(Reading time: 19 - 37 minutes)

ய்யே. ஓவரா பண்ணாதீங்க. பாத்தா பாவமா வேற இருக்கு. ம்ம் ஃப்ரெண்ட் தான இருந்துட்டு போங்க.”

“ம்ம். சரி டியர்.”

“டியரா!!? பல்லை பேத்துடுவேன். டியரெல்லாம் சொல்ல கூடாது.”

“சரி டியர்னு சொல்லலை செல்லம்.”

“ஹேய். என்ன செல்லம் நொல்லம்னு”

“சரி சரி. கோவப்படாத. இனி அப்படி சொல்லமாட்டேன் சரியா.?.”

“ம்ம்.. சரி. Bye. நான் அப்புறம் பேசுறேன் Bye.”

“Bye Sweet Heart.”

“ஏய்.. உன்னை.” என நான் மிரட்ட, “ஹாஹா Bye.” என்றபடி சென்றுவிட்டான்.

ஏனோ அதிகம் உரிமையுடன் பேசும் அவன் மேல் கோபம் வந்தாலும் அவனை பிடித்தும் தான் இருந்தது.

மறுநாளில் இருந்து எப்போ பார்த்தாலும் அவன் Msg வந்துகொண்டே இருந்தது. சாப்பிட்டியா, தூங்கினீயா.. பல்லு தேய்ச்சீயா, கண்ணாடி பார்த்தியா, டீவி பார்த்தியா, என ஒரே Msg மாயம் தான்..

அவனுக்கு Reply பண்ணுகிறேன் பேர்வழின்னு தோசையை இரண்டு முறை கருக்கி, அடுப்பில் பாலை இருமுறை பொங்கவிட்டு, Hall Fan, Tv ஆஃப் பண்ணாமல் அம்மாவிடம் திட்டு வாங்கியது தான் மிச்சம்.

திடீரென்று ஒருநாள் அவனிமிருந்து எந்த ஒரு Msg-ம் வரலை.. முதலில் அப்பாடா இப்போதான் ஃப்ரீயா இருக்குன்னு தோணினாலும் நேரம் போக போக பயம் தொற்றிக்கொண்டது. அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?. என மனம் முழுவதும் குழப்பமும் பயமுமாக “ஹலோ.” என்று Msg அனுப்பினேன். ஒரு மணிநேரம் ஆகியும் எந்த பதிலும் வரவில்லை.

அடிக்கடி செல்லை பார்த்துகிட்டே இருந்தேன். ஏர்டெல் அனுப்பும் Msg வந்ததே தவிர அவனுடைய Msg வந்தபாடில்லை. அவனுக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு முடிவு பண்ணி உள்ளம் படபடத்த நேரத்தில் அவன் Msg வந்தது. பதறியபடி ஒப்பன் பண்ணி படித்தால்,

“ஹாய்.. பேபி என்ன பண்ணுற?.” என்று அனுப்பி வைத்திருந்தது அந்த பக்கி.

“பேபிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. எங்கடா போய் தொலைஞ்ச எருமைமாடு.”

“என்னடி. இன்னைக்கு ஓவரா எருமைன்னு எல்லாம் கொஞ்சுற?.”

“எங்க போனன்னு சொல்லி தொலை. நான் பயந்தே போயிட்டேன் தெரியுமா?.”

“தீபாவளி Sale da. சுத்தமா நகர கூட முடியலை. இப்போ கூட தூக்கத்தை கன்ட்ரோல் பண்ணிட்டு உனக்கு Msg பண்ணுறேன் செல்லம்.”

“ஓ. வேற ஒன்னும் இல்லல்ல. நீ நல்லாயிருக்கல்ல?.”

“நான் சூப்பரா இருக்கேன் எனக்கு ஒன்னும் ஆகலை. ம்ம் மாமா மேல அம்புட்டு பாசமா.. ஐ லவ் யூ பேபி..”

“ஹேய் எருமை உனக்கு ஏதோ ஆகிடுச்சோன்னு தான் பயந்துட்டேன். மத்தபடி ஒன்னுமில்லை. அதுக்காக உடனே ஐ லவ் யூ சொல்லுவீயா?. கொல்லப்போறேன் உன்னை. ஃப்ரெண்ட்ஸ்க்கு இடையில ஐ லவ் யூ, டியர், செல்லம், ஹனி, இதெல்லாம் தப்புடா.”

“நாம ஃப்ரெண்ட்ஸ் தான். ஆனா நான் உன்னை லவ் பண்ணுறேன் வெண்ணிலா.”

“லவ் பண்ணுறீயா?.”

“ஆமா லவ் பண்ணுறது என்னோட இஷ்டம் என் தனிப்பட்ட விருப்பம். அதுக்காக உன்னை லவ் பண்ண சொல்லி கேட்கமாட்டேன். ம்ம் Anyways I LOVE YOU CHELLAM.”

“அய்யோ உன்னை திருத்தவே முடியாது.” என சொல்லிவிட்டு வந்ததும் சற்று யோசித்தேன்.

லவ் பண்ணுறேன்னு அவன் பிதற்றியபோது கோபம் வந்தாலும் அவன் பத்திரமாய் இருக்கிறான் என்பதே மனதுக்கு நிம்மதியாய் இருந்தது.

சில நாட்கள் கழித்து அவன் பிறந்தநாள் வந்தது. போன் பண்ணி வாழ்த்தினேன்.

“ஹேப்பி பர்த்டே லூசு பரத்.”

“தேங்க்ஸ்டீ.”

“சரி பர்த்டேக்கு உங்க கடையில ஒரு கிலோ Black forest cake வேணும்.”

“400 ரூபாய் குடுத்து வாங்கிக்கோ.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.