(Reading time: 9 - 17 minutes)

வனைக் கண்டவள்

மனதிலும் சிறு மின்னல்

அடைத்தல்லவா வைத்திருந்தாள்

இறுக்கமாய் இதய ஜன்னல்(35)

 

ஆட்டநாயகன் தொடர்நாயகன்

விருது அவனது இப்போது

பவித்ரா இதய நாயகன்

ஆவது என்பது எப்போது (36)

 

மாவட்ட ஆட்சியர் தலைமையில்

மாலையில் தேநீர் விருந்தினில்

மனங்கவர்ந்தவள் கோரிக்கைக்கும் உடன்பட்டு

மன்னவன் உளம் கனிந்த பாராட்டு(37)

 

எதற்கு தேடுகிறாள் அவனை இணையத்தில்

ஏனோ கண்ட தகவல்களில் முகம் வாட்டத்தில்

ஆண் என்றாலே ஆறடி தள்ளி நிறுத்தும்

அவள் சிந்தை சற்றே தடுமாற்றத்தில் (38)

 

கீறி விட்டாள் தன் வடுவை

கசிந்தது குருதி சகித்தாள் வலியை

மிருகம் கூட வயிற்றுப் பசிக்கு இரை தேடும்

மனித கயவர் வேட்கைக்கு பெண்மை பலியாகும் (39)

 

அனுபவித்து அறிந்தவள் நானே

அதை மறந்து போதல் முறையாமோ

அவன் மன்மத லீலைகள் வலையிலே

அவனும் அதே இனம்  என்பது மாறிடுமோ(40)

 

அறிவில் கலைமகள் அழகில் திருமகள்

அதிகார தோரணையில் கம்பீர  மலைமகள் 

சம்மதம் சொல்வாளோ என் சதி

சேர்த்து வைக்குமோ விதி (41)

 

முதன் முதலாய்  காதல் மயக்கம்

மனதிலே இன்பத்தின் ப்ரவாகம்

எந்தப் பெண்ணிடமும் தோன்றா உணர்வு

என் பவித்ராவோடு இனி என் வாழ்வு (42)

 

ஒரு முறை மனதில் இயற்றிவிட்டால்

ஒரு நாளும் மாறாது  அவன் உறுதி

தூய அன்பையும் காதலையும் ஏந்தி நின்றால்

தன் வசமாகும் இது இயற்கை நியதி(43)

 

நல்லெண்ண தூதுவராக - அவள்

நலத்திட்டங்களை கொண்டு சேர்த்தான்

நல்ல நண்பனாய் ஏற்கிறேன்

நங்கை கூறிட அதிர்ந்து நின்றான்(44)

 

சொந்தம் ஏதும் உனக்கில்லை

சுற்றதோர் கூற அறிவேன்

யாதுமாகி என்றும் நானிருப்பேன்

யாசிக்கிறேன் உன் காதலை  நான்(45)

 

அகம் காதல் சுமந்திருக்க

முக நக நட்பு சாத்தியமன்று

அர்தாங்கினியாகவே நீ சம்மதிக்க

முழுமை அடைவேன் நானும் இன்று(46) 

 

சகதர்மினியாய் வேண்டி நின்ற அவன் மொழிகள்

சத்தியமே என சாட்சி சொல்லின விழிகள்

இவளின் மனதோரம் சில்லென்ற சாரல்

இறுகிய பாறையில் மெல்லிய விரிசல்(47)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.