(Reading time: 14 - 27 minutes)

2017 போட்டி சிறுகதை 88 - தர்மபத்தினி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

This is entry #88 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்த்தன. இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும்போதே வலித்தது.. வேதனையை மறைக்க எண்ணி தாக்ஷி, விழிகளை மூடிக்கொண்டாள், அந்த கணப்பொழுதில் மண்டபமே அதிர மேளம் கொட்டியது, மா அரிசியும், மங்கலவாத்தியங்கள் முழங்க, அந்த மங்கலக்கயிற்றை தருமன் அவள் கழுத்தில் கட்டினான். இருவர் கைகளும் ஒரு சிறிய மஞ்சள் துணியில் பிணைக்கப்பட்டது.

“மெதுவா இரண்டு பேரும் எழுந்து அக்னியை வலம் வாங்கோ”, திருமண சடங்கை நடத்திய ஐயர் கூறியதும் அனிச்சையாக அழுந்து தருமனின் பின்னால் நடந்தாள் தாக்ஷி. அவனது கைகளில் இளம் சூடுபரவியிருந்தது, பஞ்சுபோன்ற அந்தக் கைகளை பற்றியவனுக்கு, முதன்முறையாக இதயத்தின் கதவுகள் திறந்துக்கொண்டது. இவள் என் மனைவி, என்னுள் நிறைந்தவள் என்ற எண்ணம் மேலிட, அந்தக் கைகளை அழுத்திப்பிடித்துக்கொண்டான், அந்த தொடுதலில் காதலும் உரிமையும் இன்னும் ஏதேதொ இருக்கத்தான் செய்தது... அதை உணர்ந்ததுபோல் அந்த முரட்டுக்கரத்தின் அழுத்ததில் கனிந்து அவள் உடல் நடுங்கியது.. தீப வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்த்தவன் அதிர்ந்து போனான். என்ன ஒரு பிரமிக்கும் அழகு, பொன்னிற மேனி, ஐந்தேகாலடி தான் உயரம் எனினும் சேலையில் பூரித்திருந்த அழகும், மணமகளுக்கான அலங்காரமும் இணைந்து அவளை தேவதையாகக்காட்டியது. ஆம், அவள் தருமனுக்காக பூமியில் பிறந்த தேவகண்ணிகை தான்... அவன் மனம் பூரித்தது.

திருமண சடங்குகள் முடிந்து, மணமக்கள் இருவரும் பெண்ணின் பிறந்த வீட்டிற்குள் நுழைந்தனர், தாக்ஷியின் அம்மா பூர்ணா ஆலத்தி தட்டுடன் வரவேற்றாள். காலையில் நடந்த களேபரமும், அதன் பின் நடந்த மகளின் திருமணமும் அவளுக்கு மனச்சோர்வை அளித்திருந்தது. ஆலத்தி எடுத்துவிட்டு, தருமனின் நெற்றியில் திலகமிடும்போதுதான் அவனை முழுமையாக பார்த்தாள் பூர்ணா.. அவரையே உரித்து வைத்திருக்கிறான், அவள் உள் மனம் சொல்லியது. ஆறடிக்கு மேல் உயரம், நல்லக் கருப்பு தாக்ஷி அவனைத்தொட்டு கண்ணுக்கு மையிடலாம், கம்பீரமான ஆண்மகன், வைரம் பாய்ந்த உடலில் பட்டு வேட்டி சட்டையில் நிமிர்ந்து நோக்கிய அந்தக் களையான முகமும், தன் வார்த்தைக்கும் உறவிற்கும் மதிப்புக் கொடுத்து அவன் நடந்த விதமும் அவன் உள்ளத்து அழகையும் அவனது நல்லப் பண்புகளையும் ஒருசேர உணர்த்தியது. அதை உணர்ந்த பூர்ணாவுக்கு, தருமன் மட்டுமே தாக்ஷிக்கு சரியானப் பொருத்தமென தோன்றியது. தாக்ஷியின் வாடிய முகம் அவள் கனவுகள் சிதைந்ததற்கான மனச்சோர்வை பிரதிபலித்தது. வீட்டுக்குள் வந்து இயந்திரகதியில் பாலையும் பழத்தையும் விழுங்கிவிட்டு தன் அறைக்குள் போய் முடங்கிக்கொண்டாள் தாக்ஷி. இதை ஒருவாரு எதிர்பார்த்த தருமன், தன் கண்களைச்சுழற்றி வீட்டை பார்வையிட்டான்.

கிழக்கு கடற்கரையில் அமைக்கப்பட்ட காலனி வீடுகள், மொத்தம் மூன்று அறைகள் மற்றும் வரவேற்பறை. வரவேற்பறையின் சோபாவில் சாய்ந்த தருமனின் கண்களில் தாக்ஷியின் புகைப்படம் விழுந்தது, ஒரு முயல் குட்டியை கொஞ்சியபடி நாகரீக ஆடையில் புன்னகைத்துக் கொண்டிருந்தவளை, பார்த்ததும் அவளை அள்ளி அனைக்கும் தாபம் மேலிட கண்களை மூடிக்கொண்டான். ஆனால் அந்த மகரந்த முகம் அவன் இதயத்தில் விரிந்துக்கொண்டது.

தாக்ஷியின் அறைக்கதவை திறந்துக்கொண்டு பூர்ணா உள்ளே நுழைந்தாள், படுக்கையில் குப்புற படுத்து விசும்பிக்கொண்டிருந்த மகளின் முதுகை மெதுவாக தடவினாள், “தாக்ஷி, அம்மாவப்பாரு, அழக்கூடாது.. இன்னிக்கு மங்கல நாள்.. உன் வாழ்கையோட ஆரம்பமே இன்று தான், இங்க பாரு..மாப்பிள்ளை உன்ன இன்னிக்கே ஊருக்கு அழைச்சுட்டு போறத சொல்றாரு..”

தாக்ஷி விருட்டென்று எழுந்து பூர்ணாவின் முகத்தைப் பார்த்தாள், அதிலிருந்த கோபம், வெறுப்பு அனைத்தையும் உணர்ந்து கொண்ட பூர்ணா மேலும் தொடர்ந்தாள், “ஆனா, அப்பா அதுக்கு ஒத்துக்கிடல டா, முறைப்படி சாந்தி முகூர்த்தம் நம்ம வீட்டில் தானே நடக்கனும், நாளைக்கு முறைப்படி மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லலாம்னு அப்பா சொல்லிட்டாரு, இங்கப் பாரு இந்த அறையை அலங்கரிக்கனும், நீ எழுந்து முகம் கழுவி அலங்காரம் பண்ணிக்கோ, மாப்பிள்ளைக்கு என்ன ஏது வேனும்னு கேட்டு கொடு”.

அழுகையை நிறுத்திவிட்டு வெறித்துப் பார்த்தாள் தாக்ஷி, தீப்பிழம்பாக பொங்கிக்கொண்டிருந்த அவளோட இதயம் வெடித்து வார்த்தைகள் அக்னிகனலாக சிந்தியது...

“சாந்தி முகூர்த்தமா?, யாருக்கும் யாருக்கும்?”

“ஏன்.. தெரியலையா?, இன்று யார் கழுத்தில் திருமாங்கல்யம் ஏறியதோ அவளுக்கும் அவள் புருசனுக்கும்” அதே அழுத்ததோடு சொன்னாள் பூர்ணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.