(Reading time: 19 - 37 minutes)

திர்:அது அந்தப் பெரியவருக்கு.

வெளியே சென்று பெரியவரை அழைத்து வந்து, தங்களோடு அமர்ந்து சாப்பிடச் சொன்னான் கதிர்.முதியவரோ "செல்வி செல்வி" என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.அவர் அருகில் வந்து அமர்ந்த கதிர் அவருக்கும் ஊட்டி விட்டுத் தானும் சாப்பிட்டான்.

நேரம்:இரவு 10 மணி:

கடையை அடைத்து விட்டு வந்த கதிர்,பாண்டி அண்ணனிடம் அந்த முதியவரைத் தன்னோடு வீட்டுக்கு அழைத்துச் செல்வதக்கக் கூறினான்.பாண்டி அண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.சரி ஏதோ பண்ணு என்று சொல்லிவிட்டு,அவர்கள் இருவரோடு இவரும் பைக்கில் ஏறி அமர்ந்தார்.பாண்டி அண்ணனை அவர் வீட்டில் இறக்கி விட்டு,முதியவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

வீட்டிற்கு வந்த உடன் முதியவரைச் சாப்பிட வைத்து,அவரைக் கட்டிலில் படுக்க வைத்தான்.பின் தானும் சாப்பிட்டுவிட்டுத் தரையில் ஒரு பாயை விரித்துப் படுத்தான்.இரவு முழுவதும் முதியவர் “செல்வி செல்வி" என்றே புலம்பிக் கொண்டிருந்தார்.

13-அக்டோபர்-2012(சனிக் கிழமை)

நேரம்:காலை 6 மணி:

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த கதிர்,விடிந்த உடன் நேராகச் சென்றது தன் கடைக்கு அல்ல.

போலீஸ் ஸ்டேஷனுக்கு.....

ஆம் அந்த முதியவரையும் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றான் கதிர்.

2-நவம்பர்-2012:வெள்ளிக் கிழமை:

நேரம்:காலை 11 மணி:

இடம்:சென்னை உயர் நீதி மன்றம்:

நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.

"குற்றம் சாற்றப்பட்டுள்ள கதிர் என்கிற கதிரேசன் தானே முன் வந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அதிக பட்ச தண்டனையாக 10 வருட கடுங்காவல் தண்டனை தந்து இந்த கோர்ட் தீர்பளிக்கிறது. மேலும் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மன நலம் சரி இல்லாத அந்த முதியவரை கதிரின் தங்கையிடம் ஒப்படைக்குமாறும் இந்த கோர்ட் கேட்டுக் கொள்கிறது"

கதிரின் வாக்குமூலம்:

3-ஆகஸ்ட்-2012:வெள்ளிக் கிழமை:

நேரம்:மாலை 5 மணி:

என் தங்கையிடம் இருந்து எனக்கு போன் கால் வந்தது.அதில் என் தங்கைத் தன் மகள் செல்விக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாகவும்,உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய  3 லட்சம் பணம் வேண்டுமென்றும் கேட்டாள்.அவ்வளவு பணம் என்னிடம் இல்லாததாலும், எனக்குத் தெரிந்த ஒரே நண்பர் பாண்டி அண்ணன்.அவரும் தன் மனைவியின் வைத்தியச் செலவுக்கு 2 லட்சம் பணம் கடன் வாங்கிக் கஷ்டப் பட்டுக்கொண்டிருபதாலும்,2 நாட்களுக்குள் அவ்வளவு பணம் புரட்ட முடியாதென்பதாலும் வேறு வழி இல்லாமல் திருட முடிவு செய்தேன்.

4-ஆகஸ்ட்-2012:சனிக் கிழமை:

நேரம்:மதியம் 12 மணி:

என் கடை அருகில் தன் காரை நிறுத்திய பக்கத்துக்கு பிளாட் "B பிளாக்" இல் வசிக்கும் பைனான்சியர்,தன் வீட்டில் 50 லட்சம் பணம் இருப்பதாக யாரிடமோ போனில் சொல்லிக் கொண்டிருந்தார்.மேலும் அவர் திங்கட் கிழமை வரை பணம் தன் வீட்டில் தான் இருக்கும் என்றும் அவர் எப்போது வேண்டுமானாலும் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.இதை என் கடை வாசலில் நின்ற நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

5-ஆகஸ்ட்-2012:ஞாயிற்றுக் கிழமை:

நேரம்:இரவு 11 மணி:

கடையை அடைத்து விட்டுப் பாண்டி அண்ணனை அவர் வீட்டில் விட்டு விட்டு நான் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன்.செல்லும் வழியில் என் போனை மறந்து கடையில் வைத்து விட்டது ஞாபகம் வந்தது.அதனால் மீண்டும் கடைக்குச் சென்றேன்.போனை எடுத்து விட்டு கிளம்பும் போது பைனான்சியர் தன் குடும்பத்தோடு காரில் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்.இருள் சூழ்ந்திருந்ததால் அருகில் நின்ற என்னை யாரும் கவனிக்கவில்லை. பைனான்சியருடைய அம்மாவுக்கு உடல் நலம் சரி இல்லாததால் உடனடியாக நெல்லைக்குச் செல்வதாகத் தெரிந்து கொண்டேன். திருடுவதற்கு இது தான் சரியான தருணம் என்று முடிவு செய்தேன். பணம் உடனடியாக வேண்டும் என்பதால் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு வேறு வழி இன்றித் திருட முடிவு எடுத்தேன்.யாருக்கும் தெரியாமல் பைனான்சியர் வீட்டை உடைத்து உள்ளே சென்றேன்.50 லட்சம் பணம் பீரோவில் இருந்தது. அதில் எனக்குத் தேவையான 3 லட்சம் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு,என் மீது எவ்வித சந்தேகமும் வரக் கூடாதென்பதற்காக மது அருந்தியது போலவும்,சிகுரெட் பிடித்தது போலவும் செட்டப் செய்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.