(Reading time: 9 - 18 minutes)

ந்த தோட்டத்து புளிய ஆட்டைய போடறப்போ மாட்டியிருந்தா கூட பரவாயில்லைங்க அங்க தம்மாத்தூண்டு இருந்த கோழிக்குஞ்சை ஆட்டைய போட போறப்போ மாட்டியிட்டோம்ங்க... நாங்க மாட்டுனது யார்க்கிட்ட னு தெரியுமா...???

எல்லாம் எங்க சண்டக்கோழி மேத்ஸ் மிஸ் கிட்ட தான்.. அது அவிங்க தோப்பாம்.. எல்லாத்தையும்விட அவங்க கொடுத்த புனிஷ்மென்ட் தாங்க கொடுமையான விஷயம்... நல்ல வேளை நாங்க கோ எட் ல படிக்காததால எங்க மானம் கப்பலேராம இருந்திச்சு..

எந்த புளியமரத்திலிருந்து நாங்க புளிய ஆட்டைய போட்டோமோ அந்த புளியமரத்துல எங்களை மாட்டை கட்ர மாதிரி கட்டிவெச்சிட்டாங்க.. அப்ப தாங்க அது நடந்திச்சு...

கயிறை அவிழ்க்கிறேன்னு எழில் கொஞ்சம் கொஞ்சமா கயிறை அவிழ்க்க ஆரம்பிச்சா.. அது என்ன நேரமோ திடீருனு எங்க சண்டகோழி எங்க பேரெண்ட்ஸ் ப்ரெண்ட்ஸோட அங்க உதயமாயிட்டாங்க.. அத பார்த்து ஜெர்க்கான எழில் ஒரு நிமிஷம் வாயிலிருந்த கயிறை அப்படியே வெச்சிருந்தா...

அவ பொசிஷன பார்த்த எங்க சண்டக்கோழி (கொஞ்சம் பி பி ஏரியிருக்கும்னு நினைக்கிறேன்),"பார்த்தீர்களா உங்க பிள்ளைய மாடு மூக்கணாங்கயிறு மாட்டீருக்கறப்போ துள்ர மாதிரியே துள்ரா பாருங்க",என்றார்.

முதல்லயே எங்க வீட்ல எங்களை ரொம்ப கொஞ்சுவாங்க.. இப்போ கேக்கவா வேணும்... ரெடி ஸ்டார்ட் மியூசிக் தான்...

அன்றிலிருந்து சண்டக்கோழி,எழிலை எங்கு பார்த்தாலும் மூக்கணாங்கயிறு என்று தான் கூப்பிடுவார். காலப்போக்கில் அதுவே அவள் பெயராக மாறியது..ஸ்கூல் பிரண்ட்ஸ் மூலமா காலேஜிலும் பேமஸ் ஆயிட்டா..

அனால் அந்த பெயரே அவளை முற்றிலும் மாற்றியது...

காலேஜில் அவளை மூக்கணாங்கயிறு என கேலி செய்தவர்களை முதலில் அவள் கண்டுகொள்ளவில்லை.அனால் அந்த கேலி பேச்சு அவளின் தோற்றம் குறித்து மாறியபோது அவள் பேச்சும் குறும்பும் குறைந்தது.

எழிலுக்கு சுருள் சுருளாக முடி இருக்கும் அதனால் அவள் எண்ணெய் வைத்து தலைவாரி வருவாள். அப்படி வாரும் போது அவளது மூக்கு அந்த ஹேர் ஸ்டைலுக்கு சிறிது பெரிதாக தெரியும். இதை பார்த்த எங்கள் வகுப்பு தோழிகள் அவளை ஸ்ப்ரிங் முடி,மூக்கழகி,மூக்கி என கேலி செய்ய ஆரம்பித்தனர்.

அவளது சுபாவத்தை கேலி செய்தவர்களை ஒதிக்கியவளால் அவளது தோற்றத்தை பற்றி கேலி செய்தவர்களை ஓத்துமுடியவில்லை. அவள் பிறர் கொட்ட கொட்ட குனிய ஆரம்பித்தாள்.

கல்லூரியில் ஒருவரின் தோற்றத்தை பார்த்து கேலி செய்வது என்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். அது அடுத்தவரின் மனதை பாதிக்காத வரை மட்டுமே..

தோற்றம்..

குழந்தையின் தோற்றம்...

அள்ளியணைக்க தோன்றுவது...

கடவுளின் தோற்றம்...

வணங்க தூண்டுவது...

பாம்பின் தோற்றம்...

பயத்தை உண்டாக்குவது...

மொத்தத்தில் தோற்றம்...

நிலையில்லாதது...

ஆம், தோற்றத்தின் மேலான கேலிகளை கேட்டு பயம் கொள்ள ஆரம்பித்தாள் எழில். நிலையில்லாத இந்த தோற்றத்தை கேலி செய்வதை கேட்டு எத்தனையோ எழில்கள் தங்கள் உண்மையான சுபாவத்தினை மறைத்தார்கள் மறைகின்றார்கள்..

கேலிகள்... மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும் ஒன்றாகும்.. நாம் மற்றவர்களை செய்யும் பொழுது... அதுவே நம்மை திருப்பி தாக்கினால்..?? இந்நிலையில் தான் இருந்தால் எழிலி...

சிலர் இந்த கேலிகளிலிருந்து தப்பிக்க நண்பர் வட்டத்தை குறுக்குவர், சிலர் தன்னை தானே தனிமை படுத்தி கொள்வர், இன்னும் சிலர் கேலிக்காரர்களின் பேச்சுக்களை காதில் வாங்காதவர் போல் பாவனை செய்வார்கள்… எழிலி தனது சுபாவத்தை மாற்றினாள்... அனைவரிடமிருந்தும் ஒதுங்க ஆரம்பித்தாள்...

கல்லூரி காலம் முடியும் வரை அவளது இந்த ஒதுக்கம் தொடர்ந்தது...

சுமார் பத்து வருடத்திற்கு பிறகு இப்பொழுது தான் எங்களது  கல்லூரிக்கு வருகை தருகிறாள் எழில்... முக்கணாங்கயிறு என ஒருத்தி கூவிய அதே நேரத்தில் மேடையிலிருந்த கல்லூரி முதல்வர்

"இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது முக்கிய பணிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு வந்திருக்கும் நமது முன்னாள் மாணவியும் இந்நாள் கலெக்டருமான மூதூரெழிலி IAS யை சிறப்புரையாற்ற வரவேற்கின்றேன்", என்றார்.

அனைவருக்கும் ஆச்சரியம் தான்.. இவள் எவ்வாறு கலெக்டர் ஆனாள் என்று..

நானோ “இந்த மூக்கொழுகி இங்க வரதப்பத்தி ஒன்னும் சொல்லலையே” என்று அவளை முறைத்துக்கொண்டிருந்தேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.