(Reading time: 9 - 17 minutes)

காவலில்லா ரோஜாப் பூந்தோட்டம்

காமுக கயவர்கள் கண் பட

மனதின் திடமே முள்ளெனும் அரணாய்

மங்கையும் நிமிர்ந்த நடை போட(10)

 

அன்றொரு  மழைக்கால மாலையில்

ஆள் அரவமற்ற சாலையில்

வெறி கொண்ட அரக்கர் பிடியில்

வஞ்சியவள் துடித்தாள் வலியில்(11)

 

துஷ்டரின் வேட்டையில் 

துவண்டது அவள் தேகம்

தெய்வத்தின்  தீர்ப்பில்

தாக்கியது இடி முழக்கம் (12)

 

இழைத்தனர் தீங்கு

கிடைத்தது தண்டனை

இரையானவள் உள்ளம் இங்கு

கருகிப் போனது யார் பிழை (13)

 

காலம் தோற்று போனது

மனக் காயம் ஆற்ற

கன்னிகை  ஜெயித்து நின்றாள்

மாவட்ட ஆட்சியாளராக(14)

 

கருணா களமிறங்கினால்

கரகோஷம் விண்ணை அடையும்

கையில் மட்டை பிடித்தால்

கிரிக்கெட் மைதானமே அதிரும்(15)

 

பந்து தவமிருக்கும் போலும்

பவுலரின் கைகளிலிருந்து விடுதலை

சிக்ஸரில் சாபவிமோசனம்

சகலகலா கருணாவின்  லீலை (16)

 

விசிறிகள் ஏராளம்

வம்புகளும் தாராளம்

வலை நழுவும் மீனின் லாவகம்

வழுவாத ஒழுக்கம் இவன் தாரக மந்திரம்(17)

 

இருபது ஓவர் உலகக் கோப்பை

இறுதி ஆட்டம் மறுநாளை

நடக்கவிருக்கும் மைதானம்

நாயகி பொறுப்பிலிருக்கும் நகரம்(18)

 

எல்லையில் பதற்றம்

எதிலும் தேவை அதிக கவனம்

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

பவித்ரா இயற்றினாள் சிறப்பாணைகள்(19)

 

இப்படி ஒரு அழகான இந்திய நகரம்

இதுவரை கண்டதில்லை நானும்

பிளாஸ்டிக் பாலிதீன் தடையும்

பசுமையும் தூய்மையும்(20)

 

வேடிக்கை பார்த்தவன் வியக்க

வாகன ஓட்டுநர்  தொடர(21)

 

எங்கள் கலெக்டரம்மா கைவண்ணம்

எங்கும் அமைதி சுத்தம் சுகாதாரம்

குற்றம் குறைந்து  நிறைய முன்னேற்றம் 

கடின முயற்சியின் பலனே அத்தனையும்(22)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.