(Reading time: 19 - 37 minutes)

இதழில் கதை எழுதும் நேரமிது… - விமலா தேவி

Love

விழிகளிலே விழிகளிலே

புது புது மயக்கம் யார் தந்தார்….”     

"நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா...

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா..."

அடுப்பில் தோசை ஊற்றிக்கொண்டே சின்னக் குயில்  சித்ரா அளவு இல்லாட்டியும் ஏதோ சுமாரான குரலில் ரசனையாய் பாடிக்கொண்டிருந்தேன்.

"இப்படி காலங்காத்தால பக்கத்து ஊருக்கே கேக்கும்படி பாடுனா காதல் ராணி மட்டும் இல்ல யாருமே தூங்க முடியாதுக்கா..."

தூக்கம் விட்டுப்போன கடுப்பில் கதறியபடி வந்தான் என் அருமை தம்பி அருண்.

"போடா என்ன மாதிரி அழகா உன்னால பாடமுடியலைன்னு பொறாமையில பொங்காத பக்கி.. ஒழுங்கா பல்ல தேச்சுட்டு தோசை சாப்பிடவா.” என்றேன்.

" அக்கா, அப்பா birthday இன்னைக்கு.. விஷ் பண்ணியாச்சா?. ஏய் கேக் வாங்கனும்னு ப்ளான் போட்டோமே எப்ப வாங்க போறோம்?"

"நா அப்பவே விஷ் பண்ணிடேன்டா. கேக் நான் வாங்கிட்டு வந்துடுறேன் சரியா?"

"சரிக்கா நான் காலேஜுக்கு சிக்கிரம் போனும் EVENING கேக் வெட்டலாம்... என்ன விட்டுட்டு கேக் வெட்டி எல்லா கேக்கையும் நீயே மொக்கிராத." என்று என்னை ஓட்டியதாய் நினைத்து பெரிதாய் சிரித்தபடி பல் தேய்க்க சென்றான் என் தம்பி.

நானும் அதை ஆமோதிப்பதாய் முறைத்தபடியே கேக் வாங்க கடைக்கு கிளம்ப ஆயத்தமானேன்.

சீட்டில் அமர்ந்து ஆட்டோ ஸ்டார்ட் பட்டனை அழுத்திய உடன் காற்றை கிழித்துக்கொண்டு வேகமாய் பஸ் ஸ்டாண்டுக்கு விரைந்தது என் ஸ்கூட்டி பெப்..

வண்டியை நிறுத்தி மறக்காமல் லாக் பண்ணி கீயை ஹேண்ட்பேக்கில் வைத்தபடி  "king sweets and bakerys" என்ற பெயர் பலகையை தாங்கியபடி இருந்த கடைக்குள் நுழைந்தேன்..

கடையில் அவ்வளவாய் கூட்டமில்லை.. கண்ணாடி பெட்டியில் டிஸ்பிளேக்கு வைத்திருந்த கேக்குகளை பார்த்துக்கொண்டிருந்த போது,

"என்ன வேணும் மேடம்" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

படத்தில் வரும் ஹேண்ட்சம் ஹீரோவுக்கு உள்ள அனைத்து அம்சங்களுடன் என் முன்னால் ஒருவன் சிரித்தபடி நின்றிருந்தான்..

அவனிடம் "black forest birtdaycake" இருக்கா அண்ணா" என்றேன். சட்டென்று முகம் சுருங்கிவட்டது அவனுக்கு.

"இல்லை, ஆனா ஆர்டர் குடுத்தா ஈவ்னிங்கிற்குள் தருவோம்"  பட்டென பதில் வந்தது அவனிடமிருந்து.

"ஒ.. சரி ஒரு கிலோ கேக் பண்ணிடுங்க.. எவ்வளோ ரூபா?"

"400 ரூபாய். அட்வான்ஸ் 200 குடுங்க"

"400 ரூபாயா???? என்ன அண்ணா இவ்வளவு ரேட் சொல்றிங்க.. கொஞ்சம் கம்மி பண்ணலாம்ல.."

"என்ன அண்ணானு கூப்பிட்டதற்கு 100  ரூபா அதிகம் வாங்காம விட்டேன்னு சந்தோஷப்படுங்க.. சரி கேக்ல என்ன எழுதனும்னு சொல்லிடுங்க.. அப்பறம் உங்க பெயர் போன் நம்பரும் சொல்லிடுங்க. ரெடியானதும் போன் பண்றேன் வந்து வாங்கிகோங்க.."

“அண்ணானு கூப்பிடக்கூடாதாமே.. சரியான ஜொள்ளு போல..” என்று மனதில் நினைத்துக்கொண்டு, உண்மையான என் பெயரான சத்யா என்பதை சொல்லாமல் வெண்ணிலா என்று சொல்லிவிட்டு போன் நம்பர், பர்த்டே விஷ் எல்லாம் எழுதி குடுத்துவிட்டு வீட்டிற்கு விரைந்தேன்..

"மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்

உன்னை பார்த்துக்கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும்" என மாலையின் ரம்யத்தை ரசித்தபடி பாடிக்கொண்டிருந்த என்னை நோக்கி கொலை வெறியுடன் ஒடி வந்தது ஒர் ஜந்து.. அந்த ஜந்து வேறு யாரும் இல்ல என் தம்பி தான்.. கண்களில் வெறியுடன் என் வாயை பொத்தியவன்.. சட்டென்று என் கால்களில் விழுந்து வைத்தான்.

"அக்கா ப்ளீஸ்க்கா.. தயவு செஞ்சு பாடாதக்கா.. காதுல ரத்தம் வருது.. உன் தம்பி பாவம் இல்லையா.. நீ என்ன வேணும்னா சொல்லு நான் கேக்குறேன்.. பாட்டு பாடி மட்டும் கொல்லாதக்கா ப்ளீஸ்.."

"சரிடா சரிடா ஒவரா பண்ணாத..  கடைக்கு போய் ஆர்டர் பண்ண கேக்-ஐ வாங்கிட்டு வரியா..

அந்த கடைக்காரன் அண்ணானு கூப்பிட்டதுக்கு மூஞ்சிய தூக்குறான். சரியான ஜொள்ளுடா..”

"போக்கா ஆன்ட்டி மாறி இருக்கற பொண்ணு நம்மள அண்ணானு கூப்பிட்டுச்சேந்னு கடுப்பாயிருப்பான்.. நீயே போய் வாங்கு நான் ரெஸ்ட் எடுக்க போறேன்." என்றபடி ஒடிவிட்டான்.

“அய்யோ அந்த ஜொள்ள திரும்பவும் பாக்கணுமா.” என நொந்தபடி கடைக்கு சென்றேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.