(Reading time: 19 - 37 minutes)

ப்பாடி கடையில் அவன் இல்லை.. கடையில் இருந்த ஆளிடம் ஆர்டர் செய்த கேக்கை  கேட்டதற்கு உள்ளே சென்று அந்த ஜொல்லு பார்ட்டியை அழைத்து வந்தான் அந்த ஆள்..

"ஆர்டர் பண்ண கேக்-ஐ குடுங்க" என்றேன்.

அவன் பொறுங்க என்று சைகை காட்டியவாறு, இன்னொரு ஆசாமியிடம்..

"தம்பிவா வா என்ன வேணும்னு சொல்லு" என்று கேட்க,

அதற்கு வந்தவனும், "இரண்டு கிலோ பால்கோவா குடுங்க.. அப்பறம் வர வர அழகாயிட்டே போறீங்க. அஜித்குமார் மாறி இருக்கீங்க." என சொல்ல,

"இப்படிலாம் ஐஸ் வச்சா ஒசியா பால் கோவா தருவேன்னு பாத்தியா அதல்லாம் கிடைக்காது" என்றான் அந்த ஜொல்லு பார்ட்டி…

"அய்யோ ஓசி எல்லாம் எதும் வேண்டாம்ணே. உங்க அன்பு இருந்தா போதும்"

"நான் அன்பெல்லாம் ஆம்பள பசங்களுக்கு தர்றதில்ல தம்பி"

அருகில் இருந்த நான் அவனின் இந்த மொக்க ஜோக்கை கேட்டு சட்டென சிரித்து தொலைத்து விட்டேன். உடனே சுதாரித்தவாறு "சார் எனக்கு சீக்கிரம் கேக்-ஐ குடுங்க" என அவசரப்படுத்த,

“இந்தாங்க வெண்ணிலா.” என புன்னகையுடன் பார்சலை குடுத்து பணத்தை பெற்றுகொண்டான்.

“அய்யோ இந்த பக்கி என் fake பேர நியாபகம் வச்சுருக்கே. அவனின் மொக்கை ஜோக் மீண்டும் மனதில் வர, கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவாறே வீட்டிற்கு விரைந்தேன்.

அன்று அப்பாவின் பிறந்தநாளை கேக் வேட்டி  அமர்கக்ளமாய் கொண்டாடினோம்.

இரவு தூங்க செல்லுவதற்கு முன்னால் செல்லை நோண்டிக் கொண்டிருந்தேன். அப்போது 1 message received என மின்னியது. ஒரு புது நம்பரில் இருந்தது how s the cake vennila என்று message வந்திருந்தது.

“அந்த மொக்கை காமெடி msg அனுப்பியிருக்கே. reply பண்ணவா வேண்டாமா.” என யோசித்துவிட்டு, “நைஸ்..” என reply பண்ணிவிட்டு தூங்கினேன்.

மறுநாள் செல்போனை பார்த்தால், ஹாய் ஹலோ உடன் ஒரு Gud morning message. இவனுக்கு reply பண்ணியிருக்கக்கூடாது போலயே. MSG அனுப்புறானே. என்ன பண்ண?. பேசாம  block பண்ணிடலாமாந்னு யோசித்தவாறே, “எதுக்கு தேவையில்லாம msg பண்ணுறீங்கன்னு.” அனுப்பினேன்

“ஏங்க ஃப்ரெண்டுக்கு ஏதும் reason இருந்தாதான் Msg அனுப்பனுமா?.”

"யாரு ஃப்ரெண்ட்??!"

"நீங்க தான்!!"

"நான் எப்போ உங்க ஃப்ரெண்ட் ஆனேன்??? எனக்கு உங்க பேர் கூட தெரியாது.”

"என் மொக்கை ஜோக்குக்கு சிரிச்சீங்களே அப்பதான்.. By the way என்னோட பேரு பரத்."

“சிரிச்சது குத்தமாயா?.” என நினைத்தபடி "தெரியாம சிரிச்சுட்டேன் அதுக்காக எனக்கு இப்படி Msg அனுப்பாதிங்க. எனக்கு இதெல்லாம் பிடிக்காது புரியுதா." என சொன்னதும்

“ஓ.. சாரிங்க. உங்களை நல்ல ஃப்ரெண்டா நினைச்சு தான் Msg பண்ணினேன். பிடிக்கலைன்னா இனி Msg பண்ணலை… Bye.” என அனுப்பி விட்டான் அவன்.

“என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டான், ஒருவேளை நாமதான் தப்பா நினைச்சிட்டோமோ.” என ஒரு உறுத்தலாக இருக்க, “ஓகே.” என்று மட்டும் அனுப்பினேன். அதன் பிறகு அவனிடமிருந்து எந்த Msg-ம் வரவில்லை.

இரண்டு நாள் கழித்து ஒரு ப்ளாங்க் Msg வந்திருந்தது அவனின் எண்ணிலிருந்து. அடுத்த கொஞ்ச நேரத்திலேயே இன்னொரு Msg, “சாரிங்க தெரியாம ப்ளாங்க் Msg Send ஆகிட்டு. நான் அனுப்பலை, திட்டிறாதீங்க.” என்று வர, “ஹாஹா.” என அனுப்பி வைத்தேன்.

“என்ன சிரிக்குறீங்க?.”

“ஒன்னுமில்லை. எப்படி இருக்குறீங்க?.”

“ம்ம்.. சூப்பரா இருக்கேன். அப்போ என்னை ஃப்ரெண்டா அக்செப்ட் பண்ணிட்டீங்களா?. வாவ் நான் காண்பது கனவா நனவா?.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.