(Reading time: 34 - 67 minutes)

பிறகு ஒருநாளிள்தான் அவன் தன் பைக் விற்று பணம் ஏற்பாடு செய்துவிட்டு இப்போது பேருந்தில் செல்கிறான் என்று தெரிந்தது. அந்த பைக் அவன் நெருக்கமானது என்று அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. அவள் அதற்காக அவனோடு சண்டைப்போட்டாள்.

ஒரு பைக்தானடா வாங்கிட்டா போச்சி இதுக்கு ஏன் கோபம்? நீதான் எனக்கு முதலில் அப்புறம்தான் எல்லாம்.

அக்‌ஷை நான் வேலைக்கு போனதும் முதல் சம்பளத்தில் ஒரு பைக் புக் பன்னி வாங்கனும் எல்லா டியூ நாந்தான் கட்டுவேன் சரியா?

அப்படியா? அப்போ இப்பவே நான் எது விலை உயர்ந்த பைக்னு பாத்துக்குறேன்மா ஒகேவா? நீ என்ன செஞ்சாலும் எனக்கு ஓகே டா. உன் சந்தோஷம்தான் முக்கியம் எனக்கு.

2 மாதங்களில் தான்யா ஒரு தனியார் நிறுவணத்தில் வேலைக்கு சேர்ந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நல்ல சம்பளம். முதல் சம்பளத்தில் அக்‌ஷைக்கு பைக் வாங்கி குடுத்துவிட்டாள். நிறைய மனவுளச்சள்களும் இருக்கும். எல்லாவற்றையும் அக்‌ஷையிடம் ஒப்பித்துவிடுவாள்.

அக்‌ஷையும் அவளின் சூழ்நிலை காரணமாக அவளிடம் இலகுவாக நடந்துகொள்வான். வேலையை பற்றி தினமும் விசாரிப்பான். தான்யாவின் முதலாலி மனிதநேயம் மிக்கவர் அன்பானவர். அதனால் அவரிடம் என்ன உதவி கேட்டாலும் முடிந்தவரை செய்வார். தான்யாவிற்கும் அப்படித்தான்.

அவள் இன்னும் நன்றாக வேலை செய்ய்யவேண்டுமென்று அன்பளிப்பு பணம் தருவது. ஒரு சின்ன வேலையை செய்தாலும் அதாவது அவருக்கு பிடித்ததுபோல சிறப்பாக செய்தால் பணம் கொடுப்பது. இப்படி.

இதுயெல்லாம் தான்யாவிற்கு பயத்தை தந்தது. தான்யா அக்‌ஷையிடம் சொன்னாள்.

அக்‌ஷை, என் முதலாலி எனக்கு பணம் குடுப்பதும் அன்பாக பழகுவதும் நினைத்தால் எனக்கு பயமா இருக்கு. உங்களுக்கு என்மேல் நம்பிக்கையின்மையோ சந்தேகக்கோட்டையோ போட்டுவிடுமோ என்று.

எனக்கு உன்மேல் என்றும் நம்பிக்கை குறையாது சந்தேகமும் வராது. இதுலாம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உனக்கு சங்கடமாக இருந்தால் நீ அவரிடம் சொல்லிவிட்டு தவிர்த்துவிடு. எனக்கு சம்பளம் மட்டும் போதும் என்று சொல்லிவிடு.

அதுமட்டுமில்லை அவர் உன் முதலாலி நீ அவரிடம் வேலை செய்யும் ஊழியர். இதை தாண்டி உங்கள் இருவருக்கும் எந்த உறவும் இல்லை. இதை நினைவில் வைத்து பழகினால் உனக்கு எந்த பிரச்சனையும் வராது டா. கவலைப்படாதே. என்று அவளை தேற்றினான்.

அவளின் மனவுளச்சல் முற்றிவிட அவள் சக ஊழியர்களோடு சண்டை போட்டுவிட்டு அக்‌ஷையிடம் கேட்காமலே வேலையை ராஜினாமா செய்துவிட்டாள். அப்போது அமைதியாக இருந்த அக்‌ஷை அதை வேறுகோணத்தில்  சரி செய்தான்.

ஒருநாள் அக்‌ஷை நீண்டநேரம் தன் நண்பனிடம் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான். பொறுத்துப்பொறுத்து பார்த்த தான்யா ஒரு கட்டத்தில் பொறுமை இழந்துவிட்டாள். அவள் சீறியெழும் முன் அக்‌ஷை காலை துண்டித்துவிட்டான். அவளின் கோபம் வார்த்தைகளாய் வெடித்தது.

உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கிங்க அக்‌ஷை, நான் ஒருத்தி இங்க இருக்கிறது தெரியிதா இல்லையா? கொஞ்சநாளா என்கிட்ட சரியா பேசுறது இல்ல. எப்பவும் நண்பர்கள்தான். அவங்கதான் முக்கியம்னா என்னை எதுக்காக கல்யாணம் பன்னீங்க? மனசாட்சி இல்ல? எதுக்காக இப்படி brutal behaviour உங்களுக்கு பிடிக்கலனா என்னை அனுப்பிடுங்க நான் போறேன் இப்படி அவமானப்படுத்தாதீங்க புரியிதா?

போதும் நிறுத்துடி. என்னது? மனசாட்சி  அது இதுனு  வாய் மட்டும் பேசுர? ஆனா எனக்கு சரிசமமா புத்தகம் நடைமுறை அரசியல் வரலாறுனு 4 விஷியம் கலந்து விவாதிக்க முடியுமாடி உன்னால? இதுவர இங்க வந்து என்ன செஞ்சி கிழிச்சிட்ட? எப்பவும் காதல் கனவு கல்யாணம் கத்திரிக்காய். சாப்பிடனும் வேல செய்யனும் தூங்கனும் என்கிட்ட பேசனும். இதத்தவிர வேற என்னடி தெரியும் உனக்கு? தனியா ஒரு பிரச்சனைய எதிர்த்து போராட தெரியுமா? இப்போ சொல்றேன் நீ எனக்கு பொறுத்தம் இல்லாத மனைவி. மனதில், ரசனையில் உனக்கும் எனக்கும் எந்த பொறுத்தமும் இல்லடி. நான் என் விருப்பம் போலத்தான் இருப்பேன் நீ உன் வேலைய மட்டும் பார்த்தா போதும் போ.

அதற்குமேல் அவள் அக்‌ஷையிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் பேசிய எதுவும் அவள் மனதில் பெரிதாகப்படவில்லை. நீ எனக்கு பொறுத்தமில்லாத மனைவி அந்த வார்த்தை மட்டுமே அவள் இதயத்தில் எதிரொலித்தது. ஒருநாள் இதே வாய்தானே என்னை பொறுத்தமானவள் என்று பாராட்டியது. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.. தன் மனைவியை இப்படி காயப்படுத்திவிட்டோமே என்று அக்‌ஷையும்ம் உள்ளூற வருந்தினான்.

அன்று தான்யா ஒரு முடிவு செய்தாள்.  தன் கணவனுக்கு பொறுத்தமானவளாக மாறவேண்டும் என்று நினைத்து புத்தகம் படிக்க தொடங்கினாள். பேச்சாளர்களின் உரைகளை கேட்டாள். கதை கவிதை காமெடி வரலாறு போன்றவற்றை படித்தாள். அவளின் பெரும்பாலான நேரத்தை படிப்பதற்காகவே செலவு செய்தாள். இரவும் பகலும் இல்லாத புத்தகங்களை கூட வாங்கி படித்தாள். அக்‌ஷையிடம் அதை பற்றி கலந்தாலோசித்தாள்.

அக்‌ஷை நினைத்ததுபோலவே அவள் இதயம் பக்குவம் அடைந்தது. மனவுறுதி கிடைத்தது. செய்த தவறும் புரிந்தது. இனி வாழ்க்கையில் என்றும் இப்படி ஒரு தவறு செய்யக்கூடாது என்னும் முடிவுக்கு வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.