(Reading time: 34 - 67 minutes)

2017 போட்டி சிறுகதை 30 - என் கணவர் என் தோழன் - அபிநயா

This is entry #30 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - என் கணவன் என் தோழன்

எழுத்தாளர் - அபிநயா

My husband my friend 

ருவன் நண்பனாக இருந்து காதலனாக ஆகி பின் கணவனாக ஆவது எளிதில் நடக்க கூடியதுதான். பெரும்பாலானோர் வாழ்க்கையில் நடந்திருக்கும். ஆனால் விருப்பமில்லாத பெண்ணை விரும்பி திருமணம் செய்து பின் அவளே விரும்பும் தோழனாக ஆவது எளிதல்ல. எல்லோரின் வாழ்க்கையிலும் நடக்க கூடியதும் அல்ல. ஆனால் நம் தான்யாவிற்கு நடந்திருக்கிறது.

தான்யா குறும்புக்கார பெண். அவள் செய்யும் குறும்பு சில நேரங்களில் மற்றவரை வெகுவாக பாதிக்க கூட செய்யும். எளிமையாக பிறந்து எளிமையாக வளர்ந்தவள் ஆனால் தன்னிடம் இருப்பதை வைத்து தன்னை அலங்கரித்து கொள்வதில் அவளுக்கு இணை அவளேதான். . அவள் அன்பின் தாகத்திற்கு கடலை தந்தாலும் ஈடாகாது. ஆனால் அதை  ஈடுக்கட்டவும் ஒருவன் பிறந்திருக்கிறான் என்பது இப்போதுதான் தெரிகிறது.

முடியாது இந்த கல்யாணத்திற்கு ஒரு நாளும் என்னால் சம்மதிக்க முடியாது. அம்மா அப்பா என் வாழ்க்கையில் நடந்த தெல்லாம்  தெரிந்துமா  இப்படி பன்றிங்க?  சரி இப்போ ஒரு உண்மைய  சொல்கிறேன்  என் வாழ்க்கையில் நடந்த பாதிதான் உங்களுக்கு தெரியும் தெரியாதது இன்னும் எவ்வளவோ  இருக்கு.

அதனால இத இதோட விட்டுடுங்க. உங்கள கெஞ்சி கேட்கிறேன்.

அவள் எவ்வளவோ  மறுத்தும் கத்தியும் கதறியும் அவள் தோற்றுவிட்டாள். இல்லை இல்லை தோற்றதாக அவள்நினைத்துக்கொண்டாள்.

திருமணம் இனிதே முடிந்துவிட்டது. சேரவேண்டிய இடத்தில் தான்யாவும் சேர்ந்துவிட்டாள். அதாவது மாப்பிள்ளை அக்‌ஷையின் வீட்டில்.

 அக்‌ஷை  எம்ஃபில் முடித்துவிட்டு ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் programmer வேலை செய்கிறான். மாதம் 40,000 ரூபாய் சம்பளம்.

தானும் தன் மனைவியும் தனியாக இருக்கவேண்டும் என்று விரும்பி சொந்த வீடு கட்டி குடிவந்துவிட்டான்.

ஆனால் தன் குடும்பத்தையோ தான்யாவின் குடும்பத்தையோ விடவில்லை.

உறவினர்களெல்லாம் சென்றபின் உணவு வேலைகளை  முடித்துவிட்டு தான்யா தன் அறைக்கு வந்தாள்.

ஒப்பனைகளை கலைத்துவிட்டு உறங்க தயாராகும்போதுதான் அக்‌ஷை தன் அறைக்கு வருவதைக்கண்டு வெறுப்புடன் பார்த்தாள்.

அவன் பேச வாய் திறக்கும் முன் இவளே படபடவென்று பொறிந்து தள்ளினாள்.

இங்க பாருங்க என் அப்பா அம்மாவின் கட்டாயத்திற்காகத்தான் உங்களை கல்யாணம் செய்துகொண்டேன். மற்றபடி உங்கமேல அன்பு பாசம் காதல் இதுலாம் இல்லை. இனியும் வராது. உங்க வாழ்க்கையும் கெடுத்து என் வாழ்க்கையும் கெடுத்த என்ன மண்ணிச்சிடுங்க. நான்  மனதளவில் கோபத்துடனும் வருத்தத்துடனும் இருக்கிறேன் அதான் இப்படி பேசுகிறேன் மன்னிச்சிடுங்க. நான் தூங்கனும் தயவு செய்து என்னை தனியே விடுங்கள்..

நான் சொல்லனும்னு நெனச்சததான் கொஞ்சம் மாடிஃபை பன்னி நீ சொல்லிட்ட.  நன்றி. என்றான் நிதானமாக.

அவன் பேசியதை ஆச்சரியத்துடன் நோக்கி என்னது? என்றாள்.

பெண் பார்க்க வரும்பொழுது மாப்பிள்ளை மீது பெண்ணுக்கும். பெண்ணின் மீது மாப்பிள்ளைக்கும் ஒரு ஆர்வம் இருக்கும். பேசனும் பழகனும்னு துடிப்பாங்க. ஆனால் நிச்சயதார்த்தம் ஆனபின்னும் நீ என்னோடு பேசி பழகாததை வைத்து நான் புரிந்துகொண்டேன் உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை கட்டாய கல்யாணம் என்று.

இருந்தாலும் என்னை ஏன் திருமணம் செய்தீர்கள் என்கிறாயா? எனக்கு உன்மேல் ஆர்வம் இருந்தது. ஆர்வம் காதலாக மலர்ந்தது. உன் மனதை வெல்லமுடியும் என்ற நம்பிக்கையில் செய்துகொண்டேன்.

எனக்கு என்மீதும் என் காதலின் மீதும் நம்பிக்கை இருக்கிறது உன் மனம் என்னை ஏற்கும்வரை  காத்திருப்பேன். தூங்கு good night வருகிறேன் என்று கதவை சாத்திவிட்டு வெளியேறினான்.

இரவில் உறங்குவதற்கு தாமதமானதால் மறுநாள் காலை எழுவதற்கும் தாமதமானது தான்யாவிற்கு.அறையைவிட்டு வந்தவளுக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. அதனுடன் கோபமும் கொஞ்சம் வந்தது. கையில் காஃபியுடன்       அக்‌ஷை நின்றிருந்தான்.

குட் மார்னிங் இந்தா காஃபி. என்று அவளுக்கு ஒரு காஃபி கப் நீட்டினான்.

இங்க பாருங்க, உங்க மேல எனக்கு காதல் இல்லாம இருக்கலாம். ஆனால் மதிப்பிருக்கு ஆண்பிள்ளை என்ற மரியாதை இருக்கு. இதையெல்லாம்விட எனக்கு ஒரு கொள்கை இருக்கு.

ஆண்கள் வீட்டு வேலை செய்வது எனக்கு புடிக்காது. இனிமே உங்க வேலையும் சேர்த்து நானே செய்துக்கிறேன். இனிமேல் எப்பவும் இப்படி ஒரு வேலை பன்னாதிங்க புரியுதா? என்றாள் போலி கோபத்துடன்.

சரிங்க மேடம் உனக்கு பிரச்சனை இல்லனா எனக்கு ஓகேதான்.

சரி டா எனக்கு office கு நேரம் ஆய்டிச்சி நான் கலம்புறேன்.

டிஃபென் லன்ச் எல்லாம் ரெடி போய் குளிச்சிட்டு சாப்பிடு. புத்தகம் இருக்கு படி, இசை கேள், டிவி பாரு வேல செய் சந்தோஷமா இருக்கனும்டா ஒகேவா? இங்க உன் சுதந்திரத்துல யாரும் தலையிட மாட்டாங்க என்னையும் சேர்த்து. கவலைப்பட வேண்டாம். வரட்டுமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.