அங்கே ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளிடம் அந்த பேப்பர்களை நீட்டினான்….
“ரெண்டு வருஷத்துக்கு முன்னால் முதல் தடவை என்னோட காதல் தோத்து போச்சு… முதலிரவில் உன்னோட வார்த்தைகளால் ரெண்டாவது முறை என்னோட காதல் தோத்து போச்சு… நீ தற்கொலைக்கு முயற்சி செய்து மூன்றாவது முறை என் காதலையும் என்னையும் சேர்த்து ஒட்டு மொத்தமாக கொன்னுட்டாய்… நான் இனிமேல் உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன்… உன் கையிலிருக்கும் விவாகரத்து பத்திரத்தில் நான் கையெழுத்து போட்டிருக்கேன்.. நீயும் கையெழுத்து போட்டுடின்னா உனக்கு பிடிக்காத இந்த நம்ம உறவை முடிச்சிக்கலாம்…” என்றான் தழுதழுத்த குரலில்…
அவன் நீட்டிய பேனாவை வாங்கி அந்த விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டாள் மாதங்கி… அந்த பத்திரத்தை வாங்கிக் கொண்டு மேலும் அங்கு நிற்க முடியாதவனாக அங்கிருந்து அவசரமாக கிளம்பினான்… அலுவலகத்தில் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தவன் மாலை சீக்கிரமாக வீட்டிற்கு வந்தான்… தன் அறையின் மெத்தையில் விவாகரத்து பத்திரத்தை போட்டு விட்டு அவனும் மெத்தையில் விழுந்தான்.. அந்த மெத்தையின் இன்னொரு பக்கத்தில் மாதங்கி உட்கார்ந்திருந்தாள்…
“மாதுமா ஏன் என்னை இப்படி கொல்றே? கண் மூடினால் திறந்தால் எங்கேயும் நீதான் எனக்கு தெரியுற.. ஏன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டாய்? நீ இல்லாமல் நான் எப்படி உயிரோடிருப்பேன்? நான் எது பேசினாலும் ஒரே மாதிரியான புன்னகை தான்.. கொஞ்ச நேரம் உன் மடியிலாவது படுத்துகிறேன்..” என்று ஹரி தன் கற்பனையில் தோன்றும் மாதங்கியின் மடியில் கண்களை மூடி படுத்தான்..
சில நிமிடங்களுக்கு பிறகு அவன் நெற்றியில் ஈரம் பட்டு கண் திறந்தான்.. மாதங்கியின் கண்ணீர்.. உண்மையான மாதங்கி.. அவளின் கண்ணீரைக் கண்டு அதிர்ந்து எழுந்தான்..
“அழாதே.. சாரி கனவுன்னு நினைத்து உன் மடியில் படுத்திருந்தேன்… நீ வீட்டுக்கு வந்திருக்கன்னு யாரும் சொல்லலை… இப்படி அழாமல் நீயாவது என்னை படுக்க வேணாம்னு சொல்லியிருக்கலாமே..”
அவன் மீது தவறில்லாத போதும் அந்த தவறு அவளை பாதித்து விட்டதோ என்று எண்ணினான்… ஹரியின் காதலில் கரைந்தவள் அவனை மேலும் பேச விடாது அவனை இறுக்க அணைத்தாள்…
“என்ன மாதுமா? ஏதாச்சும் பிரச்சனையா? யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று அவளின் தலையை தடவியபடி கேட்டான்…
“உங்க காதல் தோத்து போகலை.. நான் தான் உங்க காதலில் தோத்து போயிட்டேன்… விவாகரத்து பத்திரத்தில் நான் கையெழுத்து போடலை.. நீங்க அதை எடுத்து பாருங்க” என்று அவனை விடுவித்தாள்…
“இதெல்லாம் கனவா? நனவா?” என்று குழம்பியபடி தன்னை கிள்ளிப் பார்த்தான் ஹரி… “ஆ… வலிக்குது.. அப்படின்னா இதெல்லாம் நிஜம்” என்றபடி அந்த பத்திரத்தை எடுத்து பார்த்தான்.. மாதங்கி கையெப்பமிட வேண்டிய எல்லா இடங்களிலும் “ஐ வில் பி யுவர் வைஃப் ஃபாரெவர்” என்று எழுதியிருந்தது… அதை படித்தவன் மகிழ்ச்சியில் பத்திரத்தை கிழித்தெரிந்தான்..
ஹரியின் மகிழ்ச்சியையும் செயலையும் கண்டு அழகாக சிரித்த மாதங்கியை இழுத்து அணைத்தான்.. அவளும் அவன் மார்பில் முகத்தை புதைத்தாள்.. ஹரி அவளை நிமிர்த்தி தன் இதழால் அவள் இதழில் தன் காதலின் வெற்றியை எழுதினான்..
This is entry #43 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.