(Reading time: 17 - 33 minutes)

ஹரியின் காதல் - தமிழ் தென்றல்

This is entry #43 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

love

வனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே…. அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை…. ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர் தங்கையைப் போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்….

இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமேஇப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்

ச்சேச்சேஅவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது….

அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்…. அது அவளே தான்….!”

திர்ந்து தான் போனான் ஹரிஷ் ராகவ்… எப்படி இது சாத்தியமானது… அவள் மாதங்கி தான்… ஆனால் அது எப்படி நடக்க முடியும்? இதற்கு வாய்ப்பே இல்லை… இதைப் பற்றி யாரிடமாவது பேசியாக வேண்டும்… அதற்கு சரியானவள் நித்யா... அவளிடம் பேசினால் என்னுடைய குழப்பத்திற்கு முடிவு கிடைக்கும்…

நித்யாவின் அறைக் கதவை தட்டினான்… “என்னடா அண்ணா இப்படி தொல்லை பண்ணுற?”

“எனக்கொரு குழப்பம், அதை பற்றி தான் பேசனும்… கொஞ்சம் ஹெல்ப் பண்ணு நித்தி…”

“சரி சொல்லுடா… அதுக்காக இப்படி கெஞ்சனும்னு அவசியமில்லை…”

அவன் கண்டவற்றை விளக்கினான் ராகவ்…

“லூசாடா நீ? இதுல குழம்புவதற்கு என்ன இருக்கு?”

“என்னால அப்படி சுலபமா எடுத்துக்க முடியல நித்தி…”

“வேற என்ன பண்ணலாம்னு நினைக்கிற ஹரி?”

“அது புரியாம தானே உன்னிடம் பேசிட்டிருக்கேன்…”

“அப்படின்னா நான் என்ன செய்யனும் சொல்லு?”

“நீ செய்ய எதுவுமே இல்லை நித்தி… நான் சொல்ல போறதை பொறுமையா கேளு… பிறகு உன் கருத்தை சொல்லு…”

“அப்படின்னா இவ்வளவு நேரமா நீ சொன்னதெல்லாம்….” என்று சற்று பொறுமை குறைந்து அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

“அவசரப் படாத நித்தி…” என்று காலில் விழாத குறையாக பேசினான் ராகவ்.

“ஓகே… ஓகே… சொல்லி தொலைடா…”

“உனக்கு ஞாபகமிருக்கா? இரண்டு வருடத்திற்கு முன் நான் காலேஜ் படிச்சிட்டிருந்தேன்…”

அவனை தொடர்ந்து பேச விடாது இடையில் புகுந்து, “இதுதான் உன் குழப்பமா… எனக்கு நல்லாவே ஞாபகமிருக்கு… நல்ல குழப்பம்தான்”  என்று தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினாள் நித்யா…

இப்படி எதையாவது பேச வேண்டுமென்று ஹரி மணிக் கணக்கில் பேசுவதுண்டு…. சில சமயங்களில் முக்கியமான விஷயமாக இருப்பினும் பல சமயங்களில் உப்பு ஊறுகாய்க்கு உதவாத விஷயங்களாகதான் இருக்கும்… அதனால் தான் நித்யா ஹரியிடமிருந்து தப்பித்து ஓடினாள்…

ஹரி நட்பை விட தன் குடும்பத்திற்க்கு முக்கியத்துவம் கொடுப்பவன்…. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை தன் தங்கை நித்யா மற்றும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வதும் அவர்களுடன் அதிக நேரத்தைக் கழிப்பதையும் தான் விரும்புவான்…  இதனால் அவனுக்கு பெரிய நட்பு வட்டாரம் கிடையாது… தன் பாசம் கோபம் விருப்பு வெறுப்பென எல்லாவற்றையும் குடும்பத்தினரிடம் தான் காட்டுவான்…

நித்யாவின் செயலும் அவனுக்கிருந்த குழப்பமும் அவனின் பொறுமையை சோதித்தது….

“இப்போ நான் சொல்லறத கேட்க போறியா? இல்லையா நித்யா?” என்று சற்று குரலை உயர்த்தினான்…

அவன் நித்யா என்று அழைப்பது மிகவும் அரிதானது… அப்படி அழைத்தானானால் அவன் கோபமாக இருக்கிறான் என்று அவள் அறிந்ததே… பதிலேதும் பேசாமல் அவனருகில் அமைதியாக வந்து நின்றாள்… அவனோ வேறு புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசத் தொடங்கினான்….

“இரண்டு வருடத்திற்கு முன் நான் காலேஜ் படிச்சிட்டிருந்தேன்… ஒரு நாள் கோவிலுக்குப் போயிருந்தப் போது பச்சை நிற பாவடையும் நீல நிற தாவணியும் அணிந்து ஒரு அழகான மயில் போல இருந்த அவளை முதன் முதலாய் பார்த்தேன்… அவளைப் பார்த்ப்போது இறைவன் எனக்கெனக் கொடுத்த என் பாதி அவள்தான்னு தோனிச்சு… சரியா அந்த நேரத்தில நீ எனக்கு போன் பண்ணின… உங்கிட்ட பேசிட்டே அவளை மிஸ் பண்ணிட்டேன்… அவளோட நினைப்பிலேயே நாட்கள் கழிய ஒரு மாதம் கழிச்சு அவள மறுபடியும் பார்த்தேன்… என்னோடைய துரதிரிஷ்ட வசமா அவள் வேரொருவனோட பைக்கில் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்திருந்தத பார்க்க வேண்டியதா போச்சு… மனசு வலிச்சாலும் பைக்கில் போரதெல்லாம் ஒரு தப்பும் இல்லை… அவளோட பைக்கில் இருந்தவன் அண்ணாவோ ஃப்ரெண்டாவோ கூட இருக்கலாமேனு புத்தி சொன்னதைக் கேட்டு அவளை பின் தொடர்ந்து போனேன்… அவங்களுக்கு தெரியாமால் அவங்களை கவனித்தப்போ அவள் மாதங்கி அவன் சுரேஷ் அவங்க காதலர்கள்னு புரிஞ்சது… அதன் பிறகு அங்கிருந்து அவசரமா கிளம்பி வந்துட்டேன்… அவளை மறக்குறது சுலபமா இருக்கலை… நம்ம குடும்பத்தோட சப்போட் தான் நான் இன்னைக்கு மாறியிருக்கறதுக்கு காரணம்… ஆனாலும் என் மனசோட ஏதோ ஒரு ஓரத்தில அவளோட நினைவுகள் என்னை ஆட்சி செய்யுதிட்டுதான் இருக்கு…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.