(Reading time: 34 - 67 minutes)

போலியான மனிதர்கள், போலியான அன்பு போலியான பேச்சி இதை சந்தித்து ஏமாந்த அவளுக்கு உண்மை அன்பு கண்ணீரை கொடுத்தது.

தான்யா அக்‌ஷையிடம் சண்டைப்போட ஆரம்பித்தாள். அவன் கால்களையும் குறும்செய்திகளையும் கண்டுகொள்ளாமல் இருந்தாள். ஒரு பக்கம் அவளுக்கு கோபம் இருந்தாலும் மறுபக்கம் அவள் அவன் அழைப்புகளை ஏற்காவிட்டாலும் அவன் தொடர்ந்து அழைப்பதும், இடைவிடாது அன்பு குறும்செய்திகள் அனுப்புவதும், அலைப்பேசி அணைக்கப்பட்டபோதும் நூற்றுக்கணக்கில் கால்கள் குறும்செய்திகள் வருவதையும் அவள் விரும்பினாள். வானில் பறப்பதாக தோன்றியது.

எதற்காக ஊடல் கொள்கிறோம் எப்படி சமாதானம் ஆகிறோம் என்று தெரியாமல் அவர்களின் நாட்களும் கழிந்தது. ஒருநாள் தான்யா தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் அக்‌ஷையிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

சந்தர்ப்ப சூழ்நிலைகலாள் தன் வாழ்வில் காதல் தோல்வி கண்டதையும் அதனால் அவளுக்கு ஏற்பட்ட காயங்கள் விளைவுகள் பற்றி சொன்னாள். பள்ளி பருவத்திலிருந்து பல வருடங்கள் அவளுக்கு ஏற்ப்பட்ட துன்பங்கள் யாவையும் அவன் இதயத்தில் இறக்கிவிட்டாள். அவள் என்னவெல்லாம் சொன்னாளோ அது அவன் காதுகளுக்கு மட்டுமே சொந்தம்.

எல்லாவற்றையும் கொட்டிவிட்டு அவள் தன் கணவனிடம் ஏக்கத்துடன் ஒரு கேள்வி கேட்டாள். இப்பொழுதும் நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா? என்னை முழுவதுமாக நம்புகிறீர்களா? இன்னும் நான் உங்கள் மனைவி என்ற எண்ணம் இருக்கிறதா? உண்மையை சொல்லுங்கள் அக்‌ஷை?

அக்‌ஷை சிறிதும் யோசிக்காமல் அழுத்தம் திறுத்தமாக அவளுக்கு விடையளித்தான். ஆமாம் இன்னும் உன்னை நான் நேசிக்கிறேன். உன்னை முழுவதுமாக நம்புகிறேன். நடந்ததில் உன் தவறு எதுவும் இல்லை. இது இயல்புதான். நீ என் மனைவி என்றும் என் மனைவி. i love you forever டா செல்லம்.

அக்‌ஷை, இனிமேலும் என்மேலுள்ள அன்பு குறையாமல் இருக்குமா?

இன்னும் அதிகமாகும் கவலைப்படாதே. கடந்தகாலம் கடந்து போய்விட்டது. நிகழ்காலமே நிஜமானது.

அக்‌ஷை, நான் என் கடந்தகாலத்தை பற்றி பேசுவது உங்கள் இதயத்தை புண்படுத்தவில்லையா?

அக்‌ஷை அழகாக புன்னகை செய்துவிட்டு சொன்னான். நாம் சராசரி மனிதர்கள். மனித உணர்ச்சிக்கு கட்டுப்பட்டவர்கள். அதனால் கொஞ்சமே கொஞ்சம் துன்புறுத்தத்தான் செய்கிறது. இருந்தாலும் என் தான்யா என்னிடம் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்ற ஆசை அதை ஆற்றிவிடுகிறது. அதுமட்டுமல்ல நீ என்னிடம் எல்லாவற்றையும் கொட்டிவிட்டால் இரவில் கண்களை மூடி நிம்மதியாக தூங்கலாம். உன் இதயத்தில் எந்த சலனமும் இருக்காது. அந்த உறக்கத்தை நான் உனக்கு தர விரும்புகிறேன். அது என் கடமை.

அக்‌ஷை சொன்னபடியே தான்யா சிறுகுழந்தைப்போல் சின்னச்சின்னவிஷியத்தையும் அக்‌ஷையிடம் கொட்டிவிடுவாள். தன் நண்பர்கள் பற்றி அவர்களிடம் பேசுவது பற்றியெல்லாம். அக்‌ஷையும் அதை பொறுமையாக கேட்டுக்கொள்வான். தான்யாவும் இரவில் நிம்மதியாக கண்ணுறங்குவாள்.

ஆடி மாதம் முடிந்து தான்யா தன் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் பெற்றோர் பற்றி அன்புடன் அவன் நலம் விசாரித்தான்.

அக்‌ஷை, உங்ககிட்ட ஒரு உதவி கேட்கலாமா?

கணவன் கிட்ட உதவி கேட்ட முதல் மனைவி நீ சரி சொல்லு என்ன உதவி?

அக்‌ஷை நான் மேலே படிக்கனும்னு விரும்புகிறேன் அப்லீகேஷன் கூட வாங்கிட்டேன் ஆனா 40,000 fees  கேக்குராங்க. எனக்கு கடன் இல்லனா லோன் sponser ஏற்பாடு பண்ண முடியுமா?

உன் மனசுல நீ என்னடி நெனச்சிட்டு இருக்க? என்னை பார்த்தால் எப்படி தெரியிது உனக்கு? நான் இருக்கும்போதே கடன் லோன் பேசுர? அது மட்டுமில்லாம உனக்காக நான் இந்த சின்ன விஷியத்த கூட பன்ன கூடாதா? அதுக்கு கூடவா எனக்கு உரிமை இல்ல?

அது இல்ல அக்‌ஷை நாம இந்த ஒரு மாதமாதானே பழகுகிறோம். அதுக்குள்ள எதுக்கு உங்களுக்கு இவ்ளோ கஷ்டம்? அதோட நான் யார்கிட்டையும் பணவுதவி வாங்கமாட்டேன்.

ஓஹோ அப்போ கடன் குடுக்குறவங்கள உனக்கு ரொம்ப தெரியுமா? இதோ பார் உனக்கு நாந்தான் கட்டுவேன் வீண்விவாதம் எதற்கு?

இதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்கமாட்டேன் அக்‌ஷை. இத இதோட விட்டுட்டு சாப்பிட வாங்க. அதை நானே பாத்துக்குறேன்.

எனக்கு சாப்பாடும் தேவையில்லை ஒன்னும் தேவையில்லை. நீ போய் உன் வேலைய பாரு. நீ சரினு சொல்றவர என்கிட்ட பேசாத. நானும் பேசமாட்டேன்.

இருவருமே இரவு சாப்பிடவில்லை. அக்‌ஷை பேசாதது அவளை வருத்தியது. அவனிடம் தோற்றுவீட்டாள். அவனே பணம் கட்டுவதற்கு ஒப்புக்கொண்டாள்.

சொன்னபடி அக்‌ஷை அவளுக்கு பணம் ஏற்பாடு செய்து அவளை படிக்கவைத்தான். படிப்பில் ஏற்படும் சந்தேகங்கள் ப்ராஜக்ட்னு எல்லாம் விஷியத்திலும் துணை இருந்து தேற்சிபெற வைத்தான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.