(Reading time: 8 - 15 minutes)

வர்களுக்கு எனக்குத் தருவதில் பெருமை!.

அன்று முழுவதும் காசைக் கவனாபாக அடிக்கடி எண்ணுவேன். என்ன வாங்குவது என்று மூளை அசுரவேகத்தில் வேலை செய்யும். கடைசியில் ஒரு முடிவும் எடுக்க மாட்டேன். 

 அம்மம்மா நல்லூர் திருவிழாவில் வாங்கித் தந்த, களிமண்ணில் செய்த, பல நிறங்களால் அலங்கரிக்கப் பட்ட அந்த உண்டியல் அப்படியே நிறைந்து விடும்.   

அம்மாவும் அப்பாவும் பதுளையில்  இருந்து வந்திருந்தார்கள்.. 

அன்று எனக்கு என்ன வந்ததோ தெரியவில்லை. பள்ளிக்கூடம் போக விருப்பமே இல்லை. வேண்டா வெறுப்பாக ரிக்க்ஷாவில் ஏறினேன்.  ரிக்க்ஷா தெரு மூலையில்   திரும்பும் போது ரிக்க்ஷோவில் இருந்து பாய்ந்து விட்டேன். பண்டாரி ரிக்க்ஷோவை தடுமாறி நிறுத்தினான். அவனுடைய  பிரேக்ஸ்  அவனுடைய செருப்பில்லாத கால்களதான். எனக்கோ நெற்றியில் காயம் எழும்ப முடியவில்லை. அவன் கால்கள் எவ்வளவு நொந்திருக்கும்

பண்டாரி அருகில் வந்து தம்பி! தம்பி! என்று என்னைத் தூக்கி ரிக்ஹோவில் இருத்தினான். எனது நெற்றியில் வீக்கம்,  உடம்பெல்லாம் காயம். பாவம்    அவனுடைய பதற்றத்தைப் பார்க்க எனக்கு ஏன்தான் ரிக்க்ஷோவிலிருந்து குதித்தேனோ என்ற கவலை.

அண்ணா என்னைவிட மூன்று வயது மூத்தவன். அவன் பண்டாரியை நோக்கி “வீட்ட போ! வீட்ட போ!” என்று கத்தினான். பண்டாரி பதறிப்போனான்!.

பள்ளிக்கூடம் சென்ற ரிக்க்ஷா திரும்பி வருவதைக் கண்ட அப்பாவுக்கு ஆச்சரியம். எனக்குப் பள்ளிக்கூடம் போக விருப்பமில்லாமல் ரிக்க்ஷோவிலிருந்து குதித்ததை அண்ணா சொல்லக் கேட்டு, அவர். கையில் கிடைத்த தடி ஒன்றை எடுத்து "மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல " என்னை நல்லாக அடித்து விட்டார். அம்மாவும், அம்மம்மாவும் தடுத்தும் கேட்கவில்லை.

அம்மா அப்பாவை ஆங்கிலத்தில் திட்டிக்கொண்டே, வீங்கிய இடங்களுக்கு  எண்ணை தடவினாள்.நெற்றியில் இருந்த காயப்பட்ட இடங்களுக்கு மருந்து பூசி விட்டாள்!

பண்டாரி தன்னால்தான் எனக்கு இந்த தண்டனை என்று ஒரு மூலையில் இருந்து புலம்பிக்கொண்டு இருந்தான். அடி வாங்கினதில் கவலை இல்லை!. ஆனால் பண்டாரி எனக்காக வருந்துவதை எனக்குத் தாங்க முடியவில்லை.

அம்மாவும் அப்பாவும் பதுளைக்கு திரும்பிப் போய்விட்டார்கள்.    

பரீட்சை முடிந்து நான் வகுப்பிலேயே முதல் இடத்தில் சித்திடைந்துவிட்டேன்.

பண்டாரிக்கு எல்லையில்லாச் சந்தோசம். அவனிடம்தான் ரீபோர்டை முதலில் காட்டினேன்! முதலாம் வகுப்பு அவனுக்குப் பெரிய படிப்பு. அதுவும் முதல் இடத்தில்!

“ தம்பி முதலிடத்தில் பாஸ் செய்து விட்டார்” என்று எல்லோருக்கும் கூறியபடியே திரிந்தான். அவன் அப்படிச் சந்தோசப்பட்டு நான் ஒரு நாளும் காணவில்லை!   

“பரிட்சையில் பாஸ் செய்வதற்கு எனக்கு என்ன வேணும்” என்று கேட்டாள் அம்மம்மா.

“எனக்கு ஒன்றும் வேண்டாம் பண்டாரிக்கு ஏதாவது கொடுங்க அம்மம்மா” என்றேன். அம்மம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னிடம் ஐந்து ரூபாவைத் தந்து "நீயே ஏதாவது வாங்கிக் கொடு" என்றாள். எனது உண்டியலின் ஞாபகம் வந்தது “வேணாம் என் உண்டியலில்  இருக்கும் காசில் வாங்குகிறேன” என்றேன்!

அந்தக் காசு அவனுக்கு என்ன வாங்கப் பொதும்?

அண்ணாவிடம் ஓடினேன, அவன் சொன்ன ஆலோசனையின்படி வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கடைக்குப் போனேன்.

கடைகாரர் என்னை ஒரு மாதிரிப் பார்த்தார்! “யாருக்குக் கொடுக்கப் போகிறாய்?” என்று கேட்டார். நான் உண்மையைச் சொன்னேன்.

“சரி, நல்லது” என்று நான் கேட்டதைத் தந்து விட்டார். 

அதை பண்டாரியிடம் கொடுத்தேன். அவன் என் அன்பளிப்பை கண்ணில் ஒற்றிக்கொண்டு சந்தோசமாக வீடு போனான். 

இன்னும் இரண்டு நாட்களில் நானும் அண்ணாவும் ஒரு மாத விடுமுறையில்  பதுளை போகப் போகிறோம்.  

எங்களைப் புகையிரத நிலையத்துக்கு அழைத்துச் செல்ல பண்டாரி வந்திருந்தான்.

பண்டாரி மடியிலிருந்து ஒரு பேப்பர் துண்டை எடுத்து "வா தம்பி கடைக்குப்போய் விட்டு வருவோம்" என்றான். நானும் தொடர்ந்தேன். அவன் கடைக்காரரிடம் பேப்பர் துண்டைக் கொடுத்து ஏதோ சொன்னான்.

கடைக்காரர் ஆச்சரியத்தால் வாய் பிளந்தார்!. அவனுக்கு லாட்டரியில், அதுவும் நான் அன்பளிப்பாகக் கொடுத்த டிக்கெட்டில், முதல் பரிசு!

நான் இப்போது இரண்டாம் வகுப்பு. போவது பண்டாரி செலுத்தும் மொரிஸ் மைனர காரில். பண்டாரி அணிந்திருப்பது பாடா சப்பாத்து.

அவள் தானே தன்னுடைய வேலைகளைச் செய்யக்கூடிய அளவுக்கு பழகிக்கொள்ளவும், மூளைக்கு அப்பியாசங்கள் கொடுக்கும் சிகிச்சையும் பண்டாரியின் மகளுக்கு இப்போது நடைபெறுகிறது.

நான் தேறியது வாழ்வின் முதலாம் வகுப்பு அல்ல! வாழ்வின் முதலாம் பாடம்!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.