(Reading time: 9 - 17 minutes)

பெண் ஷக்தி மாணவர் ஷக்தி

பவித்ரா கையாண்ட யுக்தி

அனைத்து திட்டத் துவக்கம்

அவரவர் வீட்டிலிருந்து என்றே முழக்கம் (23)

 

இலக்கை அடைந்த பின்னும்

அவள் புகழை தொடர்ந்தார் ஓட்டுனரும்

இல்லை அவருக்கு சொந்த பந்தம்

அவனுக்கு கொசுறாக இச்செய்தியும் (24)

 

கற்பனை விரிந்தது அனுபவசாலி போலும்

காணலாம் நாளை ஆட்ட மைதானத்திலும்

சந்தர்ப்பம் கிடைப்பின் பாராட்ட வேண்டும்

சிறக்கட்டும் உங்கள் பணியென வாழ்த்த வேண்டும் (25)

 

மலைத்துப் போனாள் பவித்ரா

மைதானத்தில் இத்தனை ஜனத்திரளா

அவள் அறியாள் கிரிக்கெட் ஆட்டம்

அங்கு கருணா கருணா என உச்சாடனம் (26)

 

கேட்டே விட்டாள் யாரது கருணா

கேட்ட நொடி கேள்வியின் நாயகனே

காட்சியில் தோன்றி விட்டானே(27)

 

ஆட்டத்தின் இறுதியின் விறுவிறுப்பு

அரங்கமே கொண்டது பரபரப்பு

கருணா வருவான் முன்னே - வெற்றிக்

கோப்பை வரும் பின்னே (28)

 

கேட்டறிந்தாள் அவன் சிறப்பு

கண்டு தெளிந்தாள் மக்கள் ஆதரவு (29)

 

அவருக்கிருக்கும் ரசிகர் கூட்டம்

அவர் மொழிந்தால் தலையை ஆட்டும்

பலவித வளர்ச்சி திட்ட விளம்பரம்

பங்கெடுக்க சம்மதம் கேட்க வேண்டும்(30)

 

சட்டென அமைதியானது அரங்கமே

சந்திக்கவிருக்கிறான் இறுதி பந்தினையே

மூன்று ரன் வேண்டும் வெற்றி மாலை சூட

மூவிரண்டு  வேண்டும் அவன் சதம் பூர்த்தி பெற(31)

 

இயல்பாய் அவளும் கூர்ந்து நோக்கினாள்

இருக்கையின் நுனிக்கு எப்போது நகர்ந்திருந்தாள்

இமை மூடித் திறக்கும் அந்த  ஓர் நொடி

இறுதி பந்து வீற்றிருந்தது அவள் மடி(32)

 

உற்சாகம் தொற்றிக் கொண்டது அவளையும்

உயர்த்தினான் தன் மட்டையை அவள் புறம்

அவளிரு  கரங்களுக்குள் அவனடித்த பந்து பத்திரம்

அவனறியாமல்  இதழ்கள் வரைந்தன புன்னகை சித்திரம்(33)

 

பரிசளிப்பு மேடையில்

அவள் அறிமுகம்

பார்த்தவன் திகைத்தான்

அவன் இதயத் துடிப்பு அதிவேகம்(34)

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.