(Reading time: 5 - 10 minutes)

பிரம்படி - வின்னி

Lincoln

ன்று  வெள்ளிக்கிழமை  பாடசாலை  செல்ல  ரமணனுக்கு விருப்பமில்லை.

அவனுடைய ஆங்கில டீச்சர் செல்லத்துரை மாஸ்டர், அவனுக்குக் கொடுத்த ஆபிரகாம் லிங்கனின் ஜெட்டிஸ்பர் உரையை அவன் இன்னும் மனப்பாடம் செய்யவில்லை.

பல ஊர்களிலிருந்து வரும் பாடசாலைகளின் எட்டாம் வகுப்பு மாணவருக்கு இடையே நடைபெறும் பேச்சுப்  போட்டியின் இறுதி முடிவுக்கான போட்டி.

அரசாங்கப்  பள்ளிகளில் படிக்கும் ரமணன் போன்ற மாணவர்களுக்கு  கத்தோலிக்க தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவரோடு போட்டியிடுவதில் மிகவும் சிரமம்.

அவர்கள் ஆங்கிலத்தில் திறைமைசாலிகள். ஒவ்வொரு வருடமும் வெற்றிக் கோப்பையை தட்டிக் கொண்டு பொய் விடுவார்கள்.

செல்லத்துரை மாஸ்டருக்கு ரமணனுடன் ஆத்திரம்!. அவர் ஆத்திரப்பட்டு அவன் ஒருநாளும் கண்டதில்லை.

அவர் கடமை தவறாத, மாணவருடன் அன்பாக நடந்து கொள்ளும்,  நன்றாக ஆங்கிலம் தெரிந்த ஆசிரியர். ரமணன் வகுப்பிலேயே நன்றாகப் படிப்பவன் என்பதால் அவனிடம் அன்பாக இருப்பார்.

“திங்கக்கிழமைதான் உனக்கு கடைசி நாள்" "இந்த பள்ளிக்கூடம் போட்டியில் வெல்வதற்கு உன்னைத்தான் நம்பியிருக்கிறேன்" என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி லிங்கனின்மிகப் பிரபல்யமான .  “ஜெட்டிஸ்பர் முகவரி”

சனியும் ஞாயிறும் கிரிக்கெட் விளையாடுவதை விட்டு விட்டான்.   

தனது அறையில் அடைந்து கொண்டு ஒவ்வொரு வரிகளையும் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டு, அறையை சுற்றிச் சுற்றி நடக்கிறான்.

Four score and seven years ago……  என்று ஆரம்பிக்கும்  முதல் இரண்டு வரிகளைத் தவிர ஒன்றும் மனதில் பதியவில்லை.

புத்தகத்தில் இருந்து வாசிப்பதாக இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும் !

 “நான் என்ன ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனா”?  

“மனப்பாடம் செய்யச் சொல்கிறாரே தவிர அதன் கருத்தைச் சொலித் தரவில்லை”.

"ஸ்கோர்"  என்பதன் கருத்தே புரியவில்லை! அவனுக்குத் தெரிந்தது கிரிக்கெட் ஸ்கோர் தான்.

“அம்மா! ஸ்கோர் என்றால் என்ன?”

"ஸ்கோர் என்றால் இருபது வருடங்கள்”. “அது பைபிளிலும் இருக்கிறதே" என்றாள் பளிச்சென்று. 

கத்தோலிக்க பாடசாலயில் படித்தவள் பைபிளை கரைத்துக் குடித்திருக்கிறாள்.

விருப்பமில்லாமல் பள்ளிக்கூடத்துக்கு நடக்கிறான்.

அம்மாவுக்கு சந்தேகம்."உனக்கு என்ன நடந்தது? சுகமில்லையா ?"  என்று கேட்கிறாள். அவள் கவலைப்படுவது தெரிந்தது. 

அவன் பதில் சொல்லாமல், "போய் வாறன் அம்மா" என்றுகூறியபடி அங்கிருந்து செல்கிறான்.  

செல்லத்துரை மாஸ்டர் " எல்லாம் மனப்பாடம் செய்து விட்டாயா" என்று கேட்டார்.

"முழுவதும் முடிக்கவில்லை சார" என்றான்.

"உடனே பிரின்சிபலை போய் பார்” என்று கத்தினார்.

பிரின்சிபல் ஆங்கிலத்தில் மாஸ்டர்ஸ் செய்தவர், அதுவும் இங்கலாந்தில். சு. சிவபாதசுந்தரம். எம்,எ (கண்டப்.) என்று பெருமையாக பெயர்பலகையை மேசையில் வைத்திருப்பவர்.

‘கண்டப்’ என்பது கேம்ப்ரிஜ் பல்கலைகழகத்தை குறிப்பது என்று அம்மா சொல்லி ரமணனுக்குத் தெரியும்.

நீயும் அந்த பல்கலைக்கழகத்துக்குத் தான் போ க வேணும் என்பாள்.  

அவருடைய அறையில் நுழையும் போது எதோ ஆபத்து காத்திருந்தது போன்ற உணர்வு.

ஆனால் வகுப்பில் முதலாவதாக வரும் அவனை அவர்மன்னித்து விடுவார் என்று ஒரு சிறு நம்பிக்கை. 

அறை மூலையில் மூன்று நீண்ட மூங்கில் தடிகள். அவர் தனது கதிரையில் இருந்து எழுந்து "ஏன் இன்னும்  மனப்பாடம் செய்யவில்லை" என்று கேட்டபடி அறை மூலையை நோக்கி நடந்தார்.

அவனுக்கு அடி விழப் போகிறதே என்ற பயத்தில் தனது பேச்சின் இரண்டாவது பந்தியின் தொடக்கம் ஞாபகம் வரத்தொடங்கி விட்டது.

Now we are engaged in a great civil war,,,,,,,,,,,,,நாங்கள் இப்போது ஒரு பெரிய உள்நாட்டு போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்…………………………….

அவர் போருக்கு தயாராகிறார்.

அவன்தான் நிராயுதபாணியான எதிரி! 

“இன்னும் கொஞ்சம் மனப்பாடம் செய்ய இருக்கு சார்" என்று அவன் சொல்லி முடிக்க முதல் மூன்று தரம் மூங்கில் தடி அவன் காலைப் பதம் பார்த்து விட்டது.                        

“புதன்கிழமைக்கு முன் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து விடு" என்று சொல்லி அவனை அங்கிருந்து கலைத்தார்.

ஒரு பாடசாலை அதிபருக்கு இப்படி ஒரு மனிதாபமற்ற, கீழ்த்தரமான,  கொடூர தண்டனை கொடுப்பதற்கு எப்படி மனம் வந்தது? என்று அவன் சிந்தித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.