(Reading time: 32 - 63 minutes)

நீங்க டிஸ்சார்ஜ் ஆகி போறவரைக்கும் நான் உங்க முன்னாடி வரல. நீங்க வீட்டிற்கு போன பிறகு யார்கூடயும் சரியா பேசுறதில்லை,.யாரையும் உங்கள பார்க்க அனுமதிக்கலனு அம்மா கவலையா சொன்னாங்க. ஒரு ஆக்சிடண்டால கிடைத்த வலியும் சாரா விட்டுவிட்டு போன வலியும் சேர்ந்து நீங்க் ஃபீல் பண்ணுரீங்கனு எனக்கு புரிந்தது.அந்த டைம் தான் நான் ஷரோன மீட் பண்ணேன். அவனுக்கும் ஆக்சிடண்டுல அவன் அப்பா இறந்திட்டாங்க.அவனோட ஒரு கால் முட்டுக்கு கீழே போயிடுச்சு. உங்கள நான் உண்மையா நேசிச்சதால தான் உங்க வலியை என் வலியா நான் ஃபீல் பண்ணேன்.உங்கள உணர முடிந்ததால தான் ஷாரோனப் பார்த்தப்ப எனக்கு அவனோட கஷ்டத்தையும் புரிய முடிந்தது. இந்த கஷ்டத்த்துலையும் ஷரோன் தன்னம்பிக்கையொட அவனுக்கு தெரிந்த கலையை வைத்து உழைக்கிறத பார்த்தப்பதான் ஒரு எண்ணம் வந்தது. ஷாரோனைபோல எத்தனையோ பேர் ஆக்சிடண்டுல உடல் உறுப்புகளை இழந்து வீட்டுல இருப்பாங்க.அவங்களுக்காக எதாவது செய்யணும்னு மனசுல ஒரு தாட். அதையே என்னோட பிரெயர்ல வச்சப்ப எனக்கு கிடைத்த விஷன் (vision) தான் இந்த அன்பின் அலை ஹோம்.அங்க இருக்கிற ஒவ்வொருவரும் அவங்க திறமையை பயன்படுத்தி என்ன செய்ய முடியும்னு நினைக்கிறாங்களோ அதை வெளியே கொண்டு வர்றதுக்கு என்னை ஒரு கருவியா கடவுள் பயன்படுத்திட்டுவர்றாங்க. அவ்வளவுதான்..

மழைவரும் முன்பு மேகங்கள் கருமேகமாக உருமாற அக்கணத்தில் வான் தேகத்தில் வெண்தேவதை தோன்றினால் கண்கள் விரிய அதிசயித்து பார்ப்பதுபோல் அபிகேலை பார்த்துக்கொண்டிருந்தான் ஜோஷ்வா.

இத்தனை நாட்கள் வலிகள் எனக்கு மட்டும்தான் இழப்புகள் எனக்கு மட்டும்தான் என்று நினைத்திருந்த நினைவுகளை இன்று மனதில் மழையாய் வந்து நனைத்து அழித்து விட்டாள்.!

“இது எதுவுமே எனக்கு தெரியாது அபி. ஏன் எங்கிட்ட முன்னாடியே சொல்லல.:

“ஆமா.. நீங்க மேரேஜே வேண்டாம்னு சொல்லிட்டீங்க.அந்த ஆக்சிடண்டுக்க பிறகு நீங்க யார்கூடயும் பேசறதில்லைனு சொன்னாங்க. ஒண்ணரை வருஷம் கழிச்சு தான் உங்க ஆபிஸ் பக்கம் போயிருக்கீங்க. அந்த சாரா இன்னும் உங்க மனசை விட்டு போகலையோனு ஒரு தாட். நம்ம என்கேஜ்மெண்ட் முடிந்த பிறகு பேசலாமா வேண்டாமானு நினச்சு ஒரு மிஸ்டு கால் கொடுப்பேன். ஷாரோனோட என்னை பைக்குல பார்த்திட்டு எதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசிட்டு காரை அவ்வளவு வேகமா எடுத்திட்டு போனதும் நான் ரொம்ப பயந்திட்டேன். உடனே கால் பண்ணினேன். நீங்க அட்டென் பண்ணல்.எப்பொ உங்க போட்டொவ பார்த்திட்டு இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் தாழ்விலும் நான் உங்ககூடவே இருக்கணும்னு இயேசப்பாகிட்ட சொன்னேனோ அப்பயிருந்து நான் நாலு வருஷமா உங்களுக்காக காத்திட்டிருக்கேன்.”

ஜோஷ்வா உணர்வின் விளிம்பில் நின்றான். அவள் தோள் மேல் கைகளை வைத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

அன்று சாரா வந்து மருத்துவமனையில் கடைசியாய் பேசிவிட்டு சென்றபோது இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.தனக்கு ஆக்சிடண்ட் ஆனதால கை கால்கள் தலை என்று கட்டுகள் போடப்பட்டு உடம்பில் காயங்கள் இருந்ததால் தான் அவள் என்னைவிட்டு போய்விட்டாள். அவள் நேசித்தது என் அழகை மட்டும்தான். என்னையல்ல என்று நினைத்தான், ஒரு நாள் கழித்து தான் அவன் உணர்ந்தான்….அவன் இடது கால் முட்டின் கீழிருந்து அகற்றப்பட்டிருப்பது. உடலின் மொத்த வலியில் கட்டுகளோடு படுத்தே இருந்த்தால் அவன் அறிந்திருக்கவில்லை.  “இவன் கையாலாகாதவன். இவனால் இவனையே பார்த்துக்கொள்ள முடியாது.எப்படி என்னைப் பார்ப்பான். என்னைப் பயனற்றவன் என்று நினைத்து தான் சாரா விட்டுப் போய்விட்டாள்.எல்லாம் சேர்ந்த அதிர்ச்சியில் துக்கத்தோடு மனதில் தாழ்வுமனப்பான்மையும் உதிர்த்தது.

ஆனால் என்னை நேசித்த இவள் என்னையே தனதாக எண்ணி இன்று மற்றவருக்கும் மறுவாழ்வு கொடுக்கும் தேவதையானாள்.!

“உன் பலவீனத்தில் என் பெலன் பூரணமாக விளங்கும்: என்று சொன்னார் இயேசு. இவள் என்னுடைய பலவீனத்தில் என்னை அறிந்து அவளில் கடவுளின் பெலனை அறிந்திருக்கிறாள். என் இழப்பையும் இனிதாக ஏற்றுக்கொண்ட தேவதை இவள். ஜோஷ்வா மரக்கால் பொருத்திய தன் காலைப் பார்த்தான். அன்பின் அலை ஹோமில் இதேபோல் இழப்புகள் நேர்ந்த மக்கள் அன்று எவ்வளவு சந்தோஷமாக உற்சாகமாக இருந்தார்கள். கடவுளின் சித்தத்திற்கு நாம் நம்மை விட்டுக் கொடுக்கும்போது அவர் நம்மை உலகிற்கு ஒளியாக மாற்றுவார் என்பதை இப்போது ஜோஷ்வா உணர்ந்தான்.

இவனின் மவுனம் அவளில் ஏதோ செய்ய ..

“ஏங்க என்னை உங்களுக்கு புடிச்சிருக்கா…?’ தயக்கமாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“ம்ம்ம் அதை சொல்றதை விடவும் செயல்ல காட்டினாதான் நல்லாயிருக்கும்.” அவள் அவன் பேச்சு உணர்ந்து அவன் விழி நோக்கும் முன் முதல் அச்சாரம் அவள் நெற்றியில்…கண்கள்..கன்னங்கள் என அவன் முன்னேற பெண்மைக்குள் நதி ஊற்றின் சிலிர்ப்பு..

“ஐயோ.உங்கள அம்மா கூப்பிட்டாங்களே..வாங்க போய் அம்மாவ பார்க்கலாம்.அல்லது அம்மா எதாவது நினைச்சிடுவாங்க. நீங்க வந்தப்ப பேசாம உள்ள வந்துட்டீங்க.”

“காலையில அம்மாவை பார்க்கலாம். அம்மா ஒன்னும் நினைக்க மாட்டாங்க இப்போதான் பையனுக்கு நல்ல புத்தி வந்திருக்குனு அம்மா சந்தோஷப்படுவாங்க” அவன் குறும்பாக கண் சிமிட்டி சொல்ல பெண்ணவள் தானாக முகம் சிவந்தாள். ஜன்னலின் வழியே இவள் முகச்சிவப்பை பார்த்த நிலவுக்கு கூட தானாக வெட்கம் வந்தது. ஜோஷ்வாவின் இதயத்தில் இனிதாக ஒரு கவி….

   அருவியின் வீழ்ச்சியில் மகிழுது நிலமது…

   அலையின் அடிதனில் நனைந்தது மணலது…

 மெழுகின் உருகலில் ஒளிர்ந்தது ஓளியது…

 எனதின் இழப்பினில் வந்தது தெய்வமது..

 தனதின் சாயலாய் தந்தது தேவதையிது…

 இவள் தெய்வம் தந்த தேவதை…!

This is entry #77 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.