(Reading time: 10 - 19 minutes)

ண்டாப்பா அப்ப எங்க ரூபா என்ன கள்ளப் பணமா, கஷ்டப் பட்டு சேர்த்தக் காசுடா. முகம் சுருங்கினாள்.

ஏண்டா எங்க அம்மா கவலைப் படுறாங்கன்னு உன்னை ஹெல்ப்புக்கு கூப்பிட்டா அம்மாவுக்கு டென்ஷனா குடுக்குற நீ….

ஏய் போடி….நான் தான் அம்மா கிட்ட பேசுறேன்ல, பிறகு நீ என்னத்துக்கு இடையில வந்து பேசிக்கிட்டு, உனக்கு நாட்டுல நடக்குற நிலவரம் ஒண்ணும் தெரியாதாக்கும், குப்பை கூளம் போல அங்கங்க ரூபா நோட்ட எரிக்கிறாங்க , துண்டு துண்டா வெட்டி வீசுறானுங்க……..நம்ம சொந்தமா சம்பாதிச்ச பணமா இருந்தாலும் அத முறைப்படி பேங்கில கட்டுற வரைக்கும் நமக்கு டென்ஷன் தான அதச் சொன்னேன்.

ஏண்டாப்பா தூரப் போடுற அந்த ரூபாய கஷ்டப் பட்ட மக்களுக்கு கொடுத்து உதவக் கூடாதாப்பா………..

அந்தக் கவல எல்லாம் நம்ம மாதிரி மாச சம்பள ஆட்களுக்கு எதுக்கும்மா? பணக்காரங்களாச்சு , அவங்க பணமாச்சு. நீங்க உங்க ரூபாயை எப்படி சுமி அப்பாக்கு தெரியாம வெளியில கொண்டு வர்றது, பேங்க்ல எப்படி போடுறதுன்னு யோசிங்க , நானும் உங்களுக்கு துணையா வரேன் சரியா?

ருவழியாக ஞாயிற்றுக்கிழமை ரூபாயை எப்படியோ வீட்டிற்குள்ளிருந்து வெளியேக் கொண்டு வந்து பேங்க் வாசலில் வந்து நின்றால் அங்கோ அரைக் கிலோ மீட்டர் வரை கூட்டம் வரிசையாக நின்றது. வறியவர்கள், மதிய வர்க்கத்தினர், வயதானவர்கள் , இளைஞர்கள், மத்திம வயதினர் என்று அனைத்து தரப்பினரும் நின்றனர்.

வெயிலில் வாடி வதங்கி நின்ற அம்மாவிற்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்து மாற்றி நின்றாள் சுமித்ரா. முகேஷிம் கூடவே இருந்தான். மதியம் லன்ச் அவர் தாண்டியும் இன்னும் அவர்கள் வரிசை கிட்டே வந்திருக்கவில்லை. 

இப்போது அம்மாவிற்கு தலைச்சுற்றி விட சுமி முகேஷை வரிசையில் நிற்க வைத்து விட்டு அம்மாவை அழைத்துச் சென்று நிழலில் இளைப்பாறச் செய்தாள். 

தான் இன்னும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்காதது குறித்து மனதில் வருந்திக் கொண்டவாறே 

“முகேஷ் லைன் கிட்ட வந்ததும் கூப்பிடுடா , அம்மாவை எழுப்பி வரச் சொல்றேன்.” என்று அவனிடம் சொல்லியிருந்ததாள் 

அதான் ஸ்லிப் நிறைச்சாச்சு இல்ல, மத்த தேவையான எல்லா பேப்பர்ஸும் வச்சிருக்கேன் தேவைப்பட்டா உனக்கு கால் செஞ்சு கூப்பிடுறேன்..

சில மணித்துளிகள் கழிந்தது, இன்னும் முகேஷின் ஃபோன் கால் வரவில்லை. அம்மாவிற்கோ வருடக் கணக்காக சேர்த்த பணத்தை எவ்வாறு பத்திரப் படுத்துவது என்றுக் கவலை. நான்கு நாட்களாக அவள் புலம்புவது நிற்கவில்லையே….

மொத்த ரூபாயையும் வாங்கிக்குவாங்களா இல்ல கொஞ்ச கொஞ்சமா டெபாஸிட் செய்யணுமா? ஒண்ணுமே தெரியலியே இன்னிக்கே எப்படியோ உங்க அப்பா கிட்ட பொய் சொல்லிட்டு வந்தாச்சு , தினமும் வரணும் இப்படி லைன்ல நிக்கணும்னா அப்பாடி ….. நம்மால முடியாதுப்பா….

மறுபடியும் புலம்ப….

சற்று நேரத்தில் சந்திரமுகி ஜோதிகாவிற்கு போட்டியாக தலைக் கலைந்து, கண்கள் சிவந்து, சட்டை கசங்கி, தலைச் சுற்றி களைப்பில் கிறங்கியவனாக முகேஷ் அவர்கள் எதிரில் வந்து நின்றான்.

என்னடா வந்துட்ட , டெபாஸிட் பண்ணிட்டியா?.....இது சுமி

எல்லா ரூபாயும் வாங்கிகிட்டாங்களா முகேஷீ….. இது அம்மா.

பதிலே சொல்லாம சோகமா நிக்குது பாரு பக்கி…… பையை திறந்து பாரும்மா இவன் ஸ்கூல்லருந்தே இப்படித்தான் பேச வேண்டிய நேரத்துல பேச மாட்டான், மத்த நேரத்துல வாய் கிழிய பேசுவான்.

அவன் கையிலிருந்த ரூபாய் பையை பிடுங்கி திறந்தாள் சுமி, ஆர்வமாய் அம்மா அதை எட்டிப் பார்க்க, களைப்பில் இருந்த முகேஷ் எல்லாம் டெபாஸிட் பண்ணியாச்சு.பையில இருந்த ரூபா……….எல்லாமே முடிஞ்சிப் போச்சு, என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி….!

This is entry #11 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ் நிலைக் கதை - முடிவுக்கான கதை

எழுத்தாளர் - ஜான்சி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.