(Reading time: 19 - 37 minutes)

பாண்டி அண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.சற்று நேரம் போனில் பேசிக் கொண்டிருந்த கதிர், தன் தங்கச்சிக்கு ஆறுதல் கூறி விட்டு உடனே புறப்பட்டு கோவை வருவதாகச் சொன்னான்.பாண்டி அண்ணனிடம் தன் தங்கச்சி மகளுக்கு உடம்பு சரி இல்லை.மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறிவிட்டு தான் உடனே கோவை செல்வதாகக் கூறினான்.

கடையை அடைத்து விட்டு,கடைப் பயனுக்கு விடுமுறை அழித்து, கோவை கிளம்பினான்.

28-செப்டெம்பர்-2012(வெள்ளிக் கிழமை)

நேரம்:காலை 7 மணி:

கோவை வடவள்ளி ஷீபா மருத்துவமனைக்குச் சென்றான் கதிர்.அங்கு ஆபரேசன் அறை முன் தன் தங்கச்சியும் மாப்பிள்ளயும் அழுது கொண்டிருந்ததைப் பார்த்தான்.கதிரைப் பார்த்த அவன் தங்கை ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதாள்.பதற்றத்தோடு என்ன,என்னாச்சு என்றான்.தங்கை ஒன்றும் கூறாமல் அழுது கொண்டே நின்றாள்.அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு மாப்பிளையிடம் என்னாச்சு என்றான்."நம்ம செல்வி நம்மள விட்டுட்டுப் போய்ட்டா" என்று கதறினார்.ஒரு நிமிடம் கதிரின் இதயத் துடிப்பு நின்று விட்டது.அழுகையை அடக்கிக் கொண்டு தங்கைக்கும், மாப்பிளைக்கும் ஆறுதல் கூறினான்.

29-செப்டம்பர்-2012(சனிக் கிழமை)

நேரம்:மாலை 6 மணி:

அணைத்து காரியங்களையும் செய்தான் தாய் மாமன் கதிர்.தன் தங்கை கேட்டுக் கொண்டதற்கு இணங்க 10 நாட்கள் அவளுடன் இருப்பதாகக் கூறினான்.பாண்டி அண்ணனுக்கு போன் செய்து விசயத்தைக் கூறிய கதிர்,10 நாட்கள் கடைப் பையனை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிடுமாறு கூறினான்.10 நாட்கள் தங்கையுடன் அவளுக்கு ஆறுதலாக இருந்தான்.

10-அக்டோபர்-2012(புதன் கிழமை)

நேரம்:காலை 11 மணி:

சென்னைக்குக் கிளம்பத் தயார் ஆகிக் கொண்டிருந்தான் கதிர்.தன் தங்கையிடமும் மாப்பிளையிடமும் ஆறுதல் கூறிவிட்டுக் கிளம்பினான். வடவள்ளியில் இருந்து டவுன் பஸ் ஏறி  R.S.புரம் வந்து,அங்கிருந்து சென்னை செல்லும் பஸ்சில் ஏறினான்.

11-அக்டோபர்-2012(வியாழக் கிழமை)

நேரம்:காலை 9 மணி:

கடையைத் திறக்க வந்த கதிரிடம் பாண்டி அண்ணன் என்ன நடந்தது என்று விசாரித்தார்.கதிரும் நடந்த அனைத்தையும் கூறிவிட்டு அமைதியாக கடையைத் திறக்கச் சென்றான்.கதிர் வழக்கம் போல் இல்லை.அவனால் பழைய கதிராக நக்கல் பேசிக் கொண்டு இருக்கவும் முடியவில்லை. எப்போதும் தங்கை,தங்கை மகளின் நினைவாகவே இருந்தான்.விடிய விடிய பஸ்சில் வந்ததால் அலுப்பாக இருந்தது.அதனால் உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தான்.கடை எதிரே ஒரு முதியவர் "செல்வி செல்வி" என்றே கூறிக் கொண்டிருந்தார்.அவரை இதற்கு முன் அவன் பார்த்ததே இல்லை.எழுந்து பாண்டி அண்ணன் கடைக்குச் சென்றான்.

பாண்டி அண்ணன்:என்னப்பா கதிரு ஸ்ட்ராங்கா ஒரு டீ போடவா?

கதிர்:இல்லண்ணே வேணாம்.அந்தப் பெரியவரு யாரு?

பாண்டி அண்ணன்:அவரா?பாவம்பா அவரு, கொஞ்ச நாளைக்கு முன்னாடி தற்கொலை பண்ணிச் செத்துப் போச்சே, பக்கத்துக்கு பிளாட் பொண்ணு. அந்தப் பொண்ணோட அப்பாவாம்.பாவம், அந்த பொண்ணு செத்ததுல இருந்து புத்தி பேதளிச்சிப் போச்சு.எப்பப் பார்த்தாலும் மகள் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.அப்போ அப்போ ஏதாது சாப்பிடக் குடுப்பேன் சாப்பிடுவாரு.

கதிர்:பார்த்துக்கப் பொண்டாட்டிப் புள்ளைங்க வேற யாரும் இல்லையாண்ணே?

பாண்டி அண்ணன்:இல்லப்பா யாரும் இல்லையாம்.இருந்த ஒரே சொந்தம் மகளும் போய்ட்டா.மருமகனும் இங்க இருந்தாப் பொண்டாட்டி நினைப்பாவே இருக்குதுன்னு டெல்லிக்கு டிரான்ஸ்பர் கேட்டுப் போய்ட்டார்.

இதைக் கேட்ட கதிரின் கண்கள் கலங்கி நின்றன.

12-அக்டோபர்-2012(வெள்ளிக் கிழமை)

நேரம்:மதியம் 1 மணி:

பாண்டி அண்ணன் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்திருந்ததால் கதிர் அருகில் இருக்கும் ஹோட்டலுக்குச் சென்று சாப்பாடு வாங்கிக் கொண்டு வருவதாகக் கூறிச் சென்றான்.பாண்டி அண்ணனும் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.வந்தவன் கையில் இரண்டு சாப்பாடு இருந்தன.

பாண்டி அண்ணன்:டேய் நான் தான் சாப்பாடு கொண்டு வந்துருகேன்னு சொன்னேன்லாடா.எனக்கு எதுக்குடா வாங்குன?

கதிர்:அது உங்களுக்கு இல்ல.

பாண்டி அண்ணன்:அப்போ உனக்கென்ன அவ்ளோ பசியாடா?ரெண்டு சாப்பாடு சாப்டுற அளவுக்கு?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.