(Reading time: 45 - 90 minutes)

2017 போட்டி சிறுகதை 23 - அன்புத்தோழி நீ..  ஆலம் விழுது நீ.. - தங்கமணி சுவாமினாதன்

This is entry #23 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - தங்கமணி சுவாமினாதன்

Friends

காலை முதலே மிகுந்த பரபரப்போடு இருந்தார் டாக்டர். பவித்ரா பம்பாய் செம்பூர் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற கைராசிக்காரர் என்ற பெயர்பெற்ற மகப்பேறு மருத்துவர். ஐம்பத்திரெண்டு வயதிலும் அவரின் முகத்தில் அழகும் மலர்ச்சியும் குடிகொண்டிருந்தது.  அந்த வயதுக்கான முதுமைகூட ஏற்கனவே அழகான அவர் முகத்துக்கு ஒரு கம்பீரத்தைக் கொடுத்திருந்தது. அன்றென்னவோ அவர் முகத்தில் கூடுதல் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் தெரிந்தது. சமையல் அறையில் விருந்து தயாராக்கி கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவிப்பது போல் உணவுப் பதார்த்தங்களின் வாசனை காற்றோடு கலந்துவந்து நாசிக்குள் நுழைந்தது.

சோஃபாவில் அமர்ந்திருந்த டாக்டர் பவித்ராவின் பார்வை சுவர் கடிகாரதைப் பார்த்ததபோது அது பத்து முப்பது என்று மணியைக்காட்டியது.

ஆச்சு. . இன்னும் ஒண்ணரை மணி நேரத்தில் பொக்கிஷா இங்கு நம்மோடு இருப்பாள் என்று நினைத்தவரின் மனதில் கடலலையென மகிழ்ச்சி பொங்கியது. இருக்காதாபின்னே?

மருத்துவ மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற மகள் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஐந்து வருடம் கழித்து நாடு திரும்பி வீடு வருகிறாள் என்றால் எந்த தாய்க்குத்தான் மகிழ்ச்சி வெள்ளமாய்ப் பெருகாது?

மகள் வருகிறாள் அவளை ஐந்துவருடம் கழித்து இன்று பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியால் மலர்ச்சியாய் இருந்த அவர் முகத்தில் திடீரென ஒரு சின்ன வேதனையின் கீற்று வந்து மறைந்தது.

என்ன நினைத்தாரோ சோஃபாவிலிருந்து எழுந்து தனது அறையை நோக்கி நடந்தார். அப்படி நடக்கும்போது அவரின் உடல் இடப்பக்கமும் வலப்பக்கமுமாக அப்படியும் இப்படியுமாய்  அசைந்தது. . இடமும் வலமும் மேலும் கீழுமாய் சாய்த்து சாய்த்து நடக்கும் நடை. அறையிலிருந்த  பீரோவிலிருந்து வெகு ஜாக்கிரதையாய் ஒரு குழந்தையைத் தூக்குவதைப்போல ஒரு சின்ன தகர டப்பாவை எடுத்துக்கொண்டு வந்து மீண்டும் சோஃபாவில் அமர்ந்து கொண்டார் டாக்டர் பவித்ரா.

அது ஒரு தகர பெருங்காய டப்பா. மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த தகர டப்பாவின் மூடியில் கருப்பு நிறத்தில் ரெயில் எஞ்சின் படம் வரையப்பட்டிருந்தது. உள்ளங்கை அளவே இருந்த அந்தப் பெட்டியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் டாக்டர் பவித்ரா.

ஹேமூ. . ஹேமூ. . அவர் வாய் மெள்ள முணுமுணுத்தது. பெட்டியின் அடிப்பகுதியை ஒரு கையால் இறுகப்பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் வெகு ஜாக்கிரதையாக அதன் மூடியைத் திறந்தார்.

அதனுள்ளே நைந்து உருகி கசிந்து போய் ஏழெட்டு கமர்கட்டுகள் பெட்டியின் அடியோடு ஒட்டியிருந்தன. அவற்றின் மீது பூஞ்சாளம் பூத்திருந்தது. புழுக்கைபுழுக்கையாய் ஒடிக்கப்பட்ட சிலேட்டுக்குச்சிகள், கண்ணாடி வளையல்கள் ஐந்தாறு, ஒரு சாந்து பாட்டில் ஒரு ரிப்பன். . எல்லாமே மிக மோசமான நிலையிலேயே இருந்தன.

நாற்பது நாற்பத்திரெண்டு வருஷங்களுக்கு முன்பாக வைக்கப்பட்ட அப்பொருட்கள் இப்போது வேறு எப்படி இருக்கும்?  அவற்றைப் பார்த்த அவரின்  கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைக்காமலேயே அமர்ந்திருந்தார் பவித்ரா. அவரின் நினைவு நாற்பத்திரெண்டு வருடங்களுக்கு முன்பு தனது பத்தாவது வயதிலும் அதன் பிறகு தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளிலும் மூழ்கிப்போனது.

ங். . டங். . டங். . டங். . . அந்த பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியிலிருந்து பள்ளி விட்டாகிவிட்டதற்கான மணிச்சத்தம் ஓங்கி ஒலித்தது. ஏற்கனவே எப்போது மணியடிக்கும் வீட்டுக்கு ஓடலாம் எனத் தயாராய்க் காத்திருந்த சிறார்கள் புத்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் தள்ளிக்கொண்டு திமுதிமு என்று வாசலை நோக்கி ஓடினார்கள். அதுவும் அடுத்து வரும் இருனாளும் சனி ஞாயிராக விடுமுறை நாட்களாக அமைந்துவிடவே மாணவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த மகிழ்ச்சியால் ஹோ. . என்று கத்தியபடி வெளியே ஓடினார்கள். பாத்து. . பாத்து. . அமைதியா. . மெள்ளமா போங்கடா அந்தந்த வகுப்பாசிரியர்களின் போட்ட சப்தம் பத்து வயதிற்குற்பட்ட அந்த சின்னச் சின்ன பிள்ளைகளின் செவிகளிள் விழவே இல்லை. ஆசிரியர்களின் கத்தலை கேட்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. அவர்கள் குஷி அவர்களுக்கு. நிமிட நேரத்திற்குள் பள்ளி காலியாகி வெறிச்சோடியது.

புத்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டுவகுப்பை விட்டுத் தரையில் கால்கள் படாமல் முண்டியடித்துக்கொண்டு அதி வேகமாய் ஓடும் தன் வயதையொத்த மற்ற மாணவ மாணவிகளை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு தன் இடத்தைவிட்டு எழாமல் அமர்ந்திருந்தாள் ஐந்தாம் வகுப்பு  மாணவி பத்து வயது. . பவி. . பவித்ரா.

என்னம்மா. . பவித்ரா நீ இன்னும் கிளம்பலயா. . ? எல்லாரும் போயாச்சு. . அருகில் வந்து கேட்கும் ஆசிரியரை நிமிர்ந்து பார்த்துவிட்டு மெள்ள எழுந்தவள் குனிந்து புத்தகமூட்டையை தூகிக்கொண்டு இரண்டடி வைத்தவளுக்குக் கொஞ்சம் தடுமாறியது. சமாளித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். வலது காலைவிட இடது கால் கொஞ்சமே கொஞ்சம் உயரம் கம்மி. அதன் காரணமாய் இடதுபக்கமும் வலது பக்கமுமாய் மாறி மாறி சாய்த்து சாய்த்து நடக்கும் பவித்ராவை வேதனையோடு பார்த்தார் ஆசிரியர். பாவம் தாயில்லாப் பொண்ணு அவர் வாய் முணுமுணுத்தது.

பள்ளியைவிட்டு வாசலுக்குவந்த பவித்ராவுக்கு வீட்டை நினைக்கும்போதே கசப்பாய் இருந்தது. வீடா அது?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.