(Reading time: 45 - 90 minutes)

ந்திருக்கறது. . ஒரு வயசான மாமாவும் மாமியுமாம். . அவா பொண்ணுக்கு சமீபத்துல ஆம்பள புள்ள பொறந்திருக்காம். . ரொம்ப வருஷம் கழிச்சு பொறந்திருக்கான்னாம். . . அவா பொண்ணு பம்பாயில இருக்காளாம். . பொண்ணையும் பேரனையும் பம்பாய்க்கு கொண்டுவிடப்போறாளாம். .

அதுக்கு. .

அவா பொண்ணு பம்பாயில நல்ல வேலையில இருக்காளாம். . அதுனால கொழந்தையப் பாத்துக்க ஆத்தோட இருக்கராமாரி சின்னவயசுல பொண்ணு கெடெச்சா தேவலன்னு சொன்னாளாம். . அத கேட்ட ஒடனேயே அம்புஜம் மாமிக்கு நம்ம பவியோட நெனப்புதான் வந்துதாம். நல்ல சம்பளம் தருவாளாம். மாசம் ஆயிரம் ரூவான்னா பாத்துக்கோங்கோ. . நானும் சரின்னுட்டேன். . நீங்க என்ன சொல்றேள். . ? பணத்த நம்மாத்துக்கே அனுப்பிடுவாளாம்.

குனிந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த பவியின் காதுகளில் சித்தி சொன்ன விஷயம் விழுந்த அடுத்த நொடி தூக்கிவாரிப்போட்டது. . அடி வயிற்றிலிருந்து ஏதொ ஒன்று வந்து நெஞ்சை அடைப்பதுபோல் இருந்தது.

உடம்பு நடுங்கியது. வியர்த்துக்கொட்டியது. சட்டென நிமிர்ந்து அப்பா என்ன சொல்கிறார் எனக் கவனித்தாள்.

ஏய். . என்னடி சொல்ற. . பவி சின்னக்கொழந்த. . முன்னப்பின்ன தெரியாதவாளோட கண்காணா இடத்துக்கு அவள எப்பிடி அனுப்பறது. . கொஞ்சமாவது நெனச்சுப் பாத்தியா. . அவ ஆம்பள கொழந்தையா. . பொம்மனாட்டிக் கொழந்தடி. .

அப்ப நீங்க என்ன சொல்ல வரேள். . அவள அனுப்ப மாட்டேள் அப்பிடித்தானே. . எல்லாம் என் தலவிதி. . நீங்க கொண்டு வரும் அஞ்சு பத்துலயே குடும்பம் நடத்தனும்ன்னு இருக்கு. . இவள பெத்துப்போட்டவ நிம்மதியா போய்ச் சேந்துட்டா. . நாம் பாரு ரெண்டாந்தரமா வாக்கப்பட்டு இந்த நொண்டிப்பொண்ணையும் வெச்சுண்டு பாடா படறேன். நல்லபடியா கையோட காலோட இருக்கற பொண்ணுங்களுக்கே இந்த காலத்துல கல்யாணம் ஆக மாட்டேங்கரது. . இதுல இவ நொண்டிவேர. . பணமும் இல்லாட்ட இவள யார் கட்டுவான். . ? ஏதோ மாசமானா ஆயிர ரூவா சொளயா கெடைக்குமேன்னு சரின்னுட்டேன். . தப்புதான் தப்புதான். . இந்தவீட்டுல எனக்கோ என் வார்த்தைக்கோ மதிப்போ மரியாதையோ கெடையாதுன்னு தெரிஞ்சும் அந்த மாமிண்ட சரின்னு சொன்னது தப்புதான். . நிறுத்தாமல் கத்த ஆரம்பித்த சித்தியைப் பார்த்து பயந்துபோன பவித்ரா எழுந்து சித்தியிடம் காலைச் சாய்த்துச் சாய்த்து ஓடினாள்.

சித்தி. . சித்தி. . வேண்டாஞ்சித்தி. . நா பம்பாய்க்கெல்லாம் போகல சித்தி. . எனக்கு பயமாருக்கு சித்தி. . நாம் படிக்கணுஞ்சித்தி. . அவாள்ளாம் யாருன்னே எனக்கு தெரியாது சித்தி. . அவாளோடெல்லாம் நாம்போகல சித்தி. . சித்தி வேண்டாஞ்சித்தி. . நான் பம்பாய்க்கு போக வேண்டாஞ்சித்தி. . காலில் விழுந்து கதறும் அந்த பிஞ்சை இரக்கமின்றி காலால் எட்டி உதைத்தாள் சுப்பு. .

இரண்டடி தள்ளிப் போய் விழுந்த பவித்ரா எழுந்து அப்பாவிடம் ஓடினாள். அப்பா. . அப்பா. . வேண்டாம்ப்பா. . நான் பம்பாய்க்கு போக வேண்டாம்ப்பா. . நாம் படிக்கணும்ப்பா. . ஒங்கலெல்லாம் விட்டுட்டுப் போகமாட்டேன்ப்பா. . சித்திட்ட சொல்லுங்கப்பா. . அப்பாவின் காலைப்பிடித்துக் கதறினாள்.

. . . . . . . . . . . . . .

சட்டென எழுந்து கூடத்தின் கோடியில் இருந்த அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டாள் சுப்பு.

அடியே. . சுப்பு சுப்பு. . இருடி. . இருடி. . அவசரமாய்ச் சொல்லிக்கொண்டே சுப்புவைத் தொடர்ந்து தானும் அந்த அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டார் பவியின் அப்பா சுந்தரேசன்.

வெளியில் நின்ற பவியின் செவிகளில் சித்தி அழுவதும் அப்பா ஏதோ சொல்லி சமாதான செய்வதும் சில நிமிடம் கேட்டது. அதன் பின் அமைதியானது.

அப்பா வெளியே வருவார் பவி நீ பம்பாய்க்கெல்லாம் போக வேண்டாம் சித்தி சொல்லிட்டான்னு சொல்வார் என்ற எதிபார்ப்போடு நின்றிருந்த பவிக்கு அறையைவிட்டு வெளியே வந்த அப்பா தன்னைப் பார்ப்பதைக்கூட தவிர்த்துவிட்டு வாசலை நோக்கிச் சென்றது மிகுந்த ஏமாற்றத்தையும் பயத்தையும் கொடுத்தது.

ரவு முழுதும் தூக்கமின்றிக் கழிந்தது பவிக்கு. காலை வழக்கபோல் வேலைகளை முடித்துவிட்டு புத்தக மூட்டையை (அறுந்து போன கைப்பிடியை முடிச்சுப் போட்டாச்சு) தூக்கிக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பியவளை . .

ஏய் எங்கடி கெளம்பிட்ட. . ? இனிமே நீ பள்ளிக்கூடம் போகல. . அடுத்த வாரம் பம்பாய்க்கு அவாகூட போர. . என்ற சித்தியின் வார்த்தை பவியின் தலையில் இடியாக இறங்கியது. வியர்த்துக்கொட்டியது பவிக்கு. நாக்கு வரண்டு போனது. மயக்கம் வருவதுபோல் இருந்தது. அப்படியே சுருண்டுபோய் நின்ற இடத்திலேயே அமர்ந்து கொண்டாள் பவித்ரா.

பவி. . பவீ. . ஸ்கூலுக்கு நேரமாயிடுத்து டி. . நீ இன்னும் கெளம்பலயா? சீக்கிரம் வாடி. . வாசலில் ஹேமா கத்தும் குரல் கேட்டும் பதில் கொடுக்காமல் உணர்வற்ற நிலையிலேயே அமர்ந்திருந்தாள் பவித்ரா.

சட்டென வாசலுக்குச் சென்ற சுப்பு குரலில் நிதானத்தை வரவழைத்துக்கொண்டு

ஹேமா. . ஹேமாகுட்டி. . பவித்ரா ஸ்கூலுக்கு வரமாட்டா. .

ஏம் மாமி. . பவிக்கு ஜொரமா. . ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.