(Reading time: 45 - 90 minutes)

த்துவயது வரைப் பார்த்துப்பார்த்துப் பழகிய தோழியை அவளின் பருவ வயதில் பார்த்தால் அடையாளம் தெரியாமல் போய்விடுமா என்ன? எத்தனை வயதானாலும் முகம் மறந்துவிடுமா என்ன?

சொல்லமுடியாத தவிப்போடும் பரபரப்போடும் டைரியைப் பிரித்தவளின் கண்கள் ஒவ்வொரு பக்கமாய் மேய்ந்தது. படித்து முடித்தபோது தன் கணவன் வெங்கட்டும் தன் தோழி பவியும் காதலர்கள் என்பது  சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து போயிற்று. எந்தத் தோழியைப் பார்க்க மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருந்தவள் அந்தத் தோழியின் காதலனே தனது கணவன் எனத் தெரிந்ததும் தவித்துப்போனாள். நெடுனாளாய்ப் பிரிந்திருக்கும் தன் தோழி இப்போது ஒரு டாக்டர் என்பதை நினைத்து மகிழ்வதா. . அவளைப் பற்றி தெரிந்து கொண்டதைப் எண்ணி சந்தோஷப்படுவதா சூழ்னிலையின் காரணமாய் தோழியின் காதலன் தன்னை மணக்கவேண்டி வந்ததே என வருந்துவதா. . தவித்தாள் ஹேமா.

தன் தோழி பவியின் வாழ்க்கையை தான் தட்டிப் பறித்துவிட்டதாக நினைத்து குற்ற உணர்ச்சியால் துவண்டு போனாள்.

இல்லை. . இல்லை. . என் பவிக்கு என்னால் நேர்ந்த இந்த துன்பத்தை நானே சரி செய்வேன். பவி. . எனக்கு ஒன்ன ஒடனே பாக்கணும்டி. . பாக்கணும். .

மாலை நான்கு மணி வீட்டுக்குள் நுழைந்த வெங்கட் ஹேமா சோர்வாய் அமர்ந்திருப்பதையும் அவளின் முகம் அழுதிருப்பதுபோலவும் தெரியவே. . என்னாச்சு ஹேமா. . ஒடம்பு சரியில்லையா. . ? இடுப்ப வலிக்குதா. .

இல்ல. .

பின்ன ஏன் முகமே சரியில்ல. . ?

இதோ இந்த போட்டோல இருக்கற பொண்ணு யாரு?

அதிர்ந்துபோனான் வெங்கட். . இது ஒனக்கு எப்பிடி கெடச்சுது?

இதோ இந்த டைரிலேந்து கீழ விழுந்தது. . . ஹேமா டைரியை எடுத்துக் காண்பிக்க தலையைச் சுற்றியது வெங்கட்டுக்கு. எதை மறைக்க நினைத்தானோ அது முகத்துக்கெதிரே. . . ஹேமாவின் கையில். . .

ஹேமா. . . . அது. . அது. .

அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் ஹேமா. .

ஹேமா ஹேமா ஒங்கிட்ட சொல்லாம இருந்தது தப்புதான். . அழாத ஹேமா இந்த நிலையில நீ அழக்கூடாது. .

இல்ல இல்ல நீங்க எங்கிட்ட சொல்லாம இருந்ததுக்காக நான் அழல. . இதோ இருக்காளே இந்த போட்டோல அது என்னோட உயிர்த்தோழி பவி. . பவித்ரா. . யார நான் பாக்கணும்ன்னு இத்தன நாளா ஏங்கினேனோ. . பாக்க தவிச்சேனோ அவதான் இவ. .  என் தோழி என் உயிர் பவி. இவளத்தான் நீங்க விருப்பிருக்கேள்கிறதும் பவியும் ஒங்கள விரும்பிருக்கான்றதும் ஒங்க டைரிய படிச்சபின்னாடிதான் தெரியரது. . .

ஹேமா. . கத்தினான் வெங்கட். . ஹேமா நீ என்ன சொல்ர. . பவி ஒன்னோட தோழியா. . ஐயோ இதென்ன விபரீதம். . அப்படியே சரிந்து உட்கார்ந்தான் வெங்கட்.

ஐயோ. . செய்யக்கூடாத தப்ப நான் பன்ணிட்ட்டேனே. . ஒங்க இருவருக்கும் இடையில நான் வந்துட்டேனே. . என் பவிக்கு நான் துரோகம் பண்ணிட்டேனே. . ஒங்க விருப்பத்தகூட கேட்காம என் கழுத்துல தாலி கட்ட ஒங்க தாத்தா ஒங்கள கட்டாயப் படுத்தீட்டாரே. . நீங்க எங்கிட்ட சம்மதமான்னு கேட்டப்ப நீங்க முழுமனசோடதான் எனக்கு தாலி கட்டப் போறேளான்னு நான் ஒங்கள கேக்காம இருந்துட்டேனே. . எத்தன பெரிய பாவி நான். . என் பவிக்கு மட்டுமில்லாம ஒங்குளுக்குமில்லையா நான் கேடு செஞ்சுட்டேன் . .

கதறி அழும் அந்த வயிற்றுப் பிள்ளைத் தாச்சியை தன் மனைவியை சமாதானம் செய்யவெண்டுமென்ற உணர்ச்சிகூட இல்லாமல் உட்கார்ந்திருந்தான் வெங்கட். . . நிமிடங்கள் கரைந்தன. நிதானமடைந்தவன் மெள்ள எழுந்து ஹேமாவிட வந்தான்.

ஹேமா. . அழாத. .

இல்ல எனக்கு இப்பவே பவியப் பாக்கணும். . .

ஹேமா என்ன இது. . இன்னும் சில வாரத்துல ஒனக்கு டெலிவரி டைம். . இப்ப போய் பம்பாய்க்கெல்லாம் போரது சாத்தியமில்ல. . .

இல்ல நான் பவிய பாக்கணும். .

பயமாயிருந்தது வெங்கட்டுக்கு. . இனி பவியின் முகத்தில் எப்படி முழிப்பது. . அவள் முகத்தைப் பார்க்கும் யோக்கிதை நமக்கு உண்டா? அவள் நம்மைப் பற்றி என்ன நினைத்திருப்பாள். . ஏமாற்றுக்காரன், துரோகி என்றல்லவா நம்மைப் பற்றி முடிவு செய்திருப்பாள். . எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை சந்திப்பது. .

ஹேமா. . வேண்டாம் ஹேமா. . உன் தோழியைப் பார்க்கும் துணிவு எனக்கில்லை. . நான் ஒரு துரோகி. . மனதுக்குள் புலம்பினான்.

கடைசியில் ஹேமாவின் பிடிவாதமே வென்றது. பம்பாய் ஸ்டேஷனில் வந்து நின்றது அந்த ரெயில். பவி பவி அறற்றியது ஹேமாவின் நெஞ்சம். பவியின் முகத்தில் எப்படி விழிப்பேன் தவித்தது வெங்கட்டின் மனம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.