(Reading time: 32 - 63 minutes)

லோ நான் தான் அபிகேல்.” பெயரையும் குரலையும் கேட்ட இவனுக்குள் ஆச்சர்யம்!.

“அம்மா உங்களை கூப்பிடுறாங்க.ரூம்ல வந்து பார்த்தேன்.நீங்க இல்ல.”

“ம்ம் நான் இங்க தான் இருக்கேன்,வர்றேன்.” அழைப்பைத் துண்டித்து திரைச்சீலையை விலக்கி இவன் உள்ளே வர அவள் திரும்பி பார்த்தாள்.

“அம்மா கூப்பிடுறாங்க.”-அபிகேல்.

“போலாம். அதற்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.இங்க வந்து உட்காரு,: அறையில் கிடந்த சோபாவில் அவன் அமர்ந்தான். அவள் வந்து அமரவும் ..

“என்னை உனக்கு முன்னாடியே தெரியுமா”

“ம்ம் தெரியும்..”            

“எப்பொயிருந்து தெரியும்..?

இவள் தயக்கத்துடன் :ஒரு நிமிஷம், இப்பொ வர்றேன்,”

அறையின் ஒரு பகுதியில் இவள் பெட்டியும் பொருட்களும் இருக்க அதன் அருகே சென்று பெட்டியைத் திறந்து எதையோ எடுத்து வந்து இவன் கையில் கொடுத்தாள். அதைப் பார்த்ததும் இவனுக்குள் ஆச்சர்யம். இவன் 12-ம் வகுப்பு படிக்கும் போது இவர்களது சர்ச்சில் கிறிஸ்துமஸ் விழாவில் வேதபாடம் படிக்கும் எல்லாப் பிள்ளைகளும் சேர்ந்து கிற்ஸ்துமஸ் பாடல் பாடும்போது எடுத்த போட்டோ.!இவன் நன்றாகப் பாடுவதால் முன்வரிசையில் இவனைதான் கொயர் மாஸ்டர் நிற்க வைப்பார். இவன் நின்ற அதே வரிசையின் கடைசியில் அபிகேல் நிற்கிறாள்.இவன் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அதனால் இவளைத் தெரிய வாய்ப்பில்லை.அதன்பின்பு வெளி நாட்டில் மேற்படிப்பு படிக்க சென்று விட்டதால் ஊரில் யாரையும் அவ்வளவாக தெரியாது,

“உங்களை நான் 6த் படிக்கும்போதே பார்த்திருக்கேன். 11த் & 12த் என்னோட கேட்டிகிஸம் டீச்ச்ர் கூட உங்கம்மா தான்!”

“ஓ..எனக்கு தெரியாது..” இவன் முகத்தில் அசடு வழிந்தது. அந்த புகைப்படத்தின் கீழே இருந்த அடுத்த புகைப்படத்தை பார்த்தான், பார்க்கவும் கண்களில் சிவப்பு ஏறியது.கைகளில் ஒருவித நடுக்கம். அபிகேல் தானாக தன் கையை அவன் கைமேல் வைத்து அழுத்தினாள்.

மறக்க நினைத்த …மறந்த நினைவுகள் இப்போது மறுபடியும் நான்கு வருடங்களுக்கு முன் சென்றது..

ந்த பார்க்கில் ஒரு குழந்தையின் பலூன் பறக்க அதைப்பிடித்து அக்குழந்தையின் கையில் குனிந்து கொடுக்க “தாங்க்யூ அங்கிள்”யுடன் அவன் கன்னத்தில் அழகான ஒரு முத்தமும் தர அதை அப்படியே சாரா தன் கேமராவில் கிளிக் செய்தாள்.

“ஜோஷ்..இந்த போட்டோ அப்படியே நேச்சுரலா இருக்கு. ரொம்ப அழகா இருக்கு.இப்பவே போய் எதாவது ஸ்டுடியோவுல கொடுத்து பிரின்ட் போட்டுடலாம் வாங்க.”

பிரின்ட் போட்டு வந்த பிறகும் இவன் அழகின் புகழ் அவள் வாயிலிருந்து வந்து கொண்டேயிருந்தது.

காதலியிடமிருந்து “நீ ஒரு அழகன் : என்று கேட்கும் எந்த காதலனுக்குத்தான் பெருமை வராது? இவனுக்குள் சிறு கர்வம்கூட வந்தது.

“ஜோஷ் நாளைக்கு அப்பா உங்கள வீட்டுக்கு வர சொன்னாங்க. சீக்கிரம் நம்ம மேரேஜ் தான். அதைப்பற்றி பேசத்தான் உங்கள கூப்பிடுறாங்க.இன்னைக்கு ஈவ்னிங்க் சினிமாவுக்கு போலாமா..ஆனால் கார்ல வேண்டாம்.பைக்ல போலாம்,அப்பொதான் ரொம்ப ஜாலியா சூப்பரா இருக்கும். நீங்க பைக்ல வந்து என்னை பிக்கப் பண்ணிக்கோங்க.”………அவளை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு இவனும் வீட்டிற்கு சென்றான்.

நண்பகல் 3 மணிக்கே கிளம்ப தொடங்கிவிட்டான், மேசையில் காலையில் எடுத்த புகைப்படம் அழகாக இருந்தது. கதவு தட்டும் சத்தம் கேட்க கதவை திறந்த போது அம்மா உள்ளே நுழைந்தார்.

“ஜோஷ்வா உன்னோட ஒரு நல்ல போட்டோ ஒன்னு தா. நம்மளோட ஒரு ஃபேம்லி ஃப்ரெண்டு பார்க்க கேட்டாங்க. அட இந்த போட்டோ ரொமப நல்லாயிருக்கே..யார்டா இந்த குழந்தை..?ரொம்ப க்யூட்டா இருக்கு. இந்த போட்டோ போதும்டா..இவனை என்ன எதுவென்று கேட்காமலே மேசையிலிருந்த போட்டோவை எடுத்து சென்றுவிட்டார்.”

“அம்மா அந்த போட்டோவை திரும்ப எங்கிட்டயே தந்திடுங்க..” அம்மா அங்கே நின்றால் தானே பதில் வரும்.

செல்லில் அழைப்பு வர திரையில் “சாரா”

“ஹலோ இதோ கிளம்பிட்டேன் டியர்.10 மினிட்ஸ்ல உங்க வீட்டு முன்னாடி நிற்பேன்.ஜோஷ்வா கருப்பு நிற டீசர்ட்டும், ஜீன்சும் அணிந்தால் சாராவுக்கு ரொம்ப பிடிக்கும். அதே உடையை அணிந்து விசிலடித்தபடியே அவன் மாடி அறையிலிருந்து கீழே வந்தால் வீட்டில் யாரும் இல்லை.அதுக்குள்ள அம்மா வெளியே போயிட்டாங்களா..அப்படி யாருக்கு அந்த போட்டோவை காட்ட போறாங்க..நினைத்தபடியே பைக்கை ஸ்டார்ட் செய்தான். வாயில் விசிலடித்தபடியே உற்சாகமாக பைக்கை வேகமாக ஓட்ட ஒரு வளைவில் எதிரில் வந்த லாரியை விழிகள் கவனித்து மூளைக்குள் சொல்லி அபாய மணி அடிக்கும் முன் கண் இமைக்கும் நேரத்தில் இவன் வண்டி லாரியின் முன் மோதி தூக்கி வீசப்பட்டான்!  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.