(Reading time: 11 - 22 minutes)

களின் பேச்சு எதிர்பார்க்காத அதிர்ச்சியாக இருந்தது அன்னைக்கு. இருப்பினும் தாயாக எடுத்துரைக்க வேண்டுமே... “என்ன கண்ணு இப்படி சொல்லிட்ட படிக்காத மக்கா இருந்தது எங்களோட இருக்கட்டும்னு தானே அனுப்புறோம்... படுச்ச புள்ள நீயே இப்படி சொல்லலமா...”

“அட போங்கம்மா...” என்று விழி இமைகளை முட்டி உடைத்துக்கொண்டு வெளிதே வந்த கண்ணீரை தலையணைக்கு சமர்ப்பணம் செய்ய துவங்கினாள்.

என்னதான் மகள் அழுவது மனகசப்பை தந்தாலும் நல்லது எது என்று அவளுக்கே புரிந்து போகும் என்று மகளின் தலையை கோதிவிட்டு சென்றார் வள்ளி.

புகழ் பெற்ற கல்லூரி தான் யார் இல்லையென்று கூறியது ஆனால் பல மையில் தாண்டியல்லவா போக வேண்டும்... இம்முறை வள்ளி நாச்சியாருக்கு முகம் வாடி போயிற்று. அதுவும் மகள் அப்படி பேசியபின்பு இன்னும் நொந்துப் போனது, ஆனால் வெளியே காட்டிகொள்ளாமல் நெற்றி முகர்ந்து முத்தமிட்டு அனுப்பிவைத்தார் பட்டிணத்திற்கு..

பக்கம் பக்கமாக பேசிய உறவினர் ஏனோ முதல் முறை விட்டு சென்றதோடு சரி வந்து பார்க்கவும் இல்லை, அழைத்து பேசவும் இல்லை... ஹ்ம்ம் வீடு வரை உறவு... என்று கூறுவது இதுதான் போலும் என்று நினைத்துக்கொண்டாள் மலர். சில நாட்களுக்கு இந்த கல்லூரியில் சேர்த்துவிட்டதற்காக மனதிற்குள்ளேயே திட்டியும் கோவத்தை தீர்த்தாயிற்று... பின்பு வீட்டிற்கு செல்லும் நாட்கள் எண்ணியே காலத்தை ஓட்ட கற்றுக்கொண்டாள். முதல் 6 மாதம், இரண்டாம் 6 மாதம், தீபாவளி விடுமுறை, பொங்கல் விடுமுறை... இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது கிடைத்த விடுமுறை... திருவிழா காலம் தான்.

இதோ கடைசி வருடம் இதோ முடிய போகிறது எண்ணி எண்ணி மனம் மகிழ்ச்சியில்  கொப்பளித்தது... எப்போதும் போல நல்ல மதிப்பெண் கூடவே வேலையும் வந்து ஒட்டிகொண்டது... ஆனால் வீட்டில் சொல்லவில்லை... அதைவிட வீட்டிற்கு செல்ல போகும் உற்சாகம் தான் தலைகேறியது. பேருந்து பயணம் துவங்கியாயிற்று... 50 மையில் கடந்தாயிற்று... 100 மையில் சென்றுவிட்டது... தூரத்தை எண்ணிக்கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்தாள். காலடி மண்ணில் பட்டதும் தார தப்பட்டையெல்லாம் தடபுடலாக வரவேற்றது அவளை... பெரும் அதிர்ச்சி, அதிர்ச்சி கலந்த ஆனந்தம்.. வீடே விழா கோலம் தான், வீடெல்லாம் உறவினர்கள்... என்னவோ ஏதோ என்று எண்ணிக்கொண்டிருக்க நிஜமாகவே ஊர் திருவிழா 2 நாட்களில் இருந்தது... மீண்டும் ஒரு பெருமூச்சு வெளியேறியது அவளிடம்...

சொல்லாமல் விட்ட செய்தி வெளிவரும் வேளையும் வந்தது, வீட்டின் தோற்றம் அவளுக்காக மாறி இருந்தது கம்ப்யூட்டர், பெரிய டிவி என்று கொஞ்சம் மாற்றங்களோடு இருந்தது. அவள் ஒரு நாள் கம்ப்யூட்டரில் கம்பனி வந்து சேரும் நாள் குறித்து பார்த்துகொண்டிருந்த போது அவளது உறவுகார பெண் பார்த்துவிட்டு உற்சாகத்தில் கத்தியும்விட்டாள்.

“அத்தை மாமா... இங்க வாங்க மலர்க்கு பெரிய நிறுவனத்துல வேலை கிடச்சுருக்கு... வந்து பாருங்க...” என்று அவள் கத்தவும் மொத்த குடும்பமும் வந்துவிட்டது... மலருக்கும் சொல்லவேண்டும் என்று ஆசைதான்... படித்ததற்கு நல்ல வேலை தான் கிடைத்திருந்தது... ஆனால் வீட்டில் இருக்க முடியாதே... அந்த பயத்தில் தான் அவள் சொல்லாமல் மறைத்தாள்.

“எங்க வேலை மாமா?”

“பெங்களூருல... பெரிய கம்பெனில வேலை கிடச்சுருக்கு” என்று பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார் செல்லப்பன்.

“எப்போ சேரனுமாம்?”

“இன்னும் 3 வாரத்துல...”

“பலே பலே... அப்போ புள்ளைக்கு அங்கேயே மாப்பிளைய பார்க்கவேண்டியதுதான்...” என்றார் ஒரு பெரியவர். அவ்வளவு தான் நெஞ்சு கூட்டுக்குள் இருக்க வேண்டிய இதயம் தொண்டையில் துடிக்க துவங்கிவிட்டது மலருக்கு... எங்கிருந்து தான் கிளம்பி வருவாங்கன்னு தெரியலையே என்று மனதில் திட்டிக்கொண்டு இருந்தாள் அவரை, அதோடு கண்ணெடுக்காமல் தந்தையையே பார்த்துகொண்டிருந்தாள்.

“அதுக்குள்ள என்னப்பா அவசரம் புள்ளைக்கு இப்பதானே 21 ஆவுது...” என்று செல்லப்பன் ஆரம்பிக்கும் போதே சொந்த கார பெண் ஒருத்தர் ஆரம்பித்துவிட்டார்... “நீங்க என்ன சித்தப்பா... இத்தனை நாள் புள்ள பத்திரமா படிக்குற எடத்துல இருக்க ஹாஸ்டல்ல தங்கிருந்துச்சு. இனிமே அப்படி நம்பி இருக்க முடியுமா... ஊரு எப்புடி கெட்டு போயிருக்கு” என்று ஒருபக்கம் அவர் கூற... “அட ஆமா செல்லப்பா... நம்ம ராஜாத்தி பையே கூட பெங்களூருல தானே வேலை பார்க்குறான் அவனை வேணும்னா விசாருச்சு பாரு...” என்று வீட்டு பெரியவர் மற்றவர் கூறினார்.

நிமிட பேச்சுக்கள் வளர்ந்து மணிகணக்காக மாறியது... கடைசியாக மலருக்கு பாதுகாப்பு என்று எதிர்மறை முடிவு தான் வந்தது.

“அம்மா இந்த முறையாவது நான் என்ன சொல்லவரேன்னு கேளுங்களேன். அப்பாகிட்ட சொல்லுங்க அம்மா... ப்ளீஸ்...”

அவள் பேச துவங்கும் போதே மலரின் கண்ணில் நீர் கோர்த்துவிட்டது. “நான் சொல்லி பார்த்துட்டேனே கண்ணு... அப்பச்சி அத்தாச்சி எல்லாம் அந்த ஊரை பத்தி வேற மாதிரி சொல்லுறாங்களே.. நாங்க எப்புடி கண்ணு உன்ன தனியா அனுப்புறது.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.