(Reading time: 8 - 15 minutes)

வள் கவனத்தை அதிகம் கவர்வது புகைப் படங்களுடன் கூடிய சமையல் புத்தகம். ஒருமுறை பெரிய போட்டோ ஆல்பம் போன்ற சமையல் புத்தகத்தை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தவள், சில படங்களின் குறிப்பை மட்டும் மேலோட்டமாக பார்வையிட்டு மூடி வைத்தாள்.

அந்த புத்தகத்தை ஒரு கை இழுத்தது. அவள் பார்த்துக் கொண்டிருந்த படத்தைக் காட்டி “இந்த உணவு உங்களுக்கு சாப்பிட பிடிக்குமா...?”, எதிரே அவன். அவளுக்கு சிவா ஞாபகம் வரவில்லை. “ஏன் இப்படி கேட்கிறான்...?”, அவளுக்கு விநோதமாக பட்டது.

கவிதை புத்தகம் ஒன்றை எடுத்து ஏதோ ஒரு பக்கத்தை திருப்பி படிக்க ஆரம்பித்தாள். அவன் அந்தப் பக்கத்தை எட்டிப் பார்த்தான். அவள் மூடி வைக்கவும், அதை தன் பக்கம் இழுத்து, அதே பக்கக் கவிதையை அவனும் பார்வையிட்டான்.  

“ஏன் இப்படி நான் படித்ததையே இவனும் படிக்கிறான்...?என்னை கேலி செய்றானோ...?”, அந்த இடத்திலிருந்து ஆராய்ச்சி கட்டுரைகள் இருக்கும் பிரிவுக்குள் நுழைத்தாள். ஆராய்ச்சி முதல் அனுபவம் என்பதால், அவளுக்கு எப்படி தேடலைத் தொடர்வது எனத் தெரியவில்லை.

இரண்டு நிமிடம் எதையும் தேடாமல் ஒரே இடத்தில் நின்று யோசித்தாள். “என்னங்க, என்ன தலைப்பில் வேணும்னு சொன்னா நான் எடுத்துத் தாரேன்...”, அங்கும் அவன் வந்து விட்டான்.  

“”இவன் செய்வது உதவியா...உபத்திரவமா...?”, தேடுவதை நிறுத்தி விட்டு வெளியேறினாள். அவனால் ஒரு வாரம் நூலகம் போகாமல் “மறுபடியும் அங்கு வந்து விடுவானோ...?”, எனத் தவிர்த்தவள், அவசியம் ஏற்படவே சற்று தயக்கத்துடன் வந்தாள்.

அவன் அங்கு வரவில்லை. பாட சுமையில் அவனை மறந்து விட்டாள். ஒருவழியாக மேற்படிப்பு முடிந்து விடுதி மாணவர்கள் ஒவ்வொருவராக தங்கள் உடைமைகளோடு வெளியேறிக் கொண்டிருந்தனர்.

நயனா “நானும் ரெண்டு நாள்ல இங்க இருந்து கிளம்பனும்...”, யோசித்துக் கொண்டே படிப்பை முடித்த களைப்பில் மெதுவாக விடுதி நோக்கி நடந்தாள்.  “என்னங்க, உங்க கூட கொஞ்சம் பேசணும்...” சிவா கையில் பைகளோடு நின்றிருந்தான்.

“நான் பேசி முடிக்கும் வரை நீங்க போகக் கூடாது...”, அந்த நிபந்தனையும், அவன் நின்றிருந்த விதமும், அவளை அந்த இடத்தில் நிறுத்தி வைத்தது. அவன் கண்கள் மிகவும் பாவமாகப் பார்த்தது. முன்பிருந்த புன்னகை இப்போது அவனிடம் இல்லை.

வாழ்க்கையைப் பற்றி ஏதேதோ பேசினான். அவளுக்கு எதுவும் புரியவில்லை. அந்த இடத்தை விட்டு செல்வதே அவள் குறியாக இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். அவன் பேச ஆரம்பித்து இருபது நிமிடம் ஆகியிருந்தது.  

“வெளி உலகம் நாம நினைக்கிற மாதிரி இல்லங்க. இப்ப போயிட்டோம்னா, அப்புறம் ஒன்னும் பண்ண முடியாதுங்க. யோசிச்சு சொல்லுங்க. ரெண்டு வருசமானாலும் காத்திருக்கேன். எந்த தொந்தரவும் தர மாட்டேன். அட்ரஸ் மட்டும் கொடுங்க...”, அவள் பதிலை எதிர்பார்த்து நின்றான்.

“நான் போகணும். எனக்கு ரொம்ப பசிக்குது. லேட்டா போனா சாப்பாடு தீர்ந்திடும்...”, எங்கேயோ பார்த்து திமிராக பதில் தந்தாள். எதிர்பார்க்காத இந்த வார்த்தைகள் அவனை பலமாக தாக்கியிருக்க வேண்டும்.   

“உங்களுக்கு கடைசி வரைக்கும் கல்யாணமே ஆகாது....!! இப்படிதான் எப்பவும் இருக்கப் போறீங்க...!!!”, சாபமாக வார்த்தைகள் வெடித்தன.

அதே வேகத்தில், அவன் குரல் கம்மியது....கண்களில் கண்ணீர் பெருக ஆரம்பித்தது. எதுவும் பேசாமல் கல்லூரி வெளிவாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  

முயற்சி தோற்றுப் போனதால் அவன் நடை தளர்ந்தது. கல்யாணம் என்ற நிகழ்வு குறித்து வெறுப்பும், அச்சமும் இருந்ததால், அவன் கண்ணீரோ, சாபமோ அவளுக்கு பரிதாபத்தையோ, கோபத்தையோ உண்டாக்க வில்லை.

அவன் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவள் “நல்ல வேளை. போயிட்டான். இனிமேல் இவனால் எந்த தொல்லையும் இருக்காது...”, நிம்மதியாக  அந்த இடம் விட்டு நகர்ந்தாள்.

இரண்டடி எடுத்து வைத்தவள் ஏனோ தன்னையும் அறியாமல் ஒருமுறை அவனை திரும்பிப் பார்த்தாள். கைகளால் அவன் கண்ணீரை துடைத்துக் கொண்டே செல்வது தெரிந்தது.

நயனா மனதில் இப்போது இனம் புரியாத ஒரு வலி....எதையோ பறிகொடுத்தவள் போல் வெறுமை....யாருக்காக....? எதற்காக...? காரணம் அறியாமல் அவள் நடையும் தளர்ந்தது.   

“எந்தப் புள்ளியில்...எந்த கணத்தில் அவன் விலகிச் சென்றானோ, அந்தப் புள்ளியில்...அந்த கணத்தில்...அவள் மனதில் காதல் துளிர்விட்டதோ...? கொண்ட நேசம் உண்மை என்றால், அவன் தந்த சாபம் பலித்து விடுமோ...?”, கேள்விகளோடு நயனா உள்மனம் அவளுக்குத் தெரியாமல் அதற்கான விடையை தேடிக்கொண்டிருந்தது.

எல்லாம் அறிந்த காலமோ, விடையை தன்னுள் ரகசியமாக வைத்துக் கொண்டு நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

உன் பிரிவில் அழுவது நானாக கண்கள் சொல்லும்...!

என் உருவில் அழுதது நீயாக காலம் சொல்லும்...!

விலகிச் சென்றாலும் சிவா மனதளவில் நயனாவுடன் பேசி கொண்டிருக்கிறான்...!!!

 

This is entry #43 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி / கல்லூரி நாட்கள்

எழுத்தாளர் - அமுதா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.