(Reading time: 9 - 17 minutes)

2017 போட்டி சிறுகதை 87 - கணவனின் மறுபக்கம் - ஸ்ரீ

This is entry #87 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்

எழுத்தாளர் - ஸ்ரீ

Husband

ரவு எட்டு மணி வேலை முடிந்து ஓய்ந்து வந்து வரவேற்பரையின் சோபாவில் தலைசாய்ந்து அமர்ந்தான் நிதின்..டீவி அதன் போக்கில் அலறிக் கொண்டிருக்க யாரையும் காணவில்லை..இருந்த தலைவலியில் ரிமோர்ட்டை எடுத்து அதை அணைத்துவிட்டு உள்ளே குரல் கொடுத்தான்..விது குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வா..ஐந்து நிமிடம் ஆகியும் பதில்லாமல் போக உள்ளே டைனிங் ஹாலை நோக்கிச் சென்று தண்ணீர் பாட்டிலை கையிலெடுக்க சமையலறையிலிருந்து அவன் அன்னை வந்தார்..

அம்மா இங்கதான் இருக்கியா??தண்ணி கேட்டேன்ல எடுத்துட்டு வந்துருக்கலாம்ல??

ஏன் உன் ஆசை பொண்டாட்டி என்ன பண்றா??புருஷன் கூப்டுறதுகூட கேக்காம அப்படி என்ன தலைபோற காரியம் பண்றா??

ஆரம்பிச்சுட்டீங்களா??என்னடா பத்து நாளா வீடு அமைதியாயிருக்கேநு பாத்தேன்..உங்க ரெண்டு பேருக்கும் வேறவேலையேயில்ல..

ஆமாடா நா தான் எத சொல்லி சண்டை போடலாம்நு காத்திட்டு இருக்கேன் ம்ம் எல்லாம் என் நேரம் என் பொண்ணு அப்போவே அவ வீட்டுக்கு வந்துரு நா பாத்துக்குறேன்னு சொன்னா கேட்டனா??என் புள்ளையோடதான் இருப்பேன்னு வீராப்பா சொல்லிட்டு வந்தேன் பாரு எனக்கு இது தேவைதான்..உன்ன எப்படிலா கஷ்டப்பட்டு வளர்த்திருப்பேன் இப்போ என்னடானா என்னையே கேள்வி கேக்குற அளவுக்கு பெரிய ஆளாய்ட்டல..ரொம்ப மாறிட்டடா நீ..

அய்யோ அம்மா தயவுசெஞ்சு விட்டுரு ஏற்கனவே தலைவலி உயிர் போகுது என்றவாறே தன் அறைக்குச் செல்ல அங்கு அறை விளக்கு கூட போட படாமல் இருட்டாயிருக்க அதை ஆன் செய்தவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தாள் விது எனும் வித்யா..

அவளிடம் பேச்சு கொடுத்தால் இப்போதைக்கு முடியாது என உணர்ந்து கண்டும் காணாதது போல் உடைமாற்றி அதற்குள் வந்த ஆபீஸ் போனை முடித்துவிட்டு வருவதற்குள் அடுத்த போர்களத்தை ஆரம்பிக்க தயாராக இருந்தாள் அன்பு மனைவி..

ஏன் இப்படி இருக்கநு கூட கேக்க முடிலல உங்களால??ரொம்ப மாறிட்டீங்க நிதின் நீங்க லவ் பண்ணப்போ இருந்த அன்புலா இப்போ கொஞ்சம்கூட இல்ல..என கண்ணை கசக்க

ஆமாடீ நீங்க ரெண்டு பேரும் அடிச்சுகிட்டு என்ன சொல்லுங்க..அடச்சே மனுஷனுக்கு நிம்மதிங்கிற ஒண்ணு கிடைக்கவே போறதில்ல..என்னவோ பண்ணித் தொலைங்க என விறுவிறு என்று மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டான்..

கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே இது வாடிக்கையாகிபோன ஒன்றுதான்..நிதினின் கல்லூரியில் அவனின் ஜுனியர் பேஜ் தான் வித்யா..ஐந்து ஆண்டுகால காதலை இருபுறமும் போராடி ஒரு வழியாய் கல்யாணத்தில் இணைப்பதற்குள் அவர்கள் பட்டபாடு அவர்கள் மட்டுமே அறிந்தது..நிதின் சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் அவன் தாய் தான் அவனின் உலகம்..இருப்பினும் வித்யா அவனின் உயிர்..அவனுக்காக அவள்பட்ட துன்பங்கள் ஏராளம்..வித்யா மிகவும் அமைதியானவள் அவன் அவளை விரும்ப ஆரம்பித்ததற்கு காரணமே அந்த அழகான அமைதி தான்..

திருமணம் முடிந்து வந்த கொஞ்ச நாட்கள் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது..அவளும் அளவுக்கு அதிகமாய் பேசமாட்டாள் ஆதலால் அவன் அன்னையும் தேவையற்ற பேச்சுகளை வளர்க்க மாட்டார்..ஆனால் நாள் ஆக ஆக எங்கிருந்து ஆரம்பித்த பிரச்சனை என்று அவனால் சொல்ல முடியவில்லை..எதாவது ஒரு காரணத்தை கொண்டு வித்யாவை திட்டிக் கொண்டேயிருப்பார்..அவளும் முடிந்தவரை அமைதிக் காத்து இருந்து சில நேரங்களில் அவளையும் அறியாமல் ஓரிரண்டு வார்த்தை பேசிவிட அடுத்து அதிலிருந்து தொடங்கும் புதிய சண்டை..நிதின் வீடுக்கு வந்தவுடன் அம்மா ஒருபுறம் மருமகளை வசைபாடுவார் என்றால் மறுபுறம் மனைவி தன் ஆற்றாமையை அழுது தீர்ப்பாள்..இருவருக்கும் இடையில் மாட்டி முழிப்பதே இவன் வேலை..தனிமையில் அமர்ந்திருந்தவானுக்கு பேஸ்புக்கில் தான் படித்த மீமிஸில் ஒன்று நினைவு வந்தது.,

மாமியார் மருமகள் சண்டையில்

அம்மா பக்கமும் இல்லாமல்

மனைவி பக்கமும் இல்லாமல்

பீரோ பக்கம் நிற்பவனே நல்ல குடும்பஸ்த்தன் ஆகிறான்..”

அந்த நிலையிலும் அவனை மீறி சிரிப்பு வந்தது..இதற்கு முடிவு தேடித் தேடி விடைக் கிடைக்காமல் இருப்பதுதான் மிச்சம்..தன் அம்மா இதுபோல் இருப்பவர் இல்லையே ஏன் இப்படி இருக்கிறார் சொல்லப் போனால் பாதி நேர பிரச்சனையை துவக்குவதே அவராகத் தான் இருக்கும்..என்ன செய்யலாம் என வானத்தை பார்த்து சிந்தனையிலிருந்தவன் அருகில் அரவம் கேட்டு திரும்ப கையில் சாப்பாடோடு வந்து நின்றாள் விது..

இந்தாங்கப்பா சாப்டுங்க..

மறுப்பேதும் கூறாமல் அதை வாங்கிக் கொண்டவன் சாப்பிட ஆரம்பித்தான்..

நீங்க எதையும் போட்டு மனசை குழப்பிக்காதீங்க வீடுனா இதெல்லாம் இருக்கத்தான் செய்யும் சாப்ட்டு வந்து படுங்க என்றவாறு கீழிறங்கிச் சென்றாள்..அவனுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை எப்படி திடீர்நு இவ்ளோ நார்மலா பேசுறா..என்னடா நடக்குது இங்க என்ற ரீதியில் மைண்ட் வாய்ஸ் பேச சரி ப்ரச்சனை முடிஞ்சா சரி என்றவாறு உறங்கச் சென்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.