(Reading time: 17 - 33 minutes)

சிகிச்சை முடித்த மருத்துவர், “மிஸ்டர் ராகவ், அவங்க உயிருக்கு ஆபத்தில்லை… புதுசா கல்யாணமான ஜோடி மாதிரி இருக்கு அதுக்குள்ள என்ன பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்… எதுவானாலும் பேசி சரி செய்துக்கங்க.. உங்க மனைவி இன்னும் ரெண்டு தூக்க மாத்திரை அதிகமா சாப்பிட்டிருந்தாலும் அவங்களை காப்பத்தியிருக்க முடியாது.. பார்த்து நடந்துக்குங்க…  இன்னும் கொஞ்ச நேரத்தில உங்க மனைவியைப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு சென்றார்…

அதற்குள் மாதங்கியின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்..  அவர்களிடம் மாதங்கி அபாய கட்டத்தை தாண்டிவிட்டாள் என்று தெரிவித்துவிட்டு உடனடியாக தன் வீட்டிற்க்கு விரைந்தான்…

“வா ஹரி.. காலையிலேயே எங்க போயிருந்தே?” – வள்ளி

“அம்மா, அப்பா, நித்யா உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசனும்..  நான் காலேஜ் படிக்கும் போது விரும்பியது மாதங்கியை தான்..”

ருத்துவமனையில் மாதங்கிக்கு நினைவு திரும்பியது… அவளின் பெற்றோர் கண்ணீர் விட்டபடி அவளருகே நின்றிருந்தனர்…

“மாதங்கி உன்னை இப்படி பார்க்கதான் மாப்பிள்ளையாண்ட கெஞ்சி உங்களுக்கு கல்யாணம் பண்ணினேனா?”  என்று குற்ற உணர்ச்சியில் கதறினார் அவளின் அப்பா…

“அண்ணா இதை ஏன் இவ்வளவு நாள் யாருக்கும் சொல்லாமல் மறைச்சே?...”

“மாதங்கியோட வீட்டில் நாங்க ரெண்டு பேரும் தனியா பேசின போது அவளை பிடிக்கலைன்னு சொல்ல சொன்னாள்…  அவளின் காதலைப் பத்தி எனக்கு தெரிஞ்சதால நானும் அப்படியே செய்தேன்..  ஒரு வாரத்துக்கு பிறகு மாதங்கியோட அப்பா என்னை பார்க்க ஆஃபீஸ்க்கு வந்தார்…”

ஆச்சரியத்தில் கண்கள் விரிய தன் தந்தையைப் பார்த்தாள் மாதங்கி…

ங்களாண்ட மாதங்கி என்ன சொன்னான்னு தெரிஞ்சுண்டு போக வந்தேன்.. என்னை தப்பா எடுத்துகாதிங்கோ… நீங்க மாதங்கியை பார்த்துமே உங்க முகம் மலர்ந்ததை நான் பார்த்தேன்.. ஆனால் தனியா அவளோட பேசிட்டு வந்த பிறகு பிடிக்கலைன்னு சொல்லிட்டீங்க… அது மட்டுமில்லாம நீங்க ரொம்ப குழம்பியிருந்தீங்க…  உங்களுக்கு நிஜமாகவே என் பொண்ணை பிடிக்கலையா? இல்லை அவள் உங்களை அப்படி சொல்ல சொன்னாளா?..”

“இவருக்கு எப்படி தெரிந்தது? இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது?” என்று ராகவ் யோசிக்கையில்

“எனக்கு புரியுது… என் பொண்ணுதான் உங்களை, அவளை பிடிக்கலைன்னு சொல்ல வச்சிருக்காள்…  மாதங்கி சுரேஷ்னு ஒரு பையனை காதலிச்சா… அவனை எங்க எல்லோருக்கும் பிடித்திருந்தது… கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணியிருந்தோம்… ஆனால் என் பொண்ணோட அதிரிஷ்டமோ இல்லை துரதிரிஷ்டமோ அந்த பையன் ஒரு விபத்தில் இறந்துட்டான்…  அவளை அந்த அதிர்ச்சியிலிருந்து மீட்க நானும் என் மனைவியும் ரொம்ப முயற்சி செய்தோம்… அவளுக்கு கல்யாணம் செய்துட்டு எங்க கடைசி காலத்தை கழிக்க ஒரு வருஷமா மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கோம்…  எல்லா மாப்பிள்ளைகளையும் ஏதாவது காரணம் சொல்லி பிடிக்கலைன்னு சொல்லிடுவாள் மாதங்கி…  இந்த முறையும் அப்படி நடந்தால் நானும் என் மனைவியும் தற்கொலை செய்துக்குவோம்னு அவளுக்கு சொன்னதினால் உங்களை அப்படி சொல்ல சொல்லியிருக்கா… உங்களுக்கு என் பொண்ணை பிடித்திருந்தால் அவளை கல்யாணம் பண்ணிக்கோங்கோ….” என்று ஹரியிடம் வேண்டினார்….

“என்னோட மாதங்கியோட வாழ்க்கையை சரி செய்யனும்னு முடிவு செய்தேன்… இதனால் என்னோட காதலும் கைகூடும்னு நினைச்சு அவளுக்கு விருப்பமில்லாத கல்யாணத்துக்கு நான் ஒப்பினேன்..  ஆனால் என்னோட சுயநலம் அவள் உயிரை பலி கேட்கும்னு எனக்கு தெரியாது…” 

“என் மருமகளுக்கு என்னாச்சு?” என்று பதறினார் வள்ளி…

நடந்தவற்றையும், எல்லாவற்றையும் சரி செய்ய அவன் எடுத்த முடிவையும் விளக்கினான் ஹரி…

ஹரியின் குடும்பத்தினர் மாதங்கியை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்தனர்..  அப்போது நித்யா தன் அண்ணனின் டைரியை தன் அண்ணியிடம் கொடுத்தாள்..

“அண்ணி இதை நேரமிருக்கும் போது படிங்க..  என் அண்ணனோட முதல் காதலையும் காதலியையும் பத்தி எழுதியிருக்கான்..  இதை அவனுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தேன்.. மறந்திராமல் படிங்க…”  மாதங்கியும் அந்த டைரியை வாங்கி கொண்டாள்..  அன்றே அதை படிக்கவும் செய்தாள்…

மூன்று நாட்களுக்கு பிறகு தன் முடிவை செயல் படுத்தவென ஹரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருந்த மாதங்கியின் வீட்டிற்க்கு காலையிலேயே சென்றான்..

“வாங்க மாப்பிள்ளை.. உட்காருங்க” என்று உபசரித்தார் மாதங்கியின் தாய்..

“அத்தை… மாதங்கி எங்கே? அவளோட கொஞ்சம் பேசனும்…”

“தோட்டத்தில் இருக்கா… போய் பாருங்க..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.