(Reading time: 7 - 14 minutes)

ரு நாள் வீட்டில் சண்டை போட்டான் என்றால், ஒரு நாள் தெருவில் விழுந்து கிடப்பான். இல்லை எனில் யாருடனாவது சண்டையிழுப்பான். வீடு வந்து சேரவில்லை எனில் மகன்கள் இருவரும் சல்லடைப்போட்டு தேடிக்கண்டுபிடித்து வீட்டிற்கு தூக்கி வருவர்.

சில சமயம் இராமசாமியிடம் பஞ்சாயத்து வரும். இராமசாமி, தான் இருதலைக் கொள்ளியாகத் தவிப்பார்.

இத்தகைய நிலையில் இராஜாமணி இறந்துவிட்டார்… என்ற செய்தி இராமசாமியின் காதிற்கு எட்டியது.

“மரகதம்… மரகதம்… சீக்கிரம் கிளம்பு இராஜாமணி இறந்துட்டானாம்.”

“என்னங்க… என்ன சொல்லறிங்க! இராஜா அண்ணன் இறந்துட்டாறா?”

“ஆமாம்!... ஆமாம்!... இப்பதான் அந்த குடும்பம் நிம்மதி அடைந்திருக்கும். இனிமேலாவது அந்த குடும்பம் சந்தோஷமா இருக்கட்டும். அவன் எப்ப செத்து தொலைவான் என்றுதானே எதிர்பார்த்தாங்க. இப்ப அது நடந்துடுத்து. இனி என்ன தொல்லை இருக்கப் போகுது.” இனிமே அவுங்க நிம்மதியா இருக்கலாம். சரி... சரி… புறப்படு போகலாம்.

ஆனால் அவர்கள் அங்கு கண்ட காட்சி அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததோடு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் தடுத்தது.

அழுது அழுது முகம் ஊதியிருந்த சுமதி, இவர்களைக் கண்டதும் கதறி அழலானாள்.

“வாங்கண்ணா!... வாங்க… அவர் நிலையைப் பார்த்திங்களா? சாகற வயசாண்ணா இது, எங்களை எல்லாம் அனாதையா விட்டுட்டுப் போயிட்டாரே. இனிமே எங்களுக்குனு யாருண்ணா இருக்காங்க,” என்று புலம்பிய சுமதி, இராஜாமணியை படுக்கவைத்திருந்த பக்கமாகத் திரும்பி…

“சாமி! எங்களை எல்லாம் விட்டுட்டு போக எப்படி மனசு வந்தது. இனி யாருகிட்ட போயி சண்டைப் போடுவோம், இன்னும் பலப்பல சுமதி சொல்லி அழ,

“அப்பா!... அப்பா!... இங்கப்பாருங்கப்பா? இனி யாரை அப்பானு நாங்க கூப்பிடுவோம், எழுந்திருங்கப்பா… எழுந்திருங்கப்பா!... எங்களை தனியா விட்டுட்டுப் போயிட்டிங்களே! இனி எங்களுக்கு யாருப்பா துணையா இருப்பாங்க,”என்று அவரின் மகன்கள் கதற..,

இராமசாமிக்கும், மரகதத்துக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  

இவர்கள் வேறு ஒன்று நினைத்து வர… இங்கு நடப்பதோ வேறு ஒன்று, என்னவென்று சொல்வது, திருமணம் இரு உள்ளங்களையும் உடலையும் மட்டும் இணைக்கவில்லை. அதையும் தாண்டிய பந்தத்தையும், பாசத்தையும் இணைக்கிறது.ஒருவருக்குள் ஒருவர் என்னதான் தவறு செய்யும் போது கோபமும்,வெறுப்பும் ஏற்படத்தான் செய்கிறது.  

ஒரு பெண் என்பவள் முதலில் தந்தைக்காகவும் பின் தமையனுக்காகவும்,திருமணம் ஆனபின் கணவனுக்காகவும், பிள்ளைக்காகவும் வாழ்கிறாள் . அவர்களில் யார் தவறு செய்தாலு;ம் மன்னிக்க மாட்டார்கள் . அதுவே கணவன் பல தவறு புரிந்தாலும் மறந்துவிடுவர்.

இருக்கும் வரை கணவன் செய்யும் செயலை வெறுத்தாலும், தூற்றினாலும் அவன் இறப்பை; இரத்த பந்தத்தாலும், தாலிக்கொடியாலும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதை அறுபத்தைந்து வயதான இராமசாமி அன்றுதான் உணர்ந்தார்.

“இம்!... இதுதான் திருமண பந்தம் என்பதோ!...” பெருமூச்சி மட்டும் வெளிபட்டது.

மரகதத்தை அழைத்துக்கொண்டு நடந்தார்…  

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பர். ஆனால் எல்லோருடைய திருமண வாழ்க்கையும் சந்தோசமாக இருப்பதில்லை.  

திருமணம் நடந்து , சந்;தோசமாக வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் , பிள்ளைகளை பெற்றெடுத்து காலங்கள் பல கடந்த பின்னும்; கணவன் , மனைவிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கிறது கோபதாபங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. குடி ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றியமைத்துவிடுகிறது. குடி; ஒரு மனிதனின் திருமண வாழ்க்கையையே அழித்துவிடுகிறது.

ஆனாலும் ஒருவர் இழப்பை ஒருவரால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை இக்கதையின் மூலம் அறியமுடிகிறது.   

நன்றி,   

இப்படிக்கு,   

மங்கலஷ்மி

 

This is entry #17 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை 

எழுத்தாளர் - மங்கலஷ்மி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.