(Reading time: 34 - 67 minutes)

ருமுறை தான்யா அக்‌ஷைக்கு கார் வாங்கித்தரவேண்டுமென்று ஆசைப்பட்டாள். ஆனால் அக்‌ஷை அதை மறுத்துவிட்டான். அதனால் இருவருக்கும் விவாதம் முற்றியது. தான்யா சண்டைப்போடும்போது அவளின் வார்த்தைகள் எல்லை மீறும். காரணம் கோபத்தை அவளால் கட்டுப்படுத்தமுடியாது.  இன்னொன்று தன் கணவன்மேல் அவள் வைத்துவிட்ட அளவுகடந்த அன்பு. அதாவது,. தான்யா அக்‌ஷைக்காக துடிக்கிறாள் அவன் இல்லாததால் கவலைப்படுகிறாள் ஆனால் அக்‌ஷை அப்படி இல்லை என்று தான்யா நினைப்பாள். காரணம் ஒரு காலத்தில் அக்‌ஷை அவன் நேசத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினான் இப்போது அப்படி செய்வதில்லை என்பதுதான். தான்யா ஒரு ஆடியோ டைப். அவளுக்கு அன்பு வார்த்தைகளால் வெளிப்பட வேண்டும். இதுவும் அக்‌ஷையாள்தான் வந்தது. அக்‌ஷையின் அன்பை எப்படியாவது பெறவேண்டும் என்ற துடிப்பை கோபமாக்கி Merciless heart, cruel, fake, acting smart, cheating, saddist, நம்பிக்கை த்ரோகி இப்படி ஏராளமான கொடும்சொற்களை கொட்டித்தீர்ப்பாள்.  பெரும்பாலான நேரங்களில் அவள் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை அவளால் மாற்றிக்கொள்ள முடியாததை எண்ணி அவள் மனம் நொந்துப்போவாள். அக்‌ஷை அவளிடம் சரியாக பழகாத தருணங்களில் தன் கொடும் வார்த்தைகளால்தான் தன் கணவனின் அன்பை இழக்கிறோம் என்று துடித்துப்போவாள். ஆனால் இந்த துடிப்பு கோபம் வரும்போது எங்கோ பறந்துவிடும் அவளை அறியாமலே.

ஆனால் அக்‌ஷை தான்யாவிற்காகவே கடவுளால் படைக்கப்பட்டவன் ஆயிற்றே? அதனால் அவள் பேசும் வார்த்தைகளை மறந்துவிட்டு இல்லை இல்லை மறைத்துக்கொண்டு அவளிடம் அன்பு பாராட்டுவான். அவள் அவனுக்கு கண்ணீரை கொடுக்கும்போதெல்லாம் அவன் அவளுக்கு புன்னகையையே கொடுப்பான். மற்றவர்களிடத்திலும் தான்யா இப்படி நடந்துகொண்டு கெட்டப்பெயர் வாங்கக்கூடாது என்பதற்காக சில நேரங்களில் அவளிடம் வாதிட்டு அவள் பேசியதை எடுத்துக்காட்டி அவள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கண்டிப்பான். அதே நேரத்தில் அக்‌ஷை தான்யாவிடம்கூட தன் சுயமரியாதையை விட்டுக்குடுக்கமாட்டான் ஒரேயடியாக அவன் தான்யாவிற்கு வளைந்துகொடுக்கமாட்டான். அதுவே தான்யாவை மிகவும் கவர்ந்தது. அக்‌ஷைக்கு தான்யாவின் வார்த்தைகளைவிட அவர்களின் வாழ்க்கைதான் முக்கியம். அவனை பொறுத்தவரை கணவன் மனைவி பந்தம் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டதல்ல அன்புக்கும் நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டது.தான்யாவின் மனம் ஒருநிலையில் இல்லாததால் வருத்தத்தின்  உச்சத்தில் ஒரு கோழைத்தனமான முடிவெடுத்தாள். . மாத்திரைகளை விழுங்கிவிட்டாள்.

அக்‌ஷை அவளுக்கு கால் செய்யவும், அவள் ஆபத்தான நிலையில் இருப்பது அவனுக்கு தெரியவருவதும் சரியாக இருந்தது. அக்‌ஷைக்கு அவன் இதயம் ஒருநொடி நின்று துடிப்பதுபோல தோன்றியது. 2 மணிநேரம் உலகமே இருண்டுவிட்டதாக நினைத்தான். அவன் அவள் பக்கத்தில் இல்லாத இந்த நேரத்தில் அவள் இப்படி செய்துவிட்டாளென்று அவள்மேல் அவனுக்கு கோபம் வந்தது. அவள் சரியாகிவிட்டாள் என்று தெரிந்தபிந்தான் அவன் தெளிவடைந்தான். அவளை கோபத்துடன் அழைத்தான்.

ஹெலோ, என்றான் ஆத்திரத்துடனும் வருத்தத்துடனும்..

சொல்லுங்க என்றாள் சோர்வான குரலில்.

எப்படி இருக்க ஹாச்பிட்டல்போய்விட்டு வந்தியா?

இல்லங்க. வாமிட் வந்ததாலையும் விட்டமின் மாத்திரை அதனாலையும் எதுவும் ஆகாதுனு மெடிக்கல் ஷாப்ல சொல்லிட்டாங்க. அதுனால போகல.

இப்போ எப்படி இருக்கு எதாவது சாப்பிட்டியா?

இல்லங்க ரொம்ப களைப்பா இருக்கு கொஞ்சம் கழிச்சி சாப்பிடுறேன்.

இதுதான் நான் உன்கிட்ட பேசுர கடைசி கால். இதுவர உனக்கு நான் குடுத்த தொல்லைகளுக்கெல்ல்லாம் என்ன மன்னிச்சிடு. இனி நமக்குள்ள எதுவும் வேண்டாம். நீ உன் பொருட்களை எடுத்துக்கிட்டு உன் அம்மா வீட்டுக்கு போகலாம்.

அப்போ நீங்க இன்னும் என்ன புரிஞ்சிக்கலையா? என்மேல உங்களுக்கு இரக்கமே இல்லையா? எதுக்காக என்ன இப்படி கஷ்டப்படுத்தி பாக்குரீங்க?

போதும் நிறுத்துடி. நான் உன்னை கஷ்டப்படுத்தி பாக்குரேனா? நீ என்ன கஷ்டப்படுத்தி பாக்குரியா? இந்த 2 மணிநேரம் நான் துடிச்சது எனக்குத்தாண்டி தெரியும். எதாவது ஆகியிருந்தா என்னடி செய்யிறது?

இல்ல அக்‌ஷை அதுவந்து. உங்களுக்கு கார் வாங்கி தரனும்னுதான்.

போதும் எதுவும் பேசாத.  எனக்கு என்ன, எப்போ வாங்கனும்னு எனக்கு தெரியும். அத முடிவு செய்ய நீ யாரு? இப்படி கோழைத்தனமான முடிவெடுக்க உனக்கு என்ன தைரியம்? நீ என் மனைவி இல்லன்றதுக்கு இதைவிட வேர என்ன சாட்சி? உனக்கு நான் என்னடி தவறு செய்தேன்? உன்னை காதலித்து கைப்பிடித்து கணவனாக மட்டுமல்லாமல் ஒரு தோழனாக இருந்ததுக்கு பரிசு இதுதானா? பாவி. உனக்கு நான் ஒருவன் இருப்பது தெரிந்திருந்தால் உனக்காகவே வாழ்கிறேன் என்பது புரிந்திருந்தால் இப்படி செய்வியா? நான் தோற்றுவிட்டேன். yes i am failure. நீ சாகனும்னு நெனச்சா என் வீட்டில் சாக வேண்டாம். இந்த நிமிஷமே நீ போகனும். நான் வரும்போது நீ அங்க இருக்கக்கூடாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.