(Reading time: 34 - 67 minutes)

க்‌ஷை அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டான்.

2 மாதங்கள் கழித்து அக்‌ஷை தன் அலுவலகத்தில் கோபத்துடன் ஒரு வேலைபற்றி அனைவரையும் திட்டிக்கொண்டிருந்தான். அப்போதுதான் தான்யா கால் செய்தாள். 2 முறை கட் செய்தபின்னும் திரும்ப திரும்ப கால் செய்ததால் கோபத்துடன் அழைப்பை ஏற்றான்.

ஹெலோ? என்னடி வேணும் உனக்கு? ஏன் திரும்ப திரும்ப கால் பன்ற? 2 தடவை கட் பன்னும்போதே வேலை இருக்குனு தெரியாதா? எப்பவும் சின்ன குழந்தை விலையாட்டுதானா?

இல்லங்க நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷியம் சொல்லனும் அதான் கால் பன்னேன்.

என்ன மண்ணாங்கட்டி விஷியமா இருந்தாலும் நான் வீட்டிற்கு வந்ததுக்கப்புறம் சொல்லு இப்போ வை என்று அழைப்பை துண்டித்தான்.

அக்‌ஷை வீட்டிற்கு சென்றதும் யாரும் யாருடனும் பேசவில்லை. அவள் தந்த காஃபியைக்கூட அமைதியாக குடித்துவிட்டு கணினிக்குள் மூழ்கிவிட்டான். கணினியில் ஏதோ கோளாருவர அதை சரி செய்ய அதை தூக்கி பார்த்தபோதுதான் அதனடியில் ஒரு கடிதம் உறையில்லாமல் இருப்பதை கண்டு அதை எடுத்து படித்தான்.

என் அன்பு கணவரே, உங்களின் குறும்புகலுக்கு வேகத்தடைப்போட ஒருஜீவன் வரப்போகிறது. உங்கள் அன்பில் பங்கு கேட்க போகிறது. நம் இதயத்துடிப்பில் கொஞ்சம் இடைவெளிவிட்டு இடையில் இன்ன்னொரு இதயம் துடிக்கப்போகிறது. உங்கள் உயிரான நான் நீங்கள் தந்த உங்கள் உயிரை என் உயிருக்குள் உயிராய் சுமக்கிறேன். i love you akshai. நன்றி தான்யா.

அக்‌ஷைக்கு படிக்க படிக்க மெய்யும் உயிரும் சிலிர்த்தது. அவளை அப்படியெ கட்டியனைத்து கண்ணத்தில் முத்தமிட்டான். அவள் வயிற்றிலும் இதமாய் இதழ்பதித்து முத்தத்தை தன் குழந்தைக்கும் அனுப்பி வைத்தான். இருவரின் கண்களிலும் 2 துளி ஆனந்த கண்ணீர் உருண்டோடியது. ஏதோ வேலை டெண்ஷன்ல திட்டிட்டேண்டா. என் செல்லமே i love you மா.

உடனடியாக அவன் தன் மனைவிக்கு பரிசு பொருள் வாங்க வேண்டுமென்று கடைவீதிக்கு அழைத்து சென்றான். அவள் மறுத்தாலும் இனிப்பு, நகை, புடவை பூ, பழங்கள் மருந்துகள் வாங்கி குடுத்தான்.

தான்யா கற்பிணியாக இருந்த அந்த 10 மாதங்கலில் அக்‌ஷை அவளை மிகவும் அன்பாக கவனமாக கவனித்துக்கொண்டான். பெரும்பாலான நேரத்தை அவளுடனே செலவழித்தான். எந்த கடினமான வேலைகலையும் செய்ய அனுமதிக்கமாட்டான். சாப்பாடு பழச்சாறு மருந்துகள் எல்லாம் வேளாவேளைக்கு குடுப்பான். அடிக்கடி அவள் வயிற்றில் கைகளையும் காதுகளையும் வைத்து தன் குழந்தையின் அசைவுகளையும் சத்தத்தையும் உணர்ந்து ரசிப்பான். முத்தங்களை முத்துக்களாக பரிசளிப்பான்.

உன் அம்மாவை போல நீயும் குறும்புக்கார பெண்ணாக இருந்து என்னை கஷ்டப்படுத்தக்கூடாது பாப்பா என்று தன் குழந்தையிடம் ஏதேதோ பேசுவான். குட்டி அக்‌ஷைதான் இல்லை குட்டி தான்யா என்ற ஊடல் இவர்களுக்குள் அடிக்கடி நிகழும். இப்படியேதான் தான்யா 10 மாதங்களையும் தன் கணவனின் அன்பில் மூழ்கி கழித்தாள்.

தான்யாவின் ப்ரசவ நாளும் வந்தது. தான்யாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு எப்படியாவது என் மனைவியை முதலில் காப்பாற்றிவிடு கடவுளே அவள் இருந்தால் இன்னும் எத்தனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுத்தர முடியும். அவள் இல்லாவிட்டால் என் வாழ்க்கையே இருண்டு போய்விடும் என்று வேண்டிக்கொண்டான். எதற்குமே கலங்காத அவன் மனமும் முகமும் கலங்கியது. தான்யா தன்னோடு பரிமாரிய கடைசி வார்த்தைகளையும் அவளின் சிரித்த முகத்தையும் அவள் தந்த கடைசி கண்ணீர் முத்தங்களையும் நினைவு கூர்ந்தான். அவள் அலரலையும் துடிப்பையும் கேட்டு மனம் குமுரினான்.

சிறிது நேரத்தில் மருத்துவர் வந்து அக்‌ஷையிடம். மிச்டர் அக்‌ஷை உங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது. தாயும் பிள்ளையும் சுகம் நீங்கள் போய் பார்க்கலாம் என்றார்.

அக்‌ஷை அறைக்கு விரைந்து சென்று பார்த்தான். அவர்கள் இருவரின் ஆசைகளும் நிறைவேரும் வண்ணம் தான்யாவிற்கு ஆனொன்று பெண்னொன்று என்று இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தது.

அக்‌ஷை தன் மனைவியை முதலில் பார்த்து அவள் நெற்றியிலும் கண்ணங்களிலும் முத்தமிட்டு அவள் கைகள் இரண்டையும் ஒன்றாக குவித்து கண்ணீர் துளிகளால் அதற்கு நன்றி சொல்லிவிட்டு பின் குழந்தைகளை தூக்கி கொஞ்சினான்.

கொஞ்சநாள் கழித்து தான்யா வீட்டிற்கு வந்துவிட்டாள். முன்பைவிட அக்‌ஷை தான்யாவை அதிகமாக நேசித்தான். தான்யாவும் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்த எனக்கும் இப்படி ஒரு அழகான கவிதையான வாழ்க்கையா என்று வியப்படைந்தாள். ஒருநாள் தான்யா குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு அவளும் அக்‌ஷையும் உறங்க தயாராகும் நேரத்தில் தான்யா அக்‌ஷையிடம் கேட்டாள். அக்‌ஷை உங்களுக்கு குழந்தைகள் பிறந்துவிட்டது இனி என்னை மறந்துவிடுவீர்கள்தானே?  உங்க அன்பு முதலில் குழந்தைகளுக்குத்தானே? அக்‌ஷை அவளை அணைத்து அவள் குட்டி கண்ணத்தில் முத்தமிட்டு

போடி பைத்தியம். எனக்கு என்னிக்கும் நீதான் முதல் குழந்தை. உன்னிடம் முதன்முதலில் I love you சொல்லும்போது ஒரு குழந்தையாக நினைத்துத்தான் சொன்னேன். நீ என் மனைவி என்பதைவிட என் குழந்தை என்பதால்தான் நீ செய்யும் தவறுகளைக்கூட மன்னிக்கிறேன் மறக்கிறேன். நீ என்னோட செல்லப்பாப்பாடி.

அக்‌ஷை, எனக்கு தூக்கம் வரலை  அக்‌ஷை ஒரு பாட்டுப்பாடுங்க அக்‌ஷை. அக்‌ஷை தான்யாவை அவன் மடியில் படுக்கவைத்து கனாக்கானும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல. நிலாக்கால மேகம் எல்லாம் உலாப்போகும் நேரம் கண்ணே. என்ற பாடலைப்பாடி அவன் மனைவியை தூங்கவைத்தான்.

இப்படியே தொடர்ந்தது அவர்களின் வாழ்க்கை. இனி என்றும் தொடரும் இனிமையான வாழ்க்கை.

 

This is entry #30 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - என் கணவன் என் தோழன்

எழுத்தாளர் - அபிநயா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.