காதீர்கள்.

{kunena_discuss:785}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.