(Reading time: 19 - 37 minutes)

ஞ்சூஸ். கஞ்சூஸ். கேக் கேட்டா காசு கேக்குறான் பாரு.”

“ஹாஹா. சும்மா சொன்னேன்டி. உனக்கு இல்லாததா. கண்டிப்பா தரேன். ஆமா எனக்கு பர்த்டே கிஃப்ட் எல்லாம் கிடையாதா?.”

“என்ன வேணும் கேளு பரத்.”

“AMIL ஹோட்டலில் எங்கூட காஃபி சாப்பிட வரீயா?.”

“அய்யோ யாரும் பார்த்தா நான் காலி. நான் வரமாட்டேன் போ.”

“ப்ளீஸ். ப்ளீஸ்டி. பர்த்டே பேபிக்காக இதைகூட பண்ணமாட்டீயா?.”

“ம்ம். சரி வரேன். பட் காஃபி குடிச்சிட்டு உடனே கிளம்பிடுவேன் சரியா?.”

“ம்ம். சரி டார்லிங்க்..”

“நீ திருந்தவே மாட்ட.”

“ஹாஹா Bye dear.” என அவன் சொன்னதும், எனக்கு மிகவும் பிடித்த வையலட் நிற சுடிதாரை அணிந்து கொண்டு அளவாக மேக்கப் போட்டு ஹோட்டல் AMIL-க்கு என் ஸ்கூட்டியில் சென்றேன்.

எல்லோ கலர் ஷர்ட்டும், கருப்பு கலர் ஜீன்ஸுமாக அடர் கேசம் பறக்க பரத் நின்றிருந்தான். என்னை பார்த்தவுடன் கையசைத்து வரவேற்றான்.

சிறு புன்னகையுடன் அவனை பார்த்த நான், “ஹேப்பி பர்த்டே.” என்று கை குடுத்து விஷ் பண்ணினேன். கை கொடுத்தது தான் தாமதம், குற்றாலத்துல குளிச்சிட்டு வெளியே வந்ததும் நடுங்குமே அது மாதிரி என் கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சது.

“ஹேய். என்னாச்சு. ஏன் இப்படி நடுங்குற?.”

“ஒன்னுமில்லை கொஞ்சம் பயம் தான்.”

“உன்னை நான் கடிச்சா முழுங்கிட போறேன்?.”

“அப்படி இல்ல. இப்படி எல்லாம் அப்பா அம்மாக்கு தெரியாம அதும் தெரியாத ஆள் கூட வெளியே வந்தது இல்ல. அப்பா பாத்தா கொன்னுடுவாரு.”

“ஓ. அப்ப நான் மட்டும் டெய்லி ஒரு பொண்ணோட இங்க வந்து காஃபி குடிக்கிறேனா?. CHILL DEAR. நான் ஒன்னும் பண்ணிடமாட்டேன் உன்னை. சரியா?.”

“போதும் போதும் டியர் பயிருன்னு. இப்படி பேசாதன்னு சொன்னா கேட்கவே மாட்டீயா?.”

“சரி போதும் போதும். பர்த்டே அப்போவாச்சும் என்னை திட்டாம இரேன் டி.. வா உள்ளே போகலாம்.”

நானும் அவனும் உள்ளே போனோம். நெஞ்சு படபடவென அடிச்சது பக்கத்தில் உள்ளவருக்கே கேட்கும் அளவுக்கு. ஹோட்டலில் யாரும் இல்ல. ஒரு டேபிளில் இருவரும் அமர்ந்தோம். வெயிட்டரிடம் இரண்டு காஃபி ஆர்டர் செய்துவிட்டு என்னை குறுகுறுவென பார்த்தான்.

எனக்கு இன்னும் நடுக்கம் கொஞ்சம் கூட குறையலை. சர்வர் கொண்டு வந்த காஃபி கப்பை பிடித்து தூக்கினால் எங்கே கை தவறி கப்பை உடைத்திடுவேனோ என்ற அளவுக்கு கை நடுங்கியது.

பரத் இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். “இனிது இனிது.” படத்தை பார்த்து தொலைத்திருப்பான் போல. என்னை ரிலக்ஸ் செய்கிறேன் பேர்வழி என அவன் கைகளால் என் கைகளை அழுத்தி பிடித்தான்.

சட்டென்று கோபம் தலைக்கேற, என்ன செய்கிறேன் என்று கூட யோசிக்காமல், அவனை அறைந்துவிட்டேன். அவன் முகம் பார்க்க கூட பிடிக்காமல் வெளியே ஓடிவந்து வீட்டிற்கு விரைந்தேன்.

அவனிடம் பேசவே கூடாது என முடிவெடுத்து அவன் நம்பரை டெலீட் பண்ண செல்லை எடுத்த போது தான் கவனித்தேன், அவனிடமிருந்து வந்த 50 சாரி Msg-ஐ.

சாரி கேட்டால் பிடிச்சவங்களை உடனே மன்னித்துவிடும் குணம் எனக்கு. இருந்தாலும் கோவத்தை காட்டும் விதமாக கண்டபடி திட்டி தீர்த்தேன்.

“எருமை மாடு தயவு செஞ்சு எங்கிட்ட பேசாத.”

“சாரிப்பா.”

“உன்னை நம்பி வந்தா கையை பிடிப்பீயா. எவ்வளவு தைரியம் உனக்கு?”

“சாரி சாரி. நான் பண்ணினது தப்புதான்.”

“சாரி சொன்னா சரி ஆகிடுமா. தயவுசெஞ்சு இனி எங்கிட்ட பேசாத.”

“சரி. இனி நான் உங்கிட்ட பேசலை.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.