(Reading time: 12 - 23 minutes)

பார்றா என்ன மரியாதையெல்லாம் ஒழுங்கா எப்பவும் போல பேசு செல்லகுட்டி என்று பேசியவாறே அவளை முன்னோக்கி அழைத்துச் சென்று எதிலோ அமர வைத்தான் சட்டென கையகற்ற அவள் அமர்ந்திருந்தது சிறிய அழகான ஊஞ்சலில்..ம்ம் என்பதற்குள் கண்ணீர் கண்களை மறைக்க தாமதிக்காமல் தன்னவனை இறுக்கி அணைத்து கொண்டாள் மறுப்பேதும் கூறாமல் தன்னோடு சேர்த்துகொண்டான் அந்த அன்பு காதலன்..

சில நிமிடங்களில் அவனை விட்டு நகர்ந்தவள்தேங்க் யு சோ மச் சர்வேஷ்..என்று முடிப்பதற்குள் அவள் வாயை கை வைத்து மூடியவன் நா தான் உனக்கு மொதல்ல சாரி சொல்லனும் இங்க வா உக்காரு..புரியாமல் பார்த்தவளை அமர்த்தி அவளை உரசியவாறே அமர்ந்தான்..

சாரி தன்யா மேரேஜ் பிக்ஸ் ஆனதுல இருந்து நா ரொம்ப ஹார்ஷ்ஷா பிகேவ் பண்ணிட்டேன்..பட் எதுவுமே மனசறிஞ்சு பண்ணலடீ பயங்கர டென்ஷன் அப்பா ஒரு பக்கம் மாமா ஒருபக்கம்நு போட்டு வறுத்தெடுத்துட்டாங்க எங்க உன்ன மிஸ் பண்ணிருவேனோனு என்ன அறியாம ஏதோ ஒரு பயம்..ஆபீஸ் டென்ஷன் வீட்டு டென்ஷன் யார்ட்ட காட்டுறதுநு தெரியாம எனக்கே தெரியாம உன்கிட்ட காட்டிருக்கேன்..அது எனக்கு புரிஞ்சப்போ ரொம்ப கஷ்டப்பட்டேன்..கல்யாணத்துக்கு அப்பறம் ஒருசெகண்ட் கூட உன்ன கஷ்டப்படாம பாத்துக்கனும்நு முடிவு பண்ணேன்..ஆனா அப்போவே அதெல்லாம் காட்டிக்கல ஒரு சின்ன சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டுமேநு அமைதியா இருந்தேன்..இந்த கொஞ்ச நாள்ல நீஎன்னபத்தி என்ன வேணா நினைச்சுருக்கலாம் ஏன் என்மேல இருந்த நம்பிக்கை கூட குறைஞ்சுருக்கலாம் அத நா தப்பு சொல்ல மாட்டேன்..அதுக்கு காரணம் நா நடந்துகிட்டதுதான்..ஆனா இனி சின்னதா கூட அந்த நினைப்பு உனக்கு வர வேண்டாம் நா வர விடவும் மாட்டேன்..என்னைக்குமே நா உன்னோட பழைய சர்வேஷ்தான்..3 வருஷத்துக்கு முன்னாடி எவ்ளோ லவ்வோட உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணிணணோ அந்த லவ் துளியும் குறையாம அப்படியேதான் இருக்கு இன்னும் அதிகமாவேணா ஆயிருக்கு..ப்ளீஸ்டீ என்ன புரிஞ்சுப்பல..என் பீலிங்க்ஸ்ஸ உன்கிட்ட மட்டும் தான் ஒளிவுமறைவில்லாம காட்ட முடியுது தப்பா எடுத்துக்காத..என பாவமாய் பார்க்க..

தன்யாவோ மொத்தமாய் வாயடைத்து போயிருந்தாள்..என்னவெல்லாம் நினைத்துவிட்டாள் இப்படிபட்டவனை..நினைவிலேயென்றாலும் அவள் செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..அவன் நிலைமையை புரிந்து  கொள்ளாமல் போனேனே..என எண்ணி மருகியவளுக்கு பேச வார்த்தை கிடைக்காமல் தன்னவனோடு இணைந்து கொண்டாள்..அழுதழுது ஒரு வழியாய் ஓய்ந்தவளை அருகிலிருந்தவன் பாவமாய் பார்க்க,

என்னாச்சு சர்வேஷ்..

பின்ன இவ்ளோ கஷ்டப்பட்டு டெக்கரேஷன்லா பண்ணிருக்காங்க நா எவ்ளோ கஷ்டப்பட்டு உனக்கு சர்ப்ரைஸ்லா குடுத்தேன் நீ என்னடானா மெகாசீரியல் மாறி அழுகாச்சீ சீன்ன மட்டுமே போட்டுட்டு இருக்கியே..

அவனை முறைக்க நினைத்தவள் முடியாமல் சிரித்தவாறே தன்னவனை துரத்த அழகாய் அரங்கேறியது அழகிய தம்பதிகளின் காதல் பயணத்தின் அடுத்த தேடல்..

இது இந்த காலத்தின் எதார்த்தம்..காதலர்களின் புரிவுணர்வும் நெருக்கமும் அன்பும் பெரியவர்களின் தலையீடு வரும் நேரத்தில் சிலருக்கு இரட்டிப்பாகும் சிலருக்கு பாதியாகும்..இன்டர்காஸ்ட் ஆர் இன்டர் ரிலிஜன் திருமணம் என்பதை ஏற்றுக்கொள்ள பெரியவர்களுக்கு கொஞ்சம் அல்ல நிறையவே நேரம் தேவைபடும்..அதை பக்குவமாய் எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் காதலர்களையே சாரும் அதே நேரம் தங்களின் காதலையும்  கெட்டியாய் பிடித்து கொண்டு அதை துடுப்பாய் பயன்படுத்தி காதல் அலைகளில் மிதந்தவர்கள் குடும்பமெனும் கடலில் குளித்து முத்தெடுக்க தயாராக வேண்டும்..

காதல்/திருமணம் என்றவுடன் ஏனோ இந்த கோணத்தில்தான் எழுத தோன்றியது..நானே என் தோழமைகளிடம் கண்ட ஒன்று..ஆனால் அனைத்தையும் மீறி மகிழ்ச்சியாய் தன்னவளோ/தன்னவனோடு மணமேடையில் நிற்கும் தருணத்தில் முகத்தில் இருக்கும் பூரிப்பிற்கு ஈடு இணையே கிடையாது..இன்றைய காலகட்டத்தில் சாதி மதங்களை தாண்டிய திருமணங்கள் அதிகரித்துவிட்டன எனினும் அதன் பிண்ணணிகளில் இதுபோன்ற சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்க போவதில்லை..அனைத்தையும் தாண்டி பெண்ணோ அல்லது ஆணோ எந்த ஒரு கட்டத்திலும் நாம் துணையை தேர்வு செய்வதில் தவறான முடிவு எடுத்துவிட்டோமோ என ஒருமுறை கூட எண்ணிவிட கூடாது..அதுவே அவர்களின் காதல் முழுமையடைந்ததற்கான அடையாளம் என்பது என் கருத்து..

 

This is entry #22 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - ஸ்ரீ

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.