(Reading time: 7 - 14 minutes)

லக் கையில் வலி. டிக்கெட் வாங்க அறுபத் தைது சதத்தை இறுகக் கையில் பிடித்துக்கொண்டு, டிக்கெட் கவுண்டரில் கை விட்டபோது மற்றவர்களின் கைகளால் அழுத்தப்பட்டதால் ஏற்பட்ட வலி.

நான் கையை வலியால் அழுத்துவதை அவர் கண்டுவிட்டார்." என்ன நடந்தது?" "கை நோகிறதா?" என்று கேட்கிறார். நான் "ஆம்" என்று கூறி விட்டுத் திரையைப் பார்க்கிறேன்.

"தம்பி எனக்கும் உன்னைப்போல ஒரு மகன் இருந்தான்  அவன் கார் விபத்தில் இறந்து விட்டான்" என்று கவலையாகச் சொன்னார்.

 "நானும்  அவனும்தான்  ஒன்றாக  படம்  பார்க்க வருவோம்".

"இப்ப நான் தனிய, மனைவியோ பிள்ளைகளோ ஒருவரும் எனக்கு இல்லை ” அவர் கண்களில் கண்ணீர் கசிவதைக் காண்கிறேன்.

“அவன் பள்ளிகூடத் தில் நன்றாகப் படிப்பான்”. எம்.ஜி.ஆர் படம் என்றால் அவனுக்கு உயிர்". "நான் முன்பு படம் பார்க்க வந்ததே அவனுக்காகத்தான்” . ஆனால் இப்ப வருவது அவன் நினைவை மறக்க".    

 அவர் சோகம் என்னை வருத்தியது. அவருடைய தந்தைப் பாசம் என்னைக் கவர்ந்தது.  

இடைவேளை முடிவதற்கு பெல் அடிக்கிறது. வாங்கில் அமருகிறேன்,  பக்கத்தில் இருந்தவர் கையில் இருந்த கச்சான்கடலைப் பொதியை எனக்குத் தருகிறார். மறுக்க மனமில்லாமல் வாங்குகிறேன்.

படம் காஞ்சித் தலைவன்! மன்னர் எம்.ஜி.ஆர், குத்துச்சண்டையில் வெற்றிபெறுகிறார்!  மறுபடியும் திரை அரங்கே அதிர்கிறது.

ஆனால் பக்கத்தில் இருந்தவர் சோகத்தில் மௌனமாகி விட்டார். சந்தோசமாக  விசிலடித்தும், கத்திக் கொண்டும் இருந்தவருக்கு என்ன நடந்தது? மகனின் நினைப்போ?   அவன் பிரிவு அவரை வாட்டுகிறதோ?  

அவரது கதையைக் கேட்டதும் எனக்கு படத்தில் இருந்த ஆர்வம் போய்விட்டது! படம் முடிந்ததே தெரியவில்லை!

வீட்டுக்கு மூன்று மைல் நடக்க வேண்டும்.

விரைவாக நடக்கிறேன். எனக்குப் பக்கத்தில் இருந்தவர் என்னை பைசிகிளில் வருவது  தெரிகிறது. "தம்பி எங்க போகிறாய்? வா,உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறேன்" என்றார்.

நான் “வேண்டாம், எனக்கு நடக்க  விருப்பம்”” என்று சொல்லிவிட்டு நடையைத் தொடர்கிறேன். அவரும் போய் விட்டார்.

அரைவாசித் தூரம் போயிருப்பேன் எதிரில் நடு ரோட்டில் ஒரே கூட்டம். யாரோ ஒருவர் பைசிக்கிளோடு கீழை விழுந்திருந்தார்! 

அவரைக் கார் அடித்து விட்டது!.

அவர் பிழைக்க மாட்டார் என்று எல்லாரும் கதைத்தார்கள். நானும் எட்டி அவர் முகத்தைப் பார்க்கிறேன். அவர் வேறு யாருமல்ல.  எனக்குப் பக்கத்தில் இருந்தவர்தான்! முகமெல்லாம் இரத்தம்!.

ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கிறது. மகனுக்கு நடந்தது அவருக்கும் நடக்கக் கூடாது என்று நல்லூர் கந்தனை வேண்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

நசிஞ்ச சைக்கிளுக்குக் கீழே இருந்த அவரது சிவப்பு நிற உடம்புதான் என் கண்ணெதிரில். நானும் அவருடன் சென்றிருந்தால் எனக்கும் அதே கதிதான்! 

மாலை பள்ளிக்கூடம் போகாமல் படம் பார்க்கப் போனது பற்றி அப்பா ஒன்றுமே  கேட்கவில்லை. அடிக்கப்போகிறார் என்று நினைத்தவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது.

"எல்லா உடுப்புகளையும் தோய்க்கப் போடு" அம்மா கத்தினாள்.அவளுக்கு சிகரெட் மணம் அறவே பிடிக்காது.

எனது தியேட்டர் அனுபவம் ஒருத்தருக்கும் தெரியாது! யாருக்கும் சொல்லவேணும் போல இருக்கிறது ஆனால் பயம். 

சேர்டில் இருந்த சிவத்த நிறத்தைப் பற்றியோ அல்லது அதிலிருந்து வரும் சிகரெட் நாற்றத்தைப் பற்றியோ ஒருவரும் என்னிடம்  கேட்கவில்லை. அதுதான் என் மனதுக்கு பெரிய சங்கடமாக இருந்தது!.  

எனது அனுபவங்களை ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று கவலை.

ரவு அப்பா என்னிடம் "நீ படத்தைப் பற்றிச் ஒன்றும் சொல்லவில்லையே?" என்றார்.நான் அவருக்கு படத்தின் கதையை யும்,எனது அனுபவங்களையும் ஒன்றும் விடாமல் சொல்லிவிட்டேன். என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.  

சனிக்கிழமை நானும் அப்பாவும் மருத்துவ மனைக்கு அந்த எம்.ஜி.ஆர் ரசிகரைப் பார்க்கச் செல்கிறோம்!.

அப்பாவின் அந்த முடிவை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை!

அவர் உயிர் பிழைத்து விட்டார்!

கையில் இருந்த மகனின் போட்டோவை எங்களிடம்  காட்டினார். “தம்பி உனது கை நோ எப்படி இருக்கிறது?”  என்று கேட்கிறார். நானே வலியை மறந்து விட்டேன். அப்பா என்னைக் குற்ற உணர்வோடு பார்க்கிறார் !

என்னைப் பார்த்ததும் அவருக்கு தனது மகனைக் கண்டது போல் ஒரு உணர்வு.

மகனிடம் அவர் வைத்திருந்த பாசத்தை என்னால் நம்ப முடியவில்லை.

சுகமாகி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும், அவருக்கு நாங்கள்தான் குடும்பம்! 

அவர் மகனுக்கு எம்.ஜிஆர் ஹீரோ! ஆனால் எனக்கோ அவர்தான் ஹீரோ!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.