(Reading time: 5 - 10 minutes)

வனது கால்கள் வீங்கத் தொடங்கின. மூன்று  காயங்களில் இருந்தும் இரத்தம் கசியத் தொடங்கியது, பயங்கர நோ!

எல்லாவற்றையும் தாங்கி, கண்களில் இருந்து வழியும் கண்ணீரைத் துடைத்து கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.

அம்மாவோ அல்லது அப்பாவோ ஒருநாளும் அடித்ததில்லை. பிரம்படி கிடைத்தது அதுதான் முதல்முறை!

அம்மாவுக்கு அவன் காயத்தைப் பார்க்க அழுகை வந்து விட்டது. இப்படியும் அடிப்பானா அந்த மடையன். என்ற பிரின்சிபலை திட்டினார்.

அவனை உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.        

அப்பா போலீசில் முறையிடப் போவதாகக் கூற, அம்மாவும் அவனும்  அவரைத் தடுத் தார்கள்.

ரமணனின் பெற்றோர்கள் அவனை இரண்டு நாட்கள் பள்ளிக்கூடம் போக விடவில்லை.

வகுப்பில் எல்லோரும் ரமணனுக்கு என்ன நடந்தது என்று கேட்கத் தொடக்கி விட்டார்கள்.

ரமணன் டாக்டரிடம் போனது, இரண்டு நாட்கள் பள்ளிக்கூடம் வரமாட்டான் என்பது அவர்களுக்கு   ஏமாற்றத்தை கொடுத்தது.

செல்லத்துரை மாஸ்டர் ரமணன் இல்லாமல் பேச்சுப்  போட்டிக்கு ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டார.

வியாழக் கிழமை போட்டியின் கடைசி நாள்.

ரமணன் போட்டி மண்டபத்துக்குள், காலில் டாக்டர் போட்ட கட்டுடன், நுழைகிறான். செல்லத்துரை மாஸ்டரிடம் நான் போட்டிக்கு தயார் என்கிறான்.

அவன்தான் கடைசி  போட்டியாளன்.

ரமணன் மேடை ஏறியதும் அங்கு நிசப்தம் நிலவியது. எல்லோரும் வைத்த கண் வாங்காமல் ரமணனை பார்க்கிறார்கள்.

அவனுக்கு என்ன வந்ததோ தெரியவில்லை அந்த ஜெட்டிஸ்பர் உரையை  ஆபிரகாம் லிங்கன் பேசியது   போல், பிழையில்லாமல், அழகாக, எல்லாவற்றையும் நன்றாகப் புரிந்தவன் போல் உணர்ச்சியோடு பேசி முடித்தான்.

எல்லோரும் எழுந்து நின்று ஆரவாரத்துடம் கைதட்டத் தொடங்கினார்கள்.       

பிரின்சிபலும் எழுந்து நின்று பெருமையாகக் கைதட்டிக்  கொண்டிருந்தார்  தனது பிரம்படிதான் காரணம் என்று அவர் நினைக்கிறாரோ?

செல்லத்துரை மாஸ்டர் அவனை கட்டித் தழுவுகிறார்.

வென்றது யாரென்று நடுவர்கள் தீர்மானித்து விட்டார்கள்.

ரமணனுக்கு முதலிடம்!

கடந்த இரண்டு நாட்கள் கட்டிலருகில் இருந்து, ஆபிரகாம் லிங்கனின் அந்த 1863 ம் ஆண்டு ஜெட்டிஸ்பர் பேச்சின் ஆழமான கருத்தையும், எப்படிப் பேச வேண்டும், அப் பேச்சின் பின்னணி என்ன, அக்காலத்தின் அமெரிக்காவின் சரித்திரம் என்ன என்று சொல்லிக் கொடுத்த அம்மாவுடன் அந்த வெற்றிக் கோப்பையை பகிர்ந்து கொள்ள  வீட்டுக்கு ஓடுகிறான் ரமணன். 

கேம்ப்ரிஜ் பல்கலைகழகத்துதில்  பட்டம் பெற்றவருக்கு புரியாதது அந்த அம்மாவுக்கு  புரிந்து விட்டதே

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.